பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

அந்தியூரில் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.பயிற்சிக்கான ஏற்பாட்டி னை அந்தியூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் முருகன், மாதேஸா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் லிங்கப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
Published on

அந்தியூர்:

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அந்தியூ ர்ஒன்றி யத்திற்கு ட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடு நிலைப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.

இதில் 130 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

கொேரானா கால கட்டத்தில் மாணவ ர்களின் கற்றலில் இடை வெளி காரணமாக மாணவர்களின் பள்ளி செயல்பாடுகள் குறைந்தது. இதனை ஈடுகட்டும் வகையில், மாணவர்கள் திறனை மேம்படுத்து வதற்காக பல்வேறு உத்தி களை கையாண்டு ஆசிரிய ர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியினை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் ஆய்வு செய்து ஆசிரிய ர்களுக்கு அறிவுரை வழங்கி னார்.

மேலும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் லக்குமி நரசிம்மன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் ராதா கிருஷ்ணன், அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பானுமதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நந்தினி தேவி மற்றும் சிவராமன் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கப்பட்டது.

பயிற்சிக்கான ஏற்பாட்டி னை அந்தியூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் முருகன், மாதேஸா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் லிங்கப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com