search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது - ஆட்சியை பிடிப்பாரா இம்ரான் கான்?
    X

    பாகிஸ்தானில் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது - ஆட்சியை பிடிப்பாரா இம்ரான் கான்?

    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் பஞ்சாப் மாகாணத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சி மத்தியிலும் ஆட்சியை பிடிக்கும் என்னும் நிலையில், இம்ரான் கான் பிரதமராக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. #PakistanGeneralPolls #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வருகிற 25-ம் தேதி (புதன் கிழமை) அன்று பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களுக்கான தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி, தெஹ்ரீக் இ இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய 3 முதன்மை கட்சிகள் போட்டியிடுகின்றன.

    இதில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பாகிஸ்தானில் மொத்தம் 342 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    இவற்றுள் 272 தொகுதிகளில் பொது வேட்பாளர்களுக்கான வாக்கெடுப்பும், மீதமுள்ள தொகுதிகளில் 10 தொகுதிகள் சிறுபான்மையினருக்கும், 60 தொகுதிகள் பெண்களுக்கு எனவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 10 கோடியே 59 லட்சத்து 55 ஆயிரத்து 407 பேர். இதில் 5 கோடியே 92 லட்சத்து 24 ஆயிரத்து 262 ஆண் வாக்காளர்களும்,  4 கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 145 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.



    பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் 272 தொகுதிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மிகவும் கடுமையான போட்டி நிலவும் இந்த தேர்தலுக்காக அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், 272 தொகுதிகளில் 141 தொகுதிகள் அதாவது பாதிக்கும் மேலான தொகுதிகள் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. பாகிஸ்தான் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 140 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். குறைந்தது 110 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே கூட்டணி ஆட்சியேனும் அமைக்க முடியும்.



    கடந்த முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லிக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதையடுத்து, நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் கைதாகி தற்போது சிறைவாசம் அனுபவித்து வருவதால், அவர் மீதும் அவரது கட்சி மீதும் இருந்த செல்வாக்sகு குறைந்தது.

    இந்நிலையில், பஞ்சாப் உள்ளிட்ட 4 மாகாணங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் வெற்றி பெறும் கட்சியே மத்தியிலும் ஆட்சி அமைக்கும் என்ற நிலை இருந்துவருகிறது.

    அதன் அடிப்படையில், ஏற்கனவே கைபர் பக்துங்கா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் தெஹ்ரீக் இ இன்சாப் பஞ்சாப் மாகாணத்திலும் வெற்றி பெறும் சூழல் இருப்பதால், மத்தியிலும் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆட்சி அமைக்கும் என சமீபத்திய கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது. #PakistanGeneralPolls #ImranKhan
    Next Story
    ×