search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new record"

    • 2-வது நாளான நேற்று 5 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.
    • 400 மீட்டர் தனி நபர் மெட்லியில் 4:54.14 வினாடியில் கடந்தும் புதிய சாதனை நிகழ்த்தினார்.

    சென்னை:

    39-வது சப்ஜூனியர், 49-வது ஜூனியர் நீச்சல் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று 5 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.

    நெல்லை அணி வீரர் எம்.எஸ்.நிதிஷ் மேலும் 2 புதிய சாதனைகள் படைத்து 3 சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். குரூப் 2 சிறுவர் பிரிவில் 200 மீட்டர் பிரஸ்ட்ரோக் பிரிவில் 2:31.62 வினாடிகளில் கடந்தும், 400 மீட்டர் தனி நபர் மெட்லியில் 4:54.14 வினாடியில் கடந்தும் புதிய சாதனை நிகழ்த்தினார்.

    ஆர்கா அணி வீரர் சர்வபள்ளி சாய் ஆதித்யா குரூப் 2 சிறுவர்களுக்கான 800 மீட்டர் பிரிவிலும் குரூப் 2 சிறுமியர் பிரிவில் செயின்ட் பிரிட்டோ அணி வீராங்கனை ஸ்ரீநிதி நடேசன் 400 மீட்டர் தனி நபர் மெட்லி பிரிவிலும் புதிய சாதனை படைத்தனர்.

    • ரிதன்யாஸ்ரீ (வயது15). இவர் கிச்சிப்பாளையம் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
    • இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்றார்.

    சேலம்:

    சேலம் சின்னதிருப்பதி கோகுல்நகர் முதல்தெருவை சேர்ந்த வினோத் குமார்-காயத்திரிதேவி தம்பதியரின் மூத்த மகள் ரிதன்யாஸ்ரீ (வயது15). இவர் கிச்சிப்பாளையம் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்றார்.

    இதில் மதுரை, சென்னை, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், கள்ளக்குறிச்சி,கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 பள்ளிகளை சேர்ந்தமாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ரிதன்யா ஸ்ரீ 19 வயதுக்கு உட்பட்டோர்பிரிவில் 3 பிரிவுகளில் பங்கேற்றார். பிரஸ்டு ஸ்ட்ரோக் 100 மீட்டர் பிரிவை 1.45 நிமிடத்தில் கடந்தார். 200 மீட்டரை, 4 நிமிடத்திலும், ப்ரீஸ்டைல் நீச்சல் பிரிவில், 400 மீட்டரை, 7.9 நிமிடத் திலும் கடந்து 3 பிரிவிலும் முதல் பரிசாக தங்கப் பதக்கம் வென்றார்.

    ரிதன்யா ஸ்ரீ பதக்கம் வென்றதன் மூலம் செப்டம்பர் மாதம் பெங்களூரு ராகுல் டிராவிட் அகாடமியில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இவர் நீச்சல் போட்டியில் இதுவரை, 23 தங்கப்பதக்கம்,7 வெள்ளி, 5 வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். இவரை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர், பயிற்சியாளர் தம்பிரீஸ் கான் மற்றும் சக மாணவியர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • 8,000 மீ உயரம் கொண்ட இந்த பாதை மிகவும் கடினமானது.
    • மாறுபட்ட காலநிலையில் அவர் சைக்கிள் ஓட்ட வேண்டியிருந்தது.

    லடாக்:

    புனேவைச் சேர்ந்த 45 வயதான ப்ரீத்தி மாஸ்கே, லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான லேவில் இருந்து மணாலி வரை 55 மணி நேரம் 13 நிமிடங்களில் தனியாக சைக்கிள் ஓட்டிய முதல் பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார்.

    2 குழந்தைகளின் தாயான ப்ரீத்தி, 430 கிலோமீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் உலக சாதனையின் தேவைகளை பூர்த்தி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    8,000 மீ உயரம் கொண்ட இந்த பாதை மிகவும் கடினமானது என்றும், பலத்த காற்று, பனிப்பொழிவு மற்றும் உறைபனியின் வெப்பநிலை உள்பட மாறுபட்ட காலநிலையில் அவர் சைக்கிள் ஓட்ட வேண்டியிருந்தது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மூச்சுத் திணறல் காரணமாக நான் இரண்டு முறை ஆக்ஸிசன் சிலிண்டர்களை பயன்படுத்தினேன் என்றும் பீரித்தி குறிப்பிட்டுள்ளார்.

    தனக்கு இருந்த நோய் பாதிப்பை சமாளிக்க, 40 வயதில் நான் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன் என்று கூறும் அவர், ஒருவரின் ஆர்வத்திற்கு வயது ஒரு தடையல்ல என தெரிவித்தார். என் பயத்தை என்னால் வெல்ல முடிந்ததால் எந்த பெண்ணாலும் இது முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் காதுகேளாதோருக்கான அகில இந்திய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை குரு ஜோதி 3.92 மீட்டர் தூரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். #DisabledSports #DifferentlyAbledAthlete
    சென்னை:

    காதுகேளாதோருக்கான அகில இந்திய தடகள போட்டி (14, 16, 18 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோர்) சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை குரு ஜோதி 3.92 மீட்டர் தூரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

    குரு ஜோதி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள எப்.எஸ்.காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். #DisabledSports #DifferentlyAbledAthlete

    சென்னை பல்கலைக்கழக தடகள போட்டியில் வீராங்கனைகள் காருண்யா, ஸ்ரீஜா ஆகியோர் புதிய சாதனை படைத்தனர்.
    சென்னை:

    சென்னை பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை சார்பில் ஏ.எல்.முதலியார் பொன்விழா நினைவு 51-வது தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 66 கல்லூரிகளை சேர்ந்த 1,200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    2-வது நாளான நேற்றும் 2 புதிய போட்டி சாதனைகள் படைக்கப்பட்டன. பெண்களுக்கான வட்டு எறிதலில் எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங் கனை காருண்யா 43.50 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதில் கடந்த ஆண்டு (2017) எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங்கனை நித்யா 40.88 மீட்டர் எறிந்ததே சாதனையாக இருந்தது. இதேபோல் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.ஓ.பி. வைஷ்ணவா வீராங்கனை ஸ்ரீஜா 11.7 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 2001-ம் ஆண்டில் ஜே.பி.ஏ.எஸ். வீராங்கனை கே.என்.பிரியா 11.9 வினாடியில் கடந்து படைத்து இருந்த சாதனையை ஸ்ரீஜா நேற்று தகர்த்தார். ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நிதின் (ஆர்.கே.எம்.விவேகானந்தா) 10.4 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து, 2008-ம் ஆண்டில் எம்.சி.சி. வீரர் பிரசாத் (10.4 வினாடி) படைத்து இருந்த சாதனையை சமன் செய்தார்.

    ஆண்களுக்கான குண்டு எறிதலில் அஜித் குமார், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ராஜேஷ் (இருவரும் டி.ஜி.வைஷ்ணவா), ஈட்டி எறிதலில் அருண்குமார், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹரி கிருஷ்ணன் (இருவரும் எம்.சி.சி.) ஆகியோர் தங்கப்பதக்கத்தை வென்றனர்.

    பெண்களுக்கான குண்டு எறிதலில் மீனாட்சி, 100 மீட்டர் தடை ஓட்டத்தில் கனிமொழி (இருவரும் எம்.ஓ.பி.வைஷ்ணவா), 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எக்னேஷ், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மரிய ராசாத்தி (இருவரும் எத்திராஜ்), ஈட்டி எறிதலில் ஹேமமாலினி (எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா) ஆகியோர் தங்கப்பதக்கத்தை பெற்றனர். நேற்றைய பந்தயங்கள் முடிவில் ஆண்கள் பிரிவில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியும், பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியும் பதக்க வேட்டையில் முன்னிலை வகிக்கின்றன. இன்று கடைசி நாள் பந்தயம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. 
    வரலாறு காணாத உச்சமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாயை தாண்டியது. டீசல் ரூ.72.14-க்கு விற்பனை செய்யப்பட்டது. #PetrolDiesel
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் கடந்த 13-ந் தேதி வரையில் 19 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதற்கு கர்நாடக சட்டசபை தேர்தல்தான் காரணம் என்ற கருத்து வெளிப்படையாக பரவியது.

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் ஏறுமுகத்தில் பயணிக்க தொடங்கியது.

    கடந்த 14-ந் தேதி பெட்ரோல் ரூ.77.61-க்கும், டீசல் ரூ.69.79-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் பெட்ரோல் ரூ.79.79-க்கும், டீசல் ரூ.71.87-க்கும் விற்பனை ஆனது.

    இதன்மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டியது. கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.55-க்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாலும், பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயரும் என்று கருதப்படுகிறது.

    அந்த வகையில், வரலாறு காணாத உச்சமாக, பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து 80 ரூபாயை தாண்டியது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.11-க்கும், டீசல் ரூ.72.14-க்கும் விற்பனையானது. (நேற்று டீசல் லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்தது.)

    கடந்த 14-ந் தேதி முதல் நேற்று வரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.35-ம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் விலை ஏற்றத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 
    ×