search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குளுமையாக இருந்த கோவையில் வெப்பம் அதிகரிக்க திராவிட அரசுகளே காரணம் - அண்ணாமலை
    X

    குளுமையாக இருந்த கோவையில் வெப்பம் அதிகரிக்க திராவிட அரசுகளே காரணம் - அண்ணாமலை

    • பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்
    • இதனையொட்டி கோவை சரவணம்பட்டி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது

    பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

    இதனையொட்டி கோவை சரவணம்பட்டி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநில தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பல்வேறு தேர்தல் வியூகங்கள் குறித்து கட்சியினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது பேசிய அண்ணாமலை, "கோவை ஒரு காலத்தில் மிகவும் குளுமையாக இருந்தது. தற்போது இரண்டு முதல் மூன்று டிகிரிகள் வரை வெயில் அதிகரித்து விட்டது. மாநகரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கவே முடியாத நிலை இருக்கிறது. மக்கள் முகக்கவசங்கள் இல்லாமல் வெளியே வர முடியாத அளவுக்கு தூசி படர்ந்து இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் திராவிட அரசுகள் தான். இதையெல்லாம் மாற்றுவதற்காக மக்கள் பாஜகவை தேர்வு செய்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    கோவையில் வெப்பம் அதிகரிப்பதற்கு திராவிட அரசுகள் தான் காரணம் என அண்ணாமலை பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×