search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Send off Ceremony"

    • 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் மாநிலம் தழுவிய கபடி போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 29-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கு திருப்பூர் மாவட்ட கபடி கழகத்தின் சார்பாக திருப்பூர் வடக்கு, தெற்கு அணிகள் கலந்து கொள்கிறது. திருப்பூர் வடக்கு, தெற்கு அணிகளுக்கு வீரர்கள் தேர்வு செய்ய தேர்வு குழுவினரால் போட்டி நடத்தி, 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி முகாம் நிறைவு மற்றும் மாநில போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களை வழியனுப்பும் விழா நடந்தது. விழவுக்கு திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளரும், மாநில பொருளாளருமான ஜெய்சித்ரா ஏ.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கன்னிமார் ஆறுச்சாமி முன்னிலை வகித்தார். நடுவர் குழு தலைவர் முத்துசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பா.ஜனதா விளையாட்டுத்துறை செயலாளர் கே.பி.மகேஷ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட இணை செயலாளர் சின்னு, செல்வராஜ், பயிற்சியாளர் ராஜூ, தம்பி வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுகன் சுகா மெடிக்கல் சென்டர் சார்பில் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தப்பட்டு வருகிறது.
    • 35-வது மாநில ஜூனியர் ஓப்பன் தடகள போட்டிகள் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி சுகன் சுகா மெடிக்கல் சென்டர் சார்பில் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெற்று வரும் 100-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் இன்று (புதன்கிழமை) முதல் 20-ந்தேதி வரை 3 நாட்கள் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 35-வது மாநில ஜூனியர் ஓப்பன் தடகள போட்டிகள் நடைபெறுகிறது. இதில் திருமுருகன்பூண்டி சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த 23 பேர் பயிற்சியாளர் பாரதி தலைமையில் கலந்து கொள்கின்றனர். அந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு வழியனுப்பு விழா சுகன் சுகா மெடிக்கல் சென்டர் வளாகத்தில் அகாடமி தலைவர் டாக்டர் எஸ்.சுந்தரன் தலைமையில் நடைபெற்றது. இதில் செயலாளர் டாக்டர் பி.கார்த்திகை சுந்தரன், பொருளாளர் செங்கோடன், பயிற்சியாளர் பாரதி ஆகியோர் கலந்து கொண்டு, வீரர்-வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

    ×