என் மலர்

  நீங்கள் தேடியது "5 State Election Results"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ.72.99 ஆகவும் டீசல் விலை 8 காசுகள் குறைந்து 68.10 காசுகளாக உள்ளது. #PetrolPriceHike
  சென்னை :

  பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டது. அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என உச்சத்தை தொட்டது. தொடர் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் இறங்குமுகம் காணப்பட்டது.

  ரூ.86-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் விலை படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82-க்கு விற்பனை ஆனது. 80 ரூபாயை தாண்டி விற்பனையான டீசலும் ரூ.68.26 என்ற அளவுக்கு குறைந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 11-ந்தேதி வெளியாகின.  அதைத் தொடர்ந்து, 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாகத்தான் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது என்றும், இப்போது முடிவுகள் வெளியாகி விட்டதால் அவற்றின் விலை உயரக்கூடும் என்றும் பேசப்பட்டது. இதற்கு மத்தியில், சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் நேற்று முன்தினம் 2 மாதங்களுக்கு பிறகு பெட்ரோல் விலை திடீரென உயர்ந்தது.

  இந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ.72.99 ஆக விற்பனை ஆகிறது. டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து 68.10 காசுகளாக உள்ளது. #PetrolPriceHike 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  5 மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்க மக்கள் விரும்புவதை காட்டுவதாக சிவசேனா கூறியுள்ளது. #ElectionResult2018 #ShivSena
  மும்பை :

  ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

  இந்த தோல்வியை பா.ஜனதாவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, தனது கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் கடுமையாக விமர்சித்துள்ளது.

  அதுபற்றி கூறியிருப்பதாவது:-

  பிரதமர் மோடியும், அமித்ஷாவும் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று சூளுரைத்தனர். ஆனால் தற்போது அவர்கள் ஆட்சி செய்த மாநிலங்களிலேயே பா.ஜனதா இல்லாத காலத்தை அவர்கள் பார்க்கவேண்டிய நிலைமை வந்துவிட்டது.

  தங்களை தவிர்த்து வேறு எந்த கட்சியும் அந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க முடியாது, மக்கள் தங்கள் ஆட்சியை விரும்புகிறார்கள் என்று பா.ஜனதாவினர் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதை தேர்தல் முடிவுகளால் பொய்யாகி இருக்கிறது. வானத்தில் பறந்து கொண்டிருந்த அவர்களை, மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் தரைக்கு இழுத்துள்ளனர்.  இந்த தேர்தல் முடிவுகளால், பா.ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்க மக்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

  ராஜஸ்தானில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டார்கள்.

  மத்திய பிரதேசத்தில் விளைப்பொருட்களுக்கு உரிய விலை கேட்ட விவசாயிகள் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொண்டனர். இதற்கு மக்கள் தேர்தலின் மூலம் பழிதீர்த்துக்கொண்டார்கள்.

  பண மதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்தியது. ஏராளமானோர் வேலை இழந்தனர். பணவீக்கம் அதிகரித்தது.

  ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடியோ உலக அரசியலில் ஈடுபட விமானத்தில் பறந்துகொண்டு இருந்தார்.

  விமானம் இந்தியாவில் தரை இறங்கியதும் நேராக தேர்தலுக்காக பிரசாரம் செய்ய கிளம்பினார். மோடியின் குழந்தைத்தனமான பேச்சுகள் தற்போது அவருக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது.

  இன்றைக்கு நாடு சில தொழில் அதிபர்களால் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிர்வகிக்கப்படுகிறது. மத்திய ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளின் நிர்வாகம் சிதைக்கப்படுகிறது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ElectionResult2018 #ShivSena
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. #Results2018 #CongressLeading
  ஜெய்ப்பூர்:

  தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 90 இடங்களை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், 230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கும், 40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டசபைக்கும் நவம்பர் 28-ந் தேதியும் தேர்தல் நடைபெற்றது.

  119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கும், 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கும் கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தானில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் மீதமுள்ள 199 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

  இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதன்பின்னர் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநிலங்களிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கி உள்ளன.  வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் வெளியான தகவலின்படி காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது. மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக 5 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

  இதேபோல் ராஜஸ்தானில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. காலை நிலவரப்படி பாஜக 7 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 14 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12  தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தது. தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி 4 இடத்திலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. இந்த முன்னிலை நிலவரத்தில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மதியம் 12 மணியளவில் உள்ள முன்னிலை நிலவரத்தைப் பொருத்து வெற்றி தோல்வியை கணிக்க முடியும். #Results2018 #CongressLeading
  ×