search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லிகார்ஜுன கார்கே"

    • கடினமான காலங்களில், மதச்சார்பற்ற கூட்டணிக்காக ஒருமித்த கருத்தைக் கொண்ட கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் உங்கள் தலைமைத்துவம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
    • உங்கள் பரந்த அனுபவமும், நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பும் எங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பிறந்தநாளையொட்டி அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மல்லிகார்ஜூன கார்கே அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த கடினமான காலங்களில், மதச்சார்பற்ற கூட்டணிக்காக ஒருமித்த கருத்தைக் கொண்ட கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் உங்கள் தலைமைத்துவம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. உங்கள் பரந்த அனுபவமும், நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பும் எங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறது. வலிமையான "இந்தியா"வை உருவாக்குவதற்கான உங்கள் முயற்சிகள், நமது மகத்தான தேசத்தை வடிவமைத்த மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான சிந்தனைகளுடன் நம்மை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லட்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • பீகார் தலைநகர் பாட்னாவில் வருகிற 12-ந் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள்.

    பாட்னா:

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போட்டியிட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தலைவர்கள், கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லவும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தை பீகாரில் நடத்த மம்தா பானர்ஜி பரிந்துரைத்து இருந்தார். அதன்படி பீகார் தலைநகர் பாட்னாவில் வருகிற 12-ந் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் 12-ந் தேதி இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

    தற்போது இந்த கூட்டம் 23-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பீகார் துணை முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் இதை அறிவித்தார்.

    நிதிஷ்குமாருடன் இணைந்து பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறுகையில், 'காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளனர்' என தெரிவித்தார்.

    மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின்

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து இந்த தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என தெரிகிறது.

    முன்னதாக எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்தந்த கட்சிகளின் தலைவர்கள்தான் பங்கேற்க வேண்டும் எனவும், பிரதிநிதிகளை அனுப்புவதை ஏற்க முடியாது என்றும் நிதிஷ்குமார் கூறியிருந்தார்.

    அதன்படி இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களே நேரடியாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு உபகரணங்களை அமைக்க வேண்டும்.
    • ரெயில்வேயில் உள்ள காலி பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்?

    புதுடெல்லி:

    ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்திய வரலாற்றில் மிக மோசமான ரெயில் விபத்தாக பாலசோர் ரெயில் விபத்து உள்ளது. இந்திய ரெயில்வேயில் 4 சதவீத வழித்தடங்களில் மட்டுமே 'கவாச்' பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டு இருப்பது ஏன்? ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு உபகரணங்களை அமைக்க வேண்டும். ரெயில்வேயில் உள்ள காலி பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, "ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் ரெயில் விபத்தை சதி எனக்கூறிய பிரதமர் மோடி இப்போது என்ன சொல்லப் போகிறார்" என்று கூறினார்.

    • ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகிறார்கள்.
    • பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்தால் விளக்கம் அளிப்பேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    இந்திய ஜனநாயகம் அச்சுறுத்தலில் இருப்பதாகவும், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் இதில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகிறார்கள்.

    அதேநேரத்தில் ராகுல் காந்தி தான் அப்படி பேசவில்லை என்றும், இது தொடர்பாக பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்தால் விளக்கம் அளிப்பேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார். காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார் என்று திட்டவட்டமாக தெரிவித்தது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் நாளை பேசுவதற்கு நேரம் கேட்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனகார்கே தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு அவர் இதுதொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசுவதற்கு நாளை நேரம் கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தால் அவர் பேசுவார். ஜனநாயகத்தில் எங்களை பேசக்கூட அனுமதிப்பது இல்லை. இதுதான் பிரச்சினையாகும். மைக்கை அணைத்து விடுவார்கள்.

    நாங்கள் எழுப்பும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது.பாதயாத்திரை முடிந்து 40 நாட்கள் கழித்து இப்போது யாரை சந்தித்தீர்கள் என்று கேட்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரையின் போது ராகுலை சத்தித்தனர்.

    எங்களை குறிவைத்து துன்புறுத்துவதற்கான முயற்சி இதுவாகும். எங்களை மிரட்டி பலவீனப்படுத்த விரும்புகிறார்கள். நாங்கள் பயப்படமாட்டோம். பலவீனமும் அடையமாட்டோம்.

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்.

    • உத்தரகாண்ட், நாகாலாந்து, திரிபுரா, அசாம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்பட 13 மாநில காங்கிரஸ் தலைவர்களை மாற்ற திட்டமிட்டுள்ளார்.
    • புதிய தலைவர்களின் கீழ் மாநிலங்களில் புதிய நிர்வாக குழுவை ஏற்படுத்தவும் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசித்து வருகிறார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மல்லிகார்ஜுன கார்கே இதற்காக பல புதிய திட்டங்களையும் வியூகங்களையும் அமல்படுத்த ஆலோசித்து வருகிறார்.

    அதன் ஒருபகுதியாக குஜராத், மராட்டியம், டெல்லி, உத்தரகாண்ட், நாகாலாந்து, திரிபுரா, அசாம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்பட 13 மாநில காங்கிரஸ் தலைவர்களை மாற்ற திட்டமிட்டுள்ளார். புதிய தலைவர்களின் கீழ் மாநிலங்களில் புதிய நிர்வாக குழுவை ஏற்படுத்தவும் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசித்து வருகிறார். புதிய நிர்வாக குழுவில் அனைத்து தரப்பினரும் இடம் பெறச்செய்ய வேண்டும் என்பதிலும் அவர் ஆர்வம் காட்டுகிறார். அதுபோல 9 பொதுச் செயலாளர்களையும் மாற்ற ராகுலிடம் அவர் அனுமதி கேட்டுள்ளார்.

    இவை தவிர மாநில பொறுப்பாளர்களையும் கூண்டோடு மாற்றிவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறார். சோனியா, ராகுல் இருவரும் ஒப்புதல் அளித்த பிறகே புதிய மாநில தலைவர்கள் பட்டியலை கார்கே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சமூக நீதியை காப்பதில் காங்கிரசும் திமுகவும் இணைந்து செயல்படும் என கார்கே பேச்சு
    • அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பு சட்டம் விழுமியங்கள் திமுகவின் அடிப்படையாக உள்ளன.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசியதாவது:-

    என்னை ஒப்பிடுகையில் நீங்கள் இளமையானவர், நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். தமிழ்நாடு எப்போதும் முன்னோடியான மாநிலம், சிறந்த தலைவர்கள், அதிகாரிகள், எழுத்தாளர்களை உருவாக்கிய மாநிலம். தமிழ்நாடு தான் கட்டாய கல்வியை முதலில் கொண்டு வந்தது. சமூக நீதியை காப்பதில் காங்கிரசும் திமுகவும் இணைந்து செயல்படும்.

    தமிழ்நாடு மதிய உணவுத்திட்டம், அனைவருக்கும் கல்வி, தொழில்துறை வளர்ச்சி என அனைத்து திட்டங்களையும் அறிமுகப்படுத்தியதில் முன்னணியில் உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமரான நேரு நாட்டில் அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்த விரும்பியதை மு.க.ஸ்டாலின் பின்பற்றுகிறார். அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பு சட்டம் விழுமியங்கள் திமுகவின் அடிப்படையாக உள்ளன.

    எங்களது திமுக-காங்கிரஸ் கூட்டணி அடுத்த மக்களவைத் தேர்தலிலும் தொடரும் என்பதை இந்த மேடையில் அறிவிக்கிறேன். இக்கட்டான நிலையில் நாடு தற்போது உள்ள இந்த சூழலில் எங்களது கூட்டணி தொடரும். தமிழ்நாடு பாஜகவிற்கு ஒரு இடத்தைக் கூட கொடுக்கவில்லை.

    தமிழ்நாடு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் பாஜக அரசியல் செய்கிறது. நீதித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்திலும் பாஜக தலையீடு செய்து வருகிறது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். மக்களை வேற்றுமைப்படுத்துபவர்களுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். யார் நாட்டை வழிநடத்தப் போகிறார்கள் என நான் தெரிவிக்கவில்லை. அது முக்கியமல்ல. நாம் இணைந்து செயல்பட வேண்டும். பாஜகவிற்கு எதிரான இந்த போராட்டம் முக்கியமானது. நாம் இதில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    • யாராவது உண்மையைப் பேசினாலோ, அதைப் பற்றி எழுதினாலோ அவர்களை சிறைக்கு அனுப்புகிறார்கள்.
    • பிரதமர் அதானிக்காக பணியாற்றுகிறார், ஏழை மக்களுக்காக அல்ல என கார்கே விமர்சனம்

    ராஞ்சி:

    மத்திய அரசின் கொள்கைகள் மக்கள் விரோதமானவை என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாக சென்று மக்களிடையே எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சாகேப்கஞ்ச் மாவட்டம் பாகூரில் காங்கிரஸ் கட்சியின் இந்த பிரசார பயணத்தை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தொடங்கி வைத்தார்.

    இக்கூட்டத்தில் பேசிய கார்கே, பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடியதுடன், நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று குற்றம் சாட்டினார். அவர் பேசியதாவது:-

    பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும் பேச்சு சுதந்திரம் கிடையாது. யாராவது உண்மையைப் பேசினாலோ, அதைப் பற்றி எழுதினாலோ அவர்களை சிறைக்கு அனுப்புகிறார்கள்.

    பிரதமர் நரேந்திர மோடியின் நண்பரான அதானியின் சொத்து மதிப்பு 2019ல் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது, 13 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பிரதமர் அதானிக்காக பணியாற்றுகிறார், ஏழை மக்களுக்காக அல்ல. அதானி குழுமத்திற்கு எல்ஐசி ரூ.16,000 கோடியும், பாரத ஸ்டேட் வங்கி ரூ.82,000 கோடியும் வழங்கி உள்ளது. இந்த விஷயத்தை ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் எழுப்பினார். அது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாதுகாப்பு குளறுபடி காரணமாக ராகுல்காந்தி காரில் ஏறி சென்றார்.
    • உரிய பாதுகாப்பை வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி கார்கே கூறி உள்ளார்

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை காஷ்மீரில் நடந்து வருகிறது. இதற்கிடையே நேற்று யாத்திரை காசிகுண்ட் என்ற இடத்தை அடைந்தபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காஷ்மீர் போலீசாரை காணவில்லை. பாதுகாப்பு குளறுபடி காரணமாக ராகுல்காந்தி காரில் ஏறி சென்றார். யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இந்தநிலையில் ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குளறுபடி குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    ராகுல்காந்தி யாத்திரையில் அடுத்த இரண்டு நாட்களில் பெரும் கூட்டம் சேரும். மேலும் வருகிற 30-ந் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    யாத்திரையில் துரதிர்ஷ்டவசமான பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பிறகு இந்த கடிதத்தை எழுதுகி றேன். இந்த விவகாரத்தில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு ஸ்ரீநகரில் நடைபெறும் யாத்திரை மற்றும் விழா முடியும் வரை உரிய பாதுகாப்பை வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறும்போது, "யாத்திரை முடியும் வரை முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறியுள்ள ஜம்மு-காஷ்மீர் போலீசாரின் அறிக்கையை வரவேற்கிறோம்" என்றார்.

    இந்த நிலையில் இன்று ராகுல்காந்தி யாத்திரை புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் மீண்டும் தொடங்கியது.

    • ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தால் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி உறுதி.
    • அடுத்த முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான கலபுரகிக்கு நேற்று வருகை தந்தார். அவருக்கு கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கார்கே பேசியதாவது:- 


    இமாசல பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. அதுபோல், கர்நாடகத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக கர்நாடகத்தை சேர்ந்த நான் இருந்து வருகிறேன். எனக்கு பெருமை சேர்த்து கொடுக்கும் விதமாக கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் தீவிரமாக இருப்பார்கள். அவர்களை போன்று நம்முடைய தலைவர்களும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்து உழைத்தாலே கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி. நாம் ஒற்றுமையாக இல்லாமல் சட்டசபை தேர்தலை சந்தித்தால், அது மக்களுக்கு செய்யும் துரோகம்.

    எனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று யாரும் இல்லை. அடுத்த முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும். அதுபோல அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும் என்பதையும் மேலிடம் தீர்மானிக்கும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

    • கர்நாடக காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • கர்நாடக காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு :

    அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் நாளை(ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு வருகிறார். இதையொட்டி அவருக்கு கர்நாடக காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பகல் 2 மணிக்கு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் சர்வோதயா மாநாடு நடக்கிறது.

    இதில் கர்நாடகம் முழுவதும் இருந்து அனைத்து மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். இந்த மாநாட்டில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • கட்சியில் இணையாமல் ஜனநாயகத்தை காப்பாற்ற விரும்பும் மக்கள் எங்களுடன் கைகோர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    • காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

    காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-

    இது எனக்கு உணர்ச்சிகரமான தருமணமாகும். தொழிலாளியின் மகனாக, சாதாரண தொழிலாளியான என்னை கட்சியின் தலைவராக்கியதற்காக காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றியை கூறி கொள்கிறேன்.

    நாடு தற்போது பொய் மற்றும் வஞ்சக அரசியலை பார்க்கிறது. பொய் அரசியலுக்கு எதிராக போராடுவோம். கட்சியில் இணையாமல் ஜனநாயகத்தை காப்பாற்ற விரும்பும் மக்கள் எங்களுடன் கைகோர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    காங்கிரசால் நிறுவப்பட்ட ஜனநாயக அமைப்பை மாற்ற இன்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் காங்கிரசின் சித்தாந்தம் இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படையில் உள்ளது. இது கடினமான நேரம் என்பது எனக்கு தெரியும்.

    உள்கட்சி ஜனநாயகம் கொண்ட ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. தேர்தல் அதை நிரூபித்தது.

    ராகுல்காந்தி பாத யாத்திரை சிறப்பானது. இது நாட்டுக்கு புதிய சக்தியை கொடுக்கிறது. காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ராகுல்காந்தி மக்களிடம் நேடியாக பேசுகிறார். பிளவுபடாத இந்தியாவை விரும்பும் மக்களை அவர் திரட்டுகிறார்.

    இவ்வாறு கார்கே பேசினார்.

    • மல்லிகார்ஜுன கார்கே 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
    • 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங். தலைவர் ஆகியிருக்கிறார்.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் மல்லிகார்ஜுன கார்கே 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1072 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆகியிருக்கிறார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கேவை, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    ×