என் மலர்

  நீங்கள் தேடியது "won"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரிதன்யாஸ்ரீ (வயது15). இவர் கிச்சிப்பாளையம் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
  • இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்றார்.

  சேலம்:

  சேலம் சின்னதிருப்பதி கோகுல்நகர் முதல்தெருவை சேர்ந்த வினோத் குமார்-காயத்திரிதேவி தம்பதியரின் மூத்த மகள் ரிதன்யாஸ்ரீ (வயது15). இவர் கிச்சிப்பாளையம் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்றார்.

  இதில் மதுரை, சென்னை, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், கள்ளக்குறிச்சி,கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 பள்ளிகளை சேர்ந்தமாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ரிதன்யா ஸ்ரீ 19 வயதுக்கு உட்பட்டோர்பிரிவில் 3 பிரிவுகளில் பங்கேற்றார். பிரஸ்டு ஸ்ட்ரோக் 100 மீட்டர் பிரிவை 1.45 நிமிடத்தில் கடந்தார். 200 மீட்டரை, 4 நிமிடத்திலும், ப்ரீஸ்டைல் நீச்சல் பிரிவில், 400 மீட்டரை, 7.9 நிமிடத் திலும் கடந்து 3 பிரிவிலும் முதல் பரிசாக தங்கப் பதக்கம் வென்றார்.

  ரிதன்யா ஸ்ரீ பதக்கம் வென்றதன் மூலம் செப்டம்பர் மாதம் பெங்களூரு ராகுல் டிராவிட் அகாடமியில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இவர் நீச்சல் போட்டியில் இதுவரை, 23 தங்கப்பதக்கம்,7 வெள்ளி, 5 வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். இவரை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர், பயிற்சியாளர் தம்பிரீஸ் கான் மற்றும் சக மாணவியர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில், 93 ரன்கள் என்ற எளிய இலக்கை விரைவில் எட்டிய நியூசிலாந்து அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #NZvIND #NewZealandWon
  ஹாமில்டன்:

  இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றிய நிலையில், 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியை பேட் செய்யுமாறு பணித்தார்.

  இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி, டோனி இல்லாததால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லை. அதேசமயம், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட், கிராண்ட்ஹோம் கடும் அச்சுறுத்தல் அளித்தனர். இதனால் முன்னணி பேட்ஸ்மேன்கள் கூட ரன் எடுக்க முடியாமல் திணறினர்.

  துவக்க வீரர்கள் ரோகித் சர்மா (7), ஷிகர் தவான் (13), சுப்மான் கில் (9), ஜாதவ் (1), ஹர்திக் பாண்டியா (16) என முக்கிய விக்கெட்டுகளை போல்ட் கைப்பற்றினார். இதேபோல், அம்பதி ராயுடு (0), தினேஷ் கார்த்திக் (0), புவனேஸ்வர் குமார் (1) ஆகியோரை வந்த வேகத்தில் வெளியேற்றினார் கிராண்ட்ஹோம். இதனால் நிலைகுலைந்த இந்திய அணி, 30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து,  92 ரன்களில் சுருண்டது.

  இதையடுத்து 93 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்  குப்தில் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அவரது விக்கெட்டை புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார். அதன்பின்னர் கேப்டன் வில்லியம்சனையும் (11), விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினார். ஆனால், 3வது விக்கெட்டுக்கு இணைந்த, நிக்கோல்ஸ்-டெய்லர் ஜோடி நிலைத்து நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.  நிக்கோல்ஸ் 30 ரன்களும்(நாட் அவுட்), டெய்லர் 37 ரன்களும் (நாட்  அவுட்) சேர்க்க, 14.4 ஓவர்களில் இலக்கை எட்டியது நியூசிலாந்து. இதனால், 8 விக்கெட்  வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை மிரட்டிய டிரென்ட் போல்ட், ஆட்டநாயகன் விருது பெற்றார்.

  இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் 1-3 என நியூசிலாந்து பின்தங்கி உள்ளது. கடைசி போட்டி வெலிங்டனில் 3-ம் தேதி நடக்கிறது.  #NZvIND #NewZealandWon
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. #AUSvIND #AustraliaWon
  பெர்த்:

  ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலி சதம் அடித்தாலும் 283 ரன்னில் சுருண்டது. 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 243 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

  இதையடுத்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா 55 ரன்னிற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. நான்காம் நாள் ஆட்ட நேர இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து 112 எடுத்திருந்தது. விஹாரி 24 ரன்னுடனும், ரிஷப் பந்த் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

  இந்தியாவின் வெற்றிக்கு 175 ரன்கள் தேவை, கைவசம் ஐந்து விக்கெட்டுக்கள் இருந்த நிலையில், கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய விஹாரி, மேற்கொண்டு 4 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். விக்கெட்டைக் காப்பாற்ற கடுமையாகப் போராடிய ரிஷப் பந்த் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இந்த ஜோடி வெளியேறியதும் இந்தியாவின் தோல்வி உறுதியானது. யமேஷ் யாதவ் (2), இஷாந்த் சர்மா (0), பும்ரா (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 140 ரன்களில் ஆல் அவுட் ஆனது.  இதனால் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் 2வது இன்னிங்சில் ஸ்டார்க், லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஹாசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

  அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதையடுத்து, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதும் 3வது ஆட்டம் மெல்போர்னில் 26-ம் தேதி தொடங்குகிறது. #AUSvIND #AustraliaWon
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கையில் ஓரம்கட்டப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக இன்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி அடைந்தது. #confidencemotion #SriLankanParliament #RanilWickremesinghe
  கொழும்பு:

  இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு அந்த பதவியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி நியமித்தார். அன்றிலிருந்து இலங்கை அரசியலில் தினமும் அதிரடி திருப்பங்களும் குழப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன.
   
  ராஜபக்சேவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சி தோல்வி அடைந்ததால் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி தேர்தல் நடத்துவதாக சிறிசேனா அறிவித்தார்.

  ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. மேலும் தேர்தலுக்கான ஏற்பாடுகளையும் முடக்கி வைத்துள்ளது. ஆனால் ரணில் விக்ரமசிங்கேவும், ராஜபக்சேவும் பிரதமர் பதவிக்கு உரிமை கோரி வருகின்றனர்.

  ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை சேர்ந்த 122 உறுப்பினர்கள் மேல் முறையீட்டு கோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தனர்.

  வழக்கை விசாரித்த கோர்ட்டு ராஜபக்சே பிரதமராக செயல்பட இடைக்கால தடை விதித்து கடந்த 3-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ராஜபக்சே 4-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானம் இலங்கை பாராளுமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்டது.

  225 உறுப்பினர்க்ளை கொண்ட பாராளுமன்றத்தில் இந்த தீர்மானத்தின்மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் விக்ரமசிங்கே ஆதரவு எம்.பி.க்கள் தவிர  தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களித்தனர். 6 உறுப்பினர்களை கொண்ட ஜனதா விமுக்தி பெரமுனா இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்து விட்டது.

  இந்நிலையில், 117 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. இதன் மூலம் பிரதமராவதற்கு தனக்கு முழுத்தகுதி உள்ளது என்பதை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் நிரூபித்துள்ளார்.

  இலங்கை அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த திருப்புமுனை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா மற்றும் பொம்மை பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு கிடைத்த மரண அடியாக கருதப்படுகிறது. #confidencemotion #SriLankanParliament #RanilWickremesinghe 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். #RajatsthanAssemblyElections #Congress #SachinPilot
  ஜெய்ப்பூர்:

  ராஜஸ்தானில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 74.21 சதவீத வாக்குகள் பதிவாகின.

  இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓட்டு எண்ணும் 40 மையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிக இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றதால், தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.   இந்நிலையில், ராஜஸ்தானின் டோங்க் தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் வெற்றி பெற்றுள்ளார்.

  இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யூனுஸ் கானை விட 54 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். #RajatsthanAssemblyElections #Congress #SachinPilot
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் 40 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று வெற்றியடைந்தார். #RajatsthanAssemblyElections #Congress #AshokGehlot
  ஜெய்ப்பூர்:

  ராஜஸ்தானில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 74.21 சதவீத வாக்குகள் பதிவாகின.

  இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓட்டு எண்ணும் 40 மையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிக இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றதால், தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.   இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சர்தார்புரா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் வெற்றி பெற்றுள்ளார்.

  இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஷம்பு சிங்கை விட 40 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். #RajatsthanAssemblyElections #Congress #AshokGehlot
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் நார்வே வீரர் கார்ல்சென், அமெரிக்காவின் காருனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டார். #WorldChampionship #Chess #MagnusCarlsen
  லண்டன்:

  உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனை எதிர்த்து, 8 வீரர்கள் இடையிலான ‘கேன்டிடேட்’ போட்டியில் வெற்றி பெறுபவர் மோதுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 3 வார காலமாக லண்டனில் நடந்து வந்தது. இதில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான மாக்னஸ் கார்ல்சென்னை (நார்வே), ‘கேன்டிடேட்’ போட்டியில் வெற்றி கண்ட அமெரிக்காவின் பாபியானோ காருனா எதிர்கொண்டார்.  12 சுற்றுகள் அடங்கிய இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றும் டிரா ஆனது. 132 ஆண்டு கால உலக செஸ் போட்டி வரலாற்றில், 12 சுற்று ஆட்டங்களில் ஒன்றில் கூட முடிவு கிடைக்காதது இதுவே முதல் நிகழ்வாகும். கடைசி சுற்றில் கார்ல்சென் வெற்றி பெறும் நிலையில் இருந்தார். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் டிராவுக்கு ஒப்புக் கொண்டார். அது தவறான முடிவு என்று முன்னாள் ஜாம்பவான்கள் கேரி காஸ்பரோவ், வினாடிமிர் கிராம்னிக் விமர்சித்தனர். தற்காப்பு ஆட்ட மனநிலையுடன் கார்ல்சென் ஆடிய விதம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

  இந்த நிலையில் இருவரும் தலா 6 புள்ளிகள் வீதம் பெற்று சமநிலை நீடித்ததால், சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்க ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றது. இதையடுத்து அதிவேகமாக ஆடக்கூடிய ‘ரேபிட்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இருவரும் 4 சுற்றில் சந்திக்க வேண்டும். அதிக வெற்றி பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

  ‘ரேபிட்’ முறையில் முதல் ரவுண்டில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய கார்ல்சென் 55-வது நகர்த்தலில் ‘செக்’ வைத்து எதிராளியை சாய்த்தார். தொடர்ந்து 2-வது சுற்றில் 28-வது நகர்த்தலிலும், 3-வது சுற்றில் 51-வது நகர்த்தலிலும் வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 27 வயதான கார்ல்சென் 2013-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 4-வது முறையாக பட்டத்தை உச்சிமுகர்ந்திருக்கிறார்.

  கார்ல்சென் கூறும் போது, ‘இது எனக்கு மிகப்பெரிய வெற்றி. காருனா மிகவும் நன்றாக ஆடினார். நான் இதுவரை ஆடிய உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலேயே காருனா தான் வலிமையான எதிராளி. மூன்று வார கால டென்ஷனுக்கு பிறகு இப்போது தான் நிம்மதி அடைந்துள்ளேன்’ என்றார்.

  1972-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க வீரர் யாரும் உலக செஸ் போட்டியில் வாகை சூடியதில்லை. நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்ட தீவிரம் காட்டிய காருனாவின் கனவு தகர்ந்தது. ‘ரேபிட் சுற்றில் கார்ல்செனுக்கு நெருக்கடி கூட கொடுக்க முடியவில்லை. மொத்தத்தில் மோசமான நாளாக அமைந்தது’ என்று தோல்விக்கு பிறகு 26 வயதான காருனா குறிப்பிட்டார்.கார்ல் செனுக்கு ரூ.4 கோடியே 37 லட்சமும், காருனாவுக்கு ரூ.3 கோடியே 57 லட்சமும் பரிசுத்தொகையாக கிடைத்தது.  #WorldChampionship #Chess #MagnusCarlsen
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியினர் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். #Punjab #LocalBodyElection #Congress
  சண்டிகர்:

  பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 22 ஜில்லா பரிஷத்களில் மொத்தமுள்ள 353 மண்டலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 331 இடங்களிலும், சிரோன்மனி அகாலிதளம் 18 இடங்களிலும், பாஜக மற்றும் பிற கட்சிகள் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

  இதேபோல், 150 பஞ்சாயத்து சமிதிகளில் மொத்தமுள்ள 2899 மண்டலங்களில் நடைபெற்ற தேர்தலுக்கு 2351 இடங்களில் காங்கிரசும், சிரோன்மனி அகாலி தளம் 353 இடங்களிலும், பாஜக 63 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தகவல்களை மாவட்ட தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது தொடர்பாக பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங் கூறுகையில், எங்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இந்த வெற்றி போய்ச்சேரும். விவசாயிகள் கடன் தள்ளுபடி, போதை மருந்துக்கு எதிரான நடவடிக்கை என அனைத்து விஷயங்களிலும் மக்கள் எங்களுக்கு உறுதுணையாக உள்ளனர் என்பதேயே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என தெரிவித்துள்ளார். #Punjab #LocalBodyElection #Congress
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மலேசிய பாராளுமன்ற தேர்தலில் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #MalaysiaElection #Oppositecoalition #Won
  கோலாலம்பூர்: 

  222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 

  நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. அங்குள்ள வாக்கு சாவடிகளில் வரிசையில் நின்று பொதுமக்கள் ஓட்டு போட்டனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் ஒன்றரை கோடி மக்களில் 69 சதவிகிதம் பேர் வாக்களித்தனர்.

  இதையடுத்து, நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் 54 இடங்களிலும், மகாதிர் முகமது தலைமையிலான பக்கட்டான் ஹரப்பான் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்கள் 51 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன.   இந்நிலையில், மலேசியா தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
   
  இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் மகாதிர் முகம்மது இருவரும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சி அமைக்க 112 உறுப்பினர்களின் பலம் தேவை என்னும் நிலையில் இந்த தேர்தலில் மகாதிர் முகமதுவின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றுகிறது என தெரிவித்தனர்.

  மலேசியா வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு அங்குள்ள எதிர்க்கட்சியினர் ஆட்சியை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. #MalaysiaElection #Oppositecoalition #Won
  ×