என் மலர்
நீங்கள் தேடியது "Athletic"
- உள்ளரங்க குண்டு எறிதலில் 16 மீட்டர் தூரத்துக்கு மேல் எறிந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்புக்குரியவர்.
- தமிழக வீராங்கனை கிருஷ்ணா குண்டு எறிதலில் 16.63 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
சென்னை:
அமெரிக்காவின் அல்புகெர்க்கி நகரில், நியூ மெக்சிகோ அணி ஓபன் உள்ளரங்க தடகள போட்டி 2 நாட்கள் நடந்தது. இதில் யு.என்.எல்.வி. அணிக்காக பங்கேற்ற தமிழக வீராங்கனை கிருஷ்ணா குண்டு எறிதலில் 16.63 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
அவரது சிறந்த செயல்பாடு இதுவாகும். 23 வயதான கிருஷ்ணா உள்ளரங்க குண்டு எறிதலில் 16 மீட்டர் தூரத்துக்கு மேல் எறிந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்புக்குரியவர்.
இவர், இந்திய கூடைப்பந்து அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர் ஜெயசங்கர் மேனன்- பிரசன்னா தம்பதியின் மகள் ஆவார்.
- சுகன் சுகா மெடிக்கல் சென்டர் சார்பில் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தப்பட்டு வருகிறது.
- 35-வது மாநில ஜூனியர் ஓப்பன் தடகள போட்டிகள் நடைபெறுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் திருமுருகன்பூண்டி சுகன் சுகா மெடிக்கல் சென்டர் சார்பில் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெற்று வரும் 100-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் இன்று (புதன்கிழமை) முதல் 20-ந்தேதி வரை 3 நாட்கள் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 35-வது மாநில ஜூனியர் ஓப்பன் தடகள போட்டிகள் நடைபெறுகிறது. இதில் திருமுருகன்பூண்டி சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த 23 பேர் பயிற்சியாளர் பாரதி தலைமையில் கலந்து கொள்கின்றனர். அந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு வழியனுப்பு விழா சுகன் சுகா மெடிக்கல் சென்டர் வளாகத்தில் அகாடமி தலைவர் டாக்டர் எஸ்.சுந்தரன் தலைமையில் நடைபெற்றது. இதில் செயலாளர் டாக்டர் பி.கார்த்திகை சுந்தரன், பொருளாளர் செங்கோடன், பயிற்சியாளர் பாரதி ஆகியோர் கலந்து கொண்டு, வீரர்-வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
சென்னை பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை சார்பில் ஏ.எல்.முதலியார் பொன்விழா நினைவு 51-வது தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 66 கல்லூரிகளை சேர்ந்த 1,200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
2-வது நாளான நேற்றும் 2 புதிய போட்டி சாதனைகள் படைக்கப்பட்டன. பெண்களுக்கான வட்டு எறிதலில் எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங் கனை காருண்யா 43.50 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதில் கடந்த ஆண்டு (2017) எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங்கனை நித்யா 40.88 மீட்டர் எறிந்ததே சாதனையாக இருந்தது. இதேபோல் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.ஓ.பி. வைஷ்ணவா வீராங்கனை ஸ்ரீஜா 11.7 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 2001-ம் ஆண்டில் ஜே.பி.ஏ.எஸ். வீராங்கனை கே.என்.பிரியா 11.9 வினாடியில் கடந்து படைத்து இருந்த சாதனையை ஸ்ரீஜா நேற்று தகர்த்தார். ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நிதின் (ஆர்.கே.எம்.விவேகானந்தா) 10.4 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து, 2008-ம் ஆண்டில் எம்.சி.சி. வீரர் பிரசாத் (10.4 வினாடி) படைத்து இருந்த சாதனையை சமன் செய்தார்.
ஆண்களுக்கான குண்டு எறிதலில் அஜித் குமார், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ராஜேஷ் (இருவரும் டி.ஜி.வைஷ்ணவா), ஈட்டி எறிதலில் அருண்குமார், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹரி கிருஷ்ணன் (இருவரும் எம்.சி.சி.) ஆகியோர் தங்கப்பதக்கத்தை வென்றனர்.
பெண்களுக்கான குண்டு எறிதலில் மீனாட்சி, 100 மீட்டர் தடை ஓட்டத்தில் கனிமொழி (இருவரும் எம்.ஓ.பி.வைஷ்ணவா), 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எக்னேஷ், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மரிய ராசாத்தி (இருவரும் எத்திராஜ்), ஈட்டி எறிதலில் ஹேமமாலினி (எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா) ஆகியோர் தங்கப்பதக்கத்தை பெற்றனர். நேற்றைய பந்தயங்கள் முடிவில் ஆண்கள் பிரிவில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியும், பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியும் பதக்க வேட்டையில் முன்னிலை வகிக்கின்றன. இன்று கடைசி நாள் பந்தயம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.






