என் மலர்

  நீங்கள் தேடியது "general elections"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் விரைவில் பொது தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஃபேஸ்புக் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. #Facebook  இந்தியாவில் விரைவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி ஃபேஸ்புக் தளத்தில் விளம்பரங்களில் விசேஷ மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய மாற்றங்களின்படி ஃபேஸ்புக்கில் இடம்பெறும் அரசியல் விளம்பரங்களை யார் வழங்கி இருக்கின்றனர், அதற்காக அவர்கள் எவ்வளவு செலவு செய்துள்ளனர் போன்ற விவரங்களை அனைவரும் பார்க்க முடியும்.

  ஒவ்வொரு விளம்பரத்திலும் விளம்பரதாரர்கள் தங்களை அடையாளப்படுத்த அவர்கள் இயக்கும் ஃபேஸ்புக் பக்கம், அல்லது நிறுவனம் உள்ளிட்ட பெயர்களில் ஒன்றை வழங்க வேண்டும். 

  விளம்பரங்களை வழங்கும் போது மற்ற நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடும் போது விளம்பரதாரர் சார்பில் ஃபேஸ்புக்கிற்கு மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி, இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கூடுதலாக வழங்க வேண்டும்.  முன்னதாக இதே திட்டங்களை அமல்படுத்த இருப்பதாக ஃபேஸ்புக் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிவித்தது. இதன் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் அரசியல் விளம்பரங்களை தெளிவாக கண்டறிய முடியும். புதிய விதிமுறைகள் ஃபேஸ்புக் சார்பில் தற்சமயம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இவை பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் அமலாகும் என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

  அரசியல் விளம்பரங்களை பயனர் க்ளிக் செய்யும் போது ஆட் லைப்ரரி எனும் பக்கம் திறக்கும். இங்கு விளம்பரம் தோன்றும் தேதி மற்றும் அவற்றை எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்ற விவரங்களும், இதற்கு விளம்பரதாரர் செலவிட்டிருக்கும் தொகை உள்ளிட்ட விவரங்களை பார்க்க முடியும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வங்காளதேசம் தேர்தலில் ஆளும்கட்சி அபார வெற்றி பெற்றதால் ஷேக் ஹசினா மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நிலையில் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.பி. ஆனார். #BangladeshPM #Hasinawin #Bangladeshelections
  டாக்கா:

  வங்காளதேசத்தில் நேற்று  பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி இடம்பெற்றிருந்த கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது.

  மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று  நடைபெற்ற தேர்தலில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி 281 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் மூன்றாவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா ஆட்சி அமைக்கவுள்ளார்.
   
  கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசினா 2,29,539 வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் வெறும் 123 வாக்குகளை வாங்கி படுதோல்வி அடைந்தார்.  இதேபோல், நரைல் 2 தொகுதியில் போட்டியிட்ட வங்காளதேசம் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் மஷ்ரபே பின் மோர்ட்டாசா 2,74,418 வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் 8,006 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

  எதிர்க்கட்சி தலைவரான கலிதா ஜியா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தலில் நிற்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

  இந்நிலையில், தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற அரசியல் மோதல்களில் 13 பேரும், நேற்று வாக்குப்பதிவின்போது வெடித்த வன்முறை சம்பவங்களில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #BangladeshPM #Hasinawin #Bangladeshelections


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா டிசம்பர் 30-ம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #Bangladeshicourt #KhaledaZia #Bangladeshelections
  டாக்கா:

  வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா(73) ஆட்சிக் காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

  இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கலிதா ஜியாவுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஒரு வழக்கிலும் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவர் டாக்கா நகரில் உள்ள தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  இந்நிலையில், வங்காளதேசம் பாராளுமன்றத்துக்கு டிசம்பர் 30-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட வங்காளதேசம் தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரும் இரு ஊழல் வழக்குகளில் சிறையில் தண்டனை அனுபவித்து வருபவருமான கலிதா ஜியா நீதிமன்றத்தை நாடி இருந்தார்.  இந்த தண்டனைகளை எதிர்த்து மேல் முறையீடு செய்து, வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கலிதாவின் வழக்கறிஞர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

  இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த டாக்கா உயர்நீதி மன்றம், தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தாலும் இரண்டாண்டுகளுக்கு அதிகமான காலம் சிறைவாசம் விதிக்கப்பட்ட ஒருவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க முடியாது என்று அறிவித்து விட்டது. #Bangladeshicourt #KhaledaZia #Bangladeshelections
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் பஞ்சாப் மாகாணத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சி மத்தியிலும் ஆட்சியை பிடிக்கும் என்னும் நிலையில், இம்ரான் கான் பிரதமராக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. #PakistanGeneralPolls #ImranKhan
  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தானில் வருகிற 25-ம் தேதி (புதன் கிழமை) அன்று பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களுக்கான தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி, தெஹ்ரீக் இ இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய 3 முதன்மை கட்சிகள் போட்டியிடுகின்றன.

  இதில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பாகிஸ்தானில் மொத்தம் 342 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

  இவற்றுள் 272 தொகுதிகளில் பொது வேட்பாளர்களுக்கான வாக்கெடுப்பும், மீதமுள்ள தொகுதிகளில் 10 தொகுதிகள் சிறுபான்மையினருக்கும், 60 தொகுதிகள் பெண்களுக்கு எனவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 10 கோடியே 59 லட்சத்து 55 ஆயிரத்து 407 பேர். இதில் 5 கோடியே 92 லட்சத்து 24 ஆயிரத்து 262 ஆண் வாக்காளர்களும்,  4 கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 145 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.  பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் 272 தொகுதிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மிகவும் கடுமையான போட்டி நிலவும் இந்த தேர்தலுக்காக அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது.

  இந்நிலையில், 272 தொகுதிகளில் 141 தொகுதிகள் அதாவது பாதிக்கும் மேலான தொகுதிகள் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. பாகிஸ்தான் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 140 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். குறைந்தது 110 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே கூட்டணி ஆட்சியேனும் அமைக்க முடியும்.  கடந்த முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லிக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதையடுத்து, நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் கைதாகி தற்போது சிறைவாசம் அனுபவித்து வருவதால், அவர் மீதும் அவரது கட்சி மீதும் இருந்த செல்வாக்sகு குறைந்தது.

  இந்நிலையில், பஞ்சாப் உள்ளிட்ட 4 மாகாணங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் வெற்றி பெறும் கட்சியே மத்தியிலும் ஆட்சி அமைக்கும் என்ற நிலை இருந்துவருகிறது.

  அதன் அடிப்படையில், ஏற்கனவே கைபர் பக்துங்கா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் தெஹ்ரீக் இ இன்சாப் பஞ்சாப் மாகாணத்திலும் வெற்றி பெறும் சூழல் இருப்பதால், மத்தியிலும் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆட்சி அமைக்கும் என சமீபத்திய கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது. #PakistanGeneralPolls #ImranKhan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரின் மகள் மரியம் நவாஸ் போட்டியிட இருந்த 2 தொகுதிகளுக்கு வேறு வேட்பாளர்களை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது. #MaryamNawaz #PakistanGenaralElection
  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் மற்றும் அவரது கணவர் ஆகியோர் அவன்பீல்டு ஊழல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

  இந்நிலையில், ஜூலை 25-ம் தேதி பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. லாகூரில் உள்ள என்.ஏ 127 மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பி.பி. 173 ஆகிய இரண்டு தொகுதிகளில் மரியம் நவாஸ் போட்டியிட இருந்தார்.

  தற்போது அவர் தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக அந்த இரு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக வேறு 2 வேட்பாளர்களை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.

  லாகூரில் உள்ள என்.ஏ 127 தொகுதியில் அலி பர்வேஷ் மாலிக்கும், பஞ்சாப் மாகாணத்தின் என்.ஏ 173 தொகுதியில் இர்பான் ஷாஃபி கோக்தர் ஆகியோர் போட்டியிட இருப்பதாக அந்த கட்சி அறிவித்துள்ளது. #MaryamNawaz #PakistanGenaralElection
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் தனது அமைப்பின் சார்பில் 200 வேட்பாளர்களை நிறுத்துகிறார். #PakistanElection #HafizSaeed
  லாகூர்:

  பாகிஸ்தானில் வரும் ஜூலை 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் தங்கள் தொகுதிகளில் களப்பணிகளைத் தொடங்கி உள்ளன.

  இந்நிலையில், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்பும் தேர்தலில் போட்டியிடுகிறது. அந்த அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் 200 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். ஆனால் ஹபீஸ் சயீத் போட்டியிடவில்லை.  அரசியலில் கால் பதித்துள்ள ஜமாத் உத் தவா, மில்லி முஸ்லிம் லீக் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே, இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியான அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் கட்சி (ஏஏடி) பெயரில் ஜமாத் உத்தவா வேட்பாளர்களை களமிறக்குகிது.

  இது தொடர்பாக ஏற்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தின்படி நன்கு படித்த 200 வேட்பாளர்கள் ஏஏடி-யின் சின்னமான நாற்காலி சின்னத்தில் போட்டியிட உள்ளனர். வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததும், கூட்டணி தலைவர்கள் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். #PakistanElection #HafizSaeed

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் நாட்டில் ஜூலை 25-ம் தேதி அன்று பொதுத் தேர்தலை நடத்தலாம் என அதிபர் மம்னூன் ஹுசைனுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. #ElectionCommissionofPakistan #generalpolls #MamnoonHussai
  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தானின் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் வரும் மே 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது. மேலும் காபந்து பிரதம மந்திரிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  இதுதொடர்பாக கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி, எதிர்க்கட்சி தலைவர் குர்ஷித் ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

  இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் உள்ள தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடங்கி உள்ளது.

  இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் ஜூலை 25-ம் தேதி அன்று பொதுத் தேர்தலை நடத்தலாம் என அதிபர் மம்னூன் ஹுசைனுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. #ElectionCommissionofPakistan #generalpolls #MamnoonHussain
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மலேசிய பாராளுமன்ற தேர்தலில் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #MalaysiaElection #Oppositecoalition #Won
  கோலாலம்பூர்: 

  222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 

  நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. அங்குள்ள வாக்கு சாவடிகளில் வரிசையில் நின்று பொதுமக்கள் ஓட்டு போட்டனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் ஒன்றரை கோடி மக்களில் 69 சதவிகிதம் பேர் வாக்களித்தனர்.

  இதையடுத்து, நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் 54 இடங்களிலும், மகாதிர் முகமது தலைமையிலான பக்கட்டான் ஹரப்பான் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்கள் 51 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன.   இந்நிலையில், மலேசியா தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
   
  இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் மகாதிர் முகம்மது இருவரும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சி அமைக்க 112 உறுப்பினர்களின் பலம் தேவை என்னும் நிலையில் இந்த தேர்தலில் மகாதிர் முகமதுவின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றுகிறது என தெரிவித்தனர்.

  மலேசியா வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு அங்குள்ள எதிர்க்கட்சியினர் ஆட்சியை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. #MalaysiaElection #Oppositecoalition #Won
  ×