search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரர்கள்"

    • பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கி, 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
    • 22 மாநிலங்களிலிருந்து 36 அணிகளை சேர்ந்த சுமார் 450 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விளையாடவுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள் விளையாட்டரங்கத்தில் 11 ஆவது அகில இந்திய பாரா வாலிபால் போட்டி பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

    இது தொடர்பான இலச்சி னையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது :-

    இந்திய பாரா வாலிபால் சங்கம், தமிழ்நாடு பாரா வாலி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலி சங்கம் ஆகியவை சார்பிலும், மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைந்து அகில இந்திய அளவிலான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 11 ஆவது அகில இந்திய பாரா வாலிபால் போட்டி தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக உள் விளையாட்டரங்கத்தில் பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கி, 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இந்தப் போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரம், உத்ரகாண்ட், ஜார்கண்ட், பிகார், ராஜஸ்தான், ஒரிசா, மேற்கு வங்கம், திரிபுரா உள்பட 22 மாநிலங்க ளிலிருந்து 36 அணிகளைச் சார்ந்த சுமார் 450 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடவுள்ளனர்.இப்போட்டியிலிருந்து வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, உலக அளவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

    இந்தப் போட்டியைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். நிறைவு நாளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு வெற்றிக் கோப்பையையும், பரிசுத் தொகையையும் வழங்கவுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக அவர், போட்டிக்கான லோகோவை வெளியிட்டார்.

    அப்போது, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சங்கீதா, தமிழ்நாடு பாரா வாலி சங்க மாநிலத் தலைவர் மக்கள் ராஜன், மாவட்ட தடகள சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்ட பாரா வாலி சங்க தலைவர் ராமநாத துளசி அய்யா வாண்டையார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல்உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • வாழ்க்கைத்திறன் மேம்பாட்டுடன் கூடிய விளையாட்டின் முக்கியத்து வத்தைப் பற்றியும் அதனால் மாணவர்கள் அடையும் பலன்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
    • செங்கல்பட்டு மாவட்ட கூடைப்பந்து அணிக்காக விளையாடிய ஹரிச்சந்திரன் ராஜேஷ் ஆகிய பவுண்டேஷன் மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

    தஞ்சாவூர்:

    மாமன்னன் ராஜராஜ சோழன் பவுண்டேஷன்-நில் வாழ்க்கை திறன் மேம்பாட்டுடன் கூடிய கூடைப்பந்து பயிற்சி வகுப்பின் "இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், மாவட்ட கூடைப்பந்து அணிக்காக விளையாடிய வீரர்களை பாராட்டு நிகழ்வும் தஞ்சாவூரில் நடைபெற்றது.

    இந்த நிகழ்விற்கு பவுண்டேஷனின் மாணவன் ஸ்வேதன்ஷூ நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.

    மாமன்னன் ராஜராஜ சோழன்பவுண்டேஷன் சேர்மன் பொறியாளர்இளவரசு முன்னிலை வகித்தார்.

    ஜேசி பொறியாளர் சுரேஷ்குமார் தலைவர் தேர்வு, ஜேசிஐ தஞ்சாவூர் மாமன்னன் ராஜராஜ சோழன் தலைமை உரையாற்றினார்.

    மாமன்னன் ராஜராஜ சோழன் பவுண்டேஷனின் நிறுவனரும், முன்னாள் சர்வதேச கூடைப்பந்து நடுவ ருமான 'ஏசியாட்' முனைவர் ரமேஷ்குமார் துரைராஜு வாழ்க்கைத்திறன் மேம்பாட்டுடன் கூடிய விளையாட்டின் முக்கியத்து வத்தைப் பற்றியும் அதனால் மாணவர்கள் அடையும் பலன்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.

    கௌரவ விருந்தினராக மேகளத்தூர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி ஜோஸ்பின் ஆல்பர்ட் மேரி, சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர்இன்னிசை சுகுமாரன் ஆகியோர் மாணவர்கள் எதிர்கா லத்தில் தலைசிறந்த தலைவர்களாக உருவாக தற்காலத்தில் எந்தெந்த பகுதியில் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று பேசினர்.

    சமீபத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற 13 வயதுக்கு ட்பட்ட மாநில அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தஞ்சை மாவட்ட கூடைப்பந்து அணிக்கு தலைவராக விளையாடிய கனிஷ்கர் மற்றும் அனிருத்தன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கூடைப்பந்து அணிக்காக விளையாடிய ஹரிச்சந்திரன் ராஜேஷ் ஆகிய பவுண்டேஷன் மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

    முடிவில் பவுண்டேஷன் மாணவர் அமுதன் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது.
    • கடல் பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கவச உடை அணிந்த நீச்சல் வீரர்கள் நியமிக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த தீயணைப்புத்துறை இயக்குநர் ரவி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை அவ்வபோது பெய்து வருகிறது. இந்த நிலையில் தீயணைப்புத்துறை சார்பாக மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார்.

    தீயணைப்பு நிலையத்தில் மரம் வெட்டும் கருவி, கட்டிடம் இடிக்கும் கருவி, ஆபத்து காலத்தில் கதவுகளை உடைக்கும் கருவி உள்ளிட்ட நவீன மீட்பு பணி உபகரணங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவைகளை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர் கூறுகையில்;

    நாகை மாவட்டத்தில் 7 தீயணைப்பு நிலையங்களில், 7 மீட்பு படையினர், 160 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை காலங்களில் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது, பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது மற்றும் வெகுமதி கட்டாயம் உண்டு. மேலும், சுற்றுலா தலங்களாக விளங்கும் வேளாங்கண்ணி, நாகூர், தரங்கம்பாடி, பூம்புகார் ஆகிய கடல் பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கவச உடை அணிந்த நீச்சல் வீரர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    • 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் மாநிலம் தழுவிய கபடி போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 29-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கு திருப்பூர் மாவட்ட கபடி கழகத்தின் சார்பாக திருப்பூர் வடக்கு, தெற்கு அணிகள் கலந்து கொள்கிறது. திருப்பூர் வடக்கு, தெற்கு அணிகளுக்கு வீரர்கள் தேர்வு செய்ய தேர்வு குழுவினரால் போட்டி நடத்தி, 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி முகாம் நிறைவு மற்றும் மாநில போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களை வழியனுப்பும் விழா நடந்தது. விழவுக்கு திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளரும், மாநில பொருளாளருமான ஜெய்சித்ரா ஏ.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கன்னிமார் ஆறுச்சாமி முன்னிலை வகித்தார். நடுவர் குழு தலைவர் முத்துசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பா.ஜனதா விளையாட்டுத்துறை செயலாளர் கே.பி.மகேஷ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட இணை செயலாளர் சின்னு, செல்வராஜ், பயிற்சியாளர் ராஜூ, தம்பி வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காற்றின் வேகத்தால் தீ மளமளவென குப்பை கிடங்கு முழுவதும் பரவியது.
    • தீயை கட்டுப்படுத்த முடியாததால் நகராட்சி ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஈசானிய தெருவில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கில் சேமித்து வைக்கப்படுவது வழக்கம். மலை போல் தேங்கியுள்ள குப்பைகளை அங்கு தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இரவு திடீரென குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

    காற்றின் வேகத்தால் தீ மளமளவென குப்பை கிடங்கு முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சிய ளித்தது.

    தீயை கட்டுப்படுத்த முடியாததால் நகராட்சி ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    இதனையடுத்து விரைந்து வந்த சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

    • மஞ்சுவிரட்டில் 126 வீரர்கள் பங்கேற்றார்.
    • துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 17-வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி வடமாடு மஞ்சு விரட்டு கண்ணன் கோவில் திட லில் நடந்தது.

    தி.மு.க. மாவட்ட செய லாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிருஷ்ணாபுரம் கிராம தலைவரும், ஜல்லிக்கட்டு வடமாடு எருதுகட்டு பேரவை தலைவருமான ஆதித்தன் வரவேற்றார்.

    பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் போட்டியில் பங்கேற்றன. போட்டியில் முதல் காளை யாக காஞ்சிரங்குடி செவளைக்காளை களமிறக்கப்பட்டது. 9 பேர் கொண்ட குழு வினர் மாடுபிடிக்க அனுமதிக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் சோளம்பட்டி தங்கம் நினைவு குழு வீரர்கள் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசு பெற்றனர்.

    காளைகளில் செல்வ குமார் என்பவரது காளை சிறப்பு பரிசு பெற்றது. மாடுபிடி வீரர்களுக்கு 25 நிமிடங்கள் காளையை பிடிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.

    இதில் மாவட்ட கவுன்சிலர்கள் மண்டபம் மேற்கு கவிதா கதிரேசன், திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் புல்லாணி, திருப்புல்லாணி மேற்கு கார்த்திகேஸ்வரி கொத்த லிங்கம், ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சங்கு (எ) முத்து ராமலிங்கம், திருப்புல்லாணி கிழக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன், காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவர் முனியசாமி, மதுரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கிருஷ்ணா புரம் கிராம பொதுமக்கள், விளை யாட்டுக்குழு, அனைத்து மகளிர் மன்றங்கள் செய்திருந்தன. போட்டியை காண்பதற்கு பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நாகர்கோவிலில் இன்று நள்ளிரவு முதல் 12 நாட்கள் நடக்கிறது
    • அண்ணா விளையாட்டரங்கத்தை வீரர்கள் 4 முறை சுற்றி வரவேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று நள்ளிரவு தொடங்குகிறது.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, சிவகங்கை, மயிலாடுதுறை, கரூர், திண்டுக்கல், விருது நகர், காரைக்கால், பெரம் பலூர் உள்பட 17 மாவட்டங்களைச் சேர்ந்த இளை ஞர்கள் பங்கேற்க உள்ள னர்.

    இதற்காக ஆன்லைன் மூலமாக 36 ஆயிரம் இளைஞர்கள்  விண்ணப் பித்ததாக கூறப்படுகிறது. விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. தினமும் 3000 பேர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இரவை பகலாக்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை, திருவனந்தபுரம், சென்னையிலிருந்து 140-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வருகை தந்துள்ளனர். மேலும் ராணுவ உயர் அதிகாரிகளும் நேற்று இரவு வந்தனர். ராணுவ வீரர்கள் தேர்வு இன்று இரவு நடைபெறுவதையடுத்து இன்று காலையிலேயே பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் வர தொடங்கினார்கள்.

    இதனால் வடசேரி பகுதி யில் காலை முதலே இளை ஞர்களின் கூட்டம் அதிக மாக இருந்தது. ராணு வத்திற்கு ஆள் சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வுக்கு வருகை தரும் இளைஞர்கள் அமர வசதியாக மூன்று இடங்களில் பந்தல் அமைக் கப்பட்டு உள்ளது.

    உழவர் சந்தை திடல், மாநகராட்சி புதிய அலு வலக கட்டிட வளாகம், அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து நீச்சல் குளத்திற்கு செல்லும் பகுதி ஆகிய பகுதிகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு வசதியாக குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இன்று தொடங்கும் ஆள் சேர்ப்பு முகாம்வருகிற 1-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.

    வெளியூர்களில் இருந்து வரும் இளைஞர்களுக்கு வசதியாகவும் பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது. ராணுவத்திற்கான ஆட்கள் தேர்வின்போது அசல் சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கு வருபவர்களுக்கு உடல் தகுதி மேற்கொள் ளப்படும்.

    மேலும் 1600 மீட்டர் தூரத்தை ஓடும் வகை யில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.நாகர்கோவில் அண்ணா விளை யாட்டரங்கத்தின் ஓடு தளம் 400 மீட்டர் நீளம் கொண்டதாகும்.இத னால் அண்ணா விளை யாட்டரங்கத்தை வீரர்கள் 4 முறை சுற்றி வரவேண்டும். நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் ஆள் சேர்ப்பு முகாம் அதிகாலை வரை நடைபெறும்.

    பின்னர் மறுநாள் நள்ளிரவு நடத்தப்படும். நள்ளிரவு ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுவதால் பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாது. ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடை பெறும் அண்ணா விளை யாட்டு அரங்கம் முன் பகுதியில் பலத்த பாது காப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    • சுகன் சுகா மெடிக்கல் சென்டர் சார்பில் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தப்பட்டு வருகிறது.
    • 35-வது மாநில ஜூனியர் ஓப்பன் தடகள போட்டிகள் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி சுகன் சுகா மெடிக்கல் சென்டர் சார்பில் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெற்று வரும் 100-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் இன்று (புதன்கிழமை) முதல் 20-ந்தேதி வரை 3 நாட்கள் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 35-வது மாநில ஜூனியர் ஓப்பன் தடகள போட்டிகள் நடைபெறுகிறது. இதில் திருமுருகன்பூண்டி சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த 23 பேர் பயிற்சியாளர் பாரதி தலைமையில் கலந்து கொள்கின்றனர். அந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு வழியனுப்பு விழா சுகன் சுகா மெடிக்கல் சென்டர் வளாகத்தில் அகாடமி தலைவர் டாக்டர் எஸ்.சுந்தரன் தலைமையில் நடைபெற்றது. இதில் செயலாளர் டாக்டர் பி.கார்த்திகை சுந்தரன், பொருளாளர் செங்கோடன், பயிற்சியாளர் பாரதி ஆகியோர் கலந்து கொண்டு, வீரர்-வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

    • 26-வது தமிழ்நாடு மாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
    • போட்டியில் செங்கல்பட்டு, பொள்ளாச்சி, ஈரோடு, சென்னை, திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 கல்லூரி அணிகள் பங்கேற்றன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நாகை மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் மன்சூர் கைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் 26-வது தமிழ்நாடு மாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி தலைமை தாங்கினார். நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் போட்டியை தொடக்கி வைத்து விளையாட்டு வீரர்களை வாழ்த்தினார். இப்போட்டியில் செங்கல்பட்டு, பொள்ளாச்சி, ஈரோடு, சென்னை, திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 கல்லூரி அணிகள் பங்கேற்றன.

    இந்நிகழ்ச்சியில் திட்டச்சேரி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அப்துல் ரஷீத், கலைமகள் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் குடியரசு, திட்டச்சேரி நிர்வாக சபை தலைவர் அப்துல் நாசர், நாகை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மயிலாடுதுறை கைப்பந்து சங்க தலைவர் ராஜ்கமல், மயிலாடுதுறை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் பாபு, தலைவர் செந்தில்குமார், சர்வதேச கைப்பந்து வீரர் முகமது ரியாசுதீன் மற்றும் கைப்பந்து பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளனர்.
    • விளையாட்டு போட்டியை ஊக்கப்படுத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28ஆம் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க உள்ளன. அடுத்த மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த விளையாட்டுப் போட்டியை ஊக்கப்படுத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன்படி தஞ்சை மாவ ட்டம் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டிகள் பள்ளி கல்வித்துறை சார்பாகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாகவும் இன்று அன்னை சத்யா உள் விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவ- மாணவிகளை கொண்டு நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மாணவர்களுடன் சதுரங்கம் போட்டியில் விளையாடினார். இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், மாவட்ட கல்வி அலுவலர் குழந்தை ராஜ், உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி மற்றும் மாவட்ட விளையாட்டு பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ -மாணவிகளின் பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் வரும் 25-ந் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர்.

    ×