என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அதற்கு பதிலாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறது.
- இரு கட்சிகளும் உட்கார்ந்து பேசுகிற போது பரஸ்பர மாறுதல் என்பது இயற்கையாக நடக்க கூடியதுதான்.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வசம் இருந்த கோவை எம்.பி. தொகுதியில் இந்த முறை தி.மு.க. போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அதற்கு பதிலாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறது.
தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார் என்பதாலேயே கோவை தொகுதியை தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்தீர்களா? ஏன் இந்த மாற்றம்? என்று கேட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பதில் வருமாறு:-
நாங்கள் வெற்றி பெற்ற தொகுதி கோவை என்றால் தி.மு.க. வெற்றி பெற்ற திண்டுக்கல் தொகுதியை தான் எங்களுக்கு தந்தார்கள்.

இரு கட்சிகளும் உட்கார்ந்து பேசுகிற போது பரஸ்பர மாறுதல் என்பது இயற்கையாக நடக்க கூடியதுதான். தி.மு.க. கோவையில் கொஞ்சம் வலுவான வேட்பாளரை இந்த முறை நிறுத்த வேண்டும் என்று பல காரணங்களை சொன்னார்கள்.
அப்போது அண்ணாமலை கோவையில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியாது. ஒரு யூகம்தான். அந்த வகையில் அண்ணாமலை போட்டியிடலாம் என்று நினைத்து கோவையை தி.மு.க. கேட்டிருக்கலாம். எங்களுக்கு திண்டுக்கல் தொகுதியை தி.மு.க. கொடுத்த போது கூட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் தொகுதியை தந்திருக்கிறோம். பலவீனமான தொகுதியை தரவில்லை என்றுதான் சொன்னார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார்.
- மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாற்று அரசியல் களம் கேள்விக் குறியாகவே மாறியுள்ளது.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தேர்தலில் போட்டியிடாமல் புறக் கணித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மேல் சபை எம்.பி. பதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் கமல்ஹாசனின் முடிவு சரிதானா? என்பது பற்றி பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள்.
தி.மு.க.வை விமர்சித்து கமல்ஹாசன் ரிமோட்டை தூக்கி வீசி டி.வி.யை உடைக்கும் பழைய வீடியோக்களை வெளியிட்டும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். அதன் பின்னர் ஓராண்டிலேயே நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசன், 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலையும் தனித்தே சந்தித்தார்.
இப்படி 2 பெரிய தேர்தல்களை மட்டுமே சந்தித்த நிலையில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் கூட்டணி அரசியலை முன்னெடுத்துச் சென்றுள்ளார். தேர்தலில் போட்டியிடாமல் விலகிச் சென்று தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ள கமல்ஹாசன் மற்ற கட்சிகளின் சின்னங்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருக்கிறார்.

தேர்தலில் போட்டியிடாத நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னமான 'டார்ச் லைட்' சின்னம் தேர்தலில் களம் காண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. தி.மு.க.வில் இடம் பெற்றுள்ள மற்ற கூட்டணி கட்சிகளை போன்று மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஒன்று அல்லது இரண்டு இடங்களை பெற்று தேர்தலில் போட்டியிட்டு இருக்க வேண்டும் என்பதே பெரும் பாலானவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் அது போன்று முடிவெடுக்காமல் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடுவதை புறக்கணித்திருப்பதன் மூலமாக மக்கள் நீதி ம்யயம் கட்சியின் எதிர்காலம் என்ன ஆகும்? என்கிற கேள்வியையும் அரசியல் நோக்கர்கள் முன் வைத்து உள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் இணைந்து பாராளுமன்றத் தேர்தலை சந்தித்துள்ள கமல்ஹாசன் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையும் கூட்டணியில் இணைந்தே சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதுபோன்று ஒரு நிலை ஏற்பட்டால் தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை போலவே மக்கள் நீதி மய்யம் கட்சியும் மாறிவிடும் என்றே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியால் அது என்ன நோக்கத்துக்காக (மாற்று அரசியல்) தொடங்கப்பட்டதோ? அதனை எட்ட முடியாத சூழலே எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் கமல்ஹாசன் தனது மாற்று அரசியல் கோஷத்தை கைவிட்டு விட்டு கூட்டணி அரசியலை தொடரவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாற்று அரசியல் களம் கேள்விக் குறியாகவே மாறியுள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
- இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.
- 4-ந்தேதி (வியாழக்கிழமை)-மதுரை, தேனி, 8-ந்தேதி (திங்கட்கிழமை)-சென்னை தெற்கு.
சென்னை:
தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஏப்ரல்-19-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். அதன் விவரம் வருமாறு:-
28-ந்தேதி (வியாழக்கிழமை)-கரூர், ஈரோடு, 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை)-கோவை, பொள்ளாச்சி, ஏப்ரல் 1-ந் தேதி (திங்கட்கிழமை)-திருநெல்வேலி, தென்காசி, 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)-கன்னியாகுமரி, 4-ந்தேதி (வியாழக்கிழமை)-மதுரை, தேனி, 8-ந்தேதி (திங்கட்கிழமை)-சென்னை தெற்கு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு இருவரும் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர்.
- கத்தார் நாட்டுக்கு செல்வதாக கூறி விட்டு இருவரும் கோவையில் பீளமேடு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்ட பிணம் கிடந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த பெண்ணின் உடல் அரை நிர்வாணமாக இருந்தது. முகம் அழுகிய நிலையில் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தது.
போலீசார் விசாரணையில் பெண்ணின் உடல் இருந்த சூட்கேஸ் கோவையில் வாங்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த சூட்கேசை வாங்கியவர் யார் என்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சூட்கேஸ் வாங்கிய நபர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பறவைக்கோட்டை பகுதியை சேர்ந்த நட்ராஜ் (வயது 32) என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
நட்ராஜூக்கு திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். அவர் கத்தார் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அதே நாட்டில் நட்ராஜ் பணிபுரிந்த பகுதியில் தேனி மாவட்டம் முத்துலாபுரத்தை சேர்ந்த சுபலட்சுமியும் (33) வேலை பார்த்து வந்துள்ளார். சுபலட்சுமிக்கு கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். கணவரிடம் விவாகரத்து பெற்று இருந்ததாக தெரிகிறது.
இருவரும் தமிழர்கள் என்ற முறையில் அறிமுகமான நட்பு நாளடைவில் நெருக்கத்தை ஏற்படுத்தியது. வெளிநாட்டில் இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்ததுடன் உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இருவரும் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர். அதன்பிறகு கத்தார் நாட்டுக்கு செல்வதாக கூறி விட்டு இருவரும் கோவையில் பீளமேடு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.
கள்ளக்காதலி சுபலட்சுமி பெயரை நட்ராஜ் கையில் பச்சை குத்தி உள்ளார். கோவையில் கணவன்-மனைவியாக கடந்த ஒரு ஆண்டாக வாழ்க்கை நடத்தி வந்த அவர்களுக்கு இடையே கடந்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த நட்ராஜ் அங்கு கிடந்த கம்பியை எடுத்து சுபலட்சுமியை தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுபலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
உடனே தன்னுடைய நண்பர் கனிவளவனை வீட்டுக்கு அழைத்து நட்ராஜ் நடந்த விவரங்களை கூறியுள்ளார். அவர் உதவியுடன் சூட்கேஸ் ஒன்றை வாங்கி அதில் சுபலட்சுமி உடலை அடைத்துள்ளனர்.
பின்னர் வாடகை கார் ஒன்றை இவர்களே எடுத்தனர். டிரைவர் வேண்டாம் என்று கூறி விட்டு நட்ராஜூம், கனிவளவனும் பெண்ணின் உடல் இருந்த சூட்கேசை காரில் ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து கள்ளக்குறிச்சிக்கு வந்துள்ளனர். உடலை எங்கு வீசினால் கண்டுபிடிக்க முடியாது என்று இருவரும் திட்டமிட்டனர். அதன்படி காரில் 2 நாட்களாக சுபலட்சுமி உடலுடன் சுற்றி திரிந்துள்ளனர்.
அப்போதுதான் ஏற்காடு மலைப்பகுதிக்கு மனைவி, குழந்தைகளுடன் நட்ராஜ் சுற்றுலா வந்தது நினைவுக்கு வந்தது. அங்கு சென்று சுபலட்சுமி உடலை வீசினால் யாரும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்துள்ளார். அதன்படி கடந்த 1-ந் தேதி ஏற்காட்டுக்கு வந்துள்ளனர். அன்று இரவு 40 அடி மலைப்பாதை பகுதியில் சுபலட்சுமி உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை வீசி விட்டு சென்றுள்ளனர்.
போலீசுக்கு பயந்து ஒரு வாரம் சொந்த ஊரான மன்னார்குடியில் இருந்த நட்ராஜ் அதன்பிறகு கோவையில் சுபலட்சுமியுடன் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு வந்ததும், அங்கிருந்து வேலைக்கு சென்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
உடனே போலீசார் நட்ராஜ், அவருடைய நண்பர் கனிவளவன் இருவரையும் கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துக் கொண்டார்.
- 38 எம்.பிகள் ஐந்து ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?
திருச்சியில் அ.தி.மு.கவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.
இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட அதிமுக கூட்டணி தலைவர்களும் பங்கேற்றனர்.
பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. - தி.மு.க. இடையேதான் போட்டி. தமிழ்நாட்டில் மூன்று கூட்டணிகள் உள்ளன.
ஆனால் அ.தி.மு.க. - தி.மு.க. இடையேதான் போட்டி. தி.மு.கவினர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது இல்லை.
மதுரை எய்ம்ஸ் செங்கலை நாடாளுமன்றத்தில் காட்டி அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டியதுதானே. 38 எம்.பிகள் ஐந்து ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?
நீட் தேர்வுக்கு காரணமே தி.மு.க. - காங்கிரஸ் தான். சாதனை, சாதனை என்று கூறினால் போதாது, செய்து காட்ட வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சியில் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தங்கத்தின் விலையை குறைப்பேன் என வாக்குறுதி கொடுக்க திமுக தயாரா ?
- தேமுதிக நியாயத்திற்கும், தமர்மத்திற்கும் துணை நிற்கும்.
திருச்சியில் அ.தி.மு.கவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.
இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட அதிமுக கூட்டணி தலைவர்களும் பங்கேற்றனர்.
அப்போது, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது, கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி. அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். உறுதியாக, இறுதியாக என்றைக்கும் எங்கள் கூட்டணி தொடரும்.
முதலமைச்சராக இருந்த போது, எடப்பாடி பழனிசாமி கொரோனா தொற்று, வெள்ளம் போன்ற சூழ்நிலைகளை சிறப்பாக கையாண்டார்.
சென்னையில் கடந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, தி.மு.க. அரசு அதை சிறப்பாக கையாளவில்லை. நீட் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.கவால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது.
தங்கத்தின் விலையை குறைப்பேன் என வாக்குறுதி கொடுக்க திமுக தயாரா ?
தேமுதிக நியாயத்திற்கும், தமர்மத்திற்கும் துணை நிற்கும்.
இரண்டு நாட்கள் வரை கூட்டணியில் இருக்கிறோம் என நாடகம் நடத்தியவர்கள், தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என கூடாரத்தையே காலி செய்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள்.
ஆனால் தேமுதிக அப்படி கிடையாது. துளசி வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது. துண்ட காணோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்
- இதனையொட்டி கோவை சரவணம்பட்டி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது
பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இதனையொட்டி கோவை சரவணம்பட்டி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநில தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பல்வேறு தேர்தல் வியூகங்கள் குறித்து கட்சியினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது பேசிய அண்ணாமலை, "கோவை ஒரு காலத்தில் மிகவும் குளுமையாக இருந்தது. தற்போது இரண்டு முதல் மூன்று டிகிரிகள் வரை வெயில் அதிகரித்து விட்டது. மாநகரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கவே முடியாத நிலை இருக்கிறது. மக்கள் முகக்கவசங்கள் இல்லாமல் வெளியே வர முடியாத அளவுக்கு தூசி படர்ந்து இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் திராவிட அரசுகள் தான். இதையெல்லாம் மாற்றுவதற்காக மக்கள் பாஜகவை தேர்வு செய்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
கோவையில் வெப்பம் அதிகரிப்பதற்கு திராவிட அரசுகள் தான் காரணம் என அண்ணாமலை பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.
- அரசுப் பள்ளிகளை சேர்ந்த 850 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 9 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- கடந்த ஆண்டை விட 7 ஆயிரம் மாணவர்கள் அதிகம் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை எழுதுவதற்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்பில் சேருபவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற மே 5-ந்தேதி நடக்கிறது.
இதையடுத்து நீட் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்த அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. மே 2-ந்தேதி வரை சுமார் 1 மாதம் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சிக்காக தமிழகம் முழுவதும் 330 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நீட் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 13,304 மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த 850 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 9 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மார்ச் 25-ந்தேதி முதல் மே 2 வரையிலான நீட் நுழைவு தேர்வு பயிற்சிக்கான அட்டவணையை ஆசிரியர்கள் ஏற்கெனவே தயாரித்துள்ளனர். மாணவர்களுக்கு தினமும் தேர்வுகள் நடைபெறும். நீட் நுழைவுத்தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள் 3 முழுமையான மாதிரி தேர்வுகளையும் எழுதுவார்கள்.
மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக, நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது. ஒவ்வொரு நாளும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய 4 பாடங்களையும் படிக்க உள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் மொத்தம் 1 லட்சத்து 55 ஆயிரத்து 210 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 7 ஆயிரம் மாணவர்கள் அதிகம் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளிகளை சேர்ந்த 12,997 மாணவர்களில் 3,982 பேர் தேர்ச்சி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது
- எனக்குத் தெரிந்த தமிழ்நாட்டில் நயினார் நாகேந்திரன் மட்டுமே வெற்றி பெறுவார்
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. பாஜக கட்சி, பாமக , தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து வரும் தேர்தலை சந்திக்கிறது.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் எம்பி சுப்பிரமணிய சாமி, "பாஜக கேட்டால் பிரசாரத்திற்கு செல்வேன். ஆனால் என்னிடம் கேட்கவில்லை. மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது. அவர் தோற்கடிக்கப்பட வேண்டும்.
எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் நயினார் நாகேந்திரன் மட்டுமே வெற்றி பெறுவார். மற்றவர்கள் பற்றி எனக்கு தெரியாது, தெரிந்து கண்டு பதில் சொல்கிறேன்.
இந்தியா எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொருளாதார ரீதியாக பாஜக அரசியல் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. விளம்பரத்தில் மட்டுமே எல்லாம் செய்து விட்டதாக பாஜக சொல்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
- 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் நேரடியாக தி.மு.க. போட்டியிடுகிறது
கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் நேரடியாக தி.மு.க. போட்டியிடுகிறது.
இந்நிலையில், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த முழுமையான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அதே சமயம், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த கணேசமூர்த்தி இன்று சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது.
- விருதுநகரில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்
- மதுரையில் பேசிய சரத்குமார், நான் போட்டியிட்டாலும் ஒன்றுதான், ராதிகா போட்டியிட்டாலும் ஒன்றுதான்
பாஜகவுடன் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இணைந்தது. ஆனால், அடுத்த சில நாட்களில் சமகவை பாஜகவுடன் இணைப்பதாக சரத்குமார் அதிரடியாக அறிவித்தார். மூன்றாவது முறை மோடியை பிரதமராக்குவதே லட்சியம் என்று அவர் சூளுரைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் விருதுநகரில் பாஜக சார்பில் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் களம் காண்கிறார்கள். இதனால் விருதுநகரில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.
மதுரை அடுத்த திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று வழிபாடு நடத்திய பிறகு ராதிகா சரத்குமார் தனது பரப்புரையைத் தொடங்கினார். அப்போது பேசிய ராதிகா, "வேலைவாய்ப்பு, இருப்பிடம் மற்றும் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவே நாங்கள் செயல்படுவோம். பிரதமர் மோடி நாட்டுக்கு எத்தனையோ நல்ல விஷயங்களை செய்துள்ளார். அவற்றில் பல விஷயங்கள் இன்னும் தமிழ்நாட்டுக்கு வந்து சேரவில்லை. ஆகவே, மோடியின் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வர நாங்கள் பாடுபடுவோம்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், நான் போட்டியிட்டாலும் ஒன்றுதான், ராதிகா போட்டியிட்டாலும் ஒன்றுதான். சூரியவம்சம் படத்தில் கலெக்டர் ஆக்கியது போல எனது மனைவி ராதிகாவை எம்.பி ஆக்குவேன். காமராஜர் பிறந்த மண்ணில் என் மனைவி போட்டியிடுவது பெருமை, மோடி 3வது முறையாக பிரதமர் ஆகவேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
- அகில இந்திய காங்கிரஸ் தலைமை குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
- நபருக்கு சீட்டு வழங்கும் பட்சத்தில் தேர்தல் வேலைகளில் ஈடுபடமாட்டோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. வேட்பு மனுதாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது.
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் நெல்லை மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. கட்சியினர் பலரும் போட்டி போட்டு சீட் கேட்பதால் யாரை வேட்பாளராக நிறுத்துவது? என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு சீட் கேட்டு அக்கட்சியின் மூத்த தலைவர்கள், இளம் தலைவர்கள் என ஒரு பட்டாளமே டெல்லியில் முகாமிட்டுள்ளது. இதற்கிடை யே சீட் எங்களுக்கு தான் வேண்டும் என்று கட்சியினர் போட்டி போட்டு கோஷ்டிகளாக செயல்பட்டு சீட் வாங்க காய் நகர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு நபரை வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கு சீட்டு வழங்கக் கூடாது என்று கூறி மற்றொரு தரப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு இன்று காலை திரண்ட ஒரு பிரிவு காங்கிரசார் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த அந்த குறிப்பிட்ட நிர்வாகிக்கு சீட்டு வழங்கக் கூடாது, அவர் ராகுல் காந்தி பாதயாத்திரையின்போது அவரது உருவம் குறித்த பேனரை கிழித்தெறிந்தவர், கட்சிப் பணியில் ஈடுபடாமல் இருப்பவர் என்றும் கூறியதோடு, அந்த நபருக்கு சீட்டு வழங்கும் பட்சத்தில் தேர்தல் வேலைகளில் ஈடுபடமாட்டோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






