search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுடன் சதுரங்கம் விளையாடிய கலெக்டர்
    X

    மாணவர்களுடன் அமர்ந்து சதுரங்கம் விளையாடிய கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    மாணவர்களுடன் சதுரங்கம் விளையாடிய கலெக்டர்

    • சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளனர்.
    • விளையாட்டு போட்டியை ஊக்கப்படுத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28ஆம் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க உள்ளன. அடுத்த மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த விளையாட்டுப் போட்டியை ஊக்கப்படுத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன்படி தஞ்சை மாவ ட்டம் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டிகள் பள்ளி கல்வித்துறை சார்பாகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாகவும் இன்று அன்னை சத்யா உள் விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவ- மாணவிகளை கொண்டு நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மாணவர்களுடன் சதுரங்கம் போட்டியில் விளையாடினார். இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், மாவட்ட கல்வி அலுவலர் குழந்தை ராஜ், உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி மற்றும் மாவட்ட விளையாட்டு பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ -மாணவிகளின் பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் வரும் 25-ந் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர்.

    Next Story
    ×