search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மஞ்சுவிரட்டில் 126 வீரர்கள் பங்கேற்பு
    X

    கிருஷ்ணாபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.

    மஞ்சுவிரட்டில் 126 வீரர்கள் பங்கேற்பு

    • மஞ்சுவிரட்டில் 126 வீரர்கள் பங்கேற்றார்.
    • துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 17-வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி வடமாடு மஞ்சு விரட்டு கண்ணன் கோவில் திட லில் நடந்தது.

    தி.மு.க. மாவட்ட செய லாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிருஷ்ணாபுரம் கிராம தலைவரும், ஜல்லிக்கட்டு வடமாடு எருதுகட்டு பேரவை தலைவருமான ஆதித்தன் வரவேற்றார்.

    பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் போட்டியில் பங்கேற்றன. போட்டியில் முதல் காளை யாக காஞ்சிரங்குடி செவளைக்காளை களமிறக்கப்பட்டது. 9 பேர் கொண்ட குழு வினர் மாடுபிடிக்க அனுமதிக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் சோளம்பட்டி தங்கம் நினைவு குழு வீரர்கள் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசு பெற்றனர்.

    காளைகளில் செல்வ குமார் என்பவரது காளை சிறப்பு பரிசு பெற்றது. மாடுபிடி வீரர்களுக்கு 25 நிமிடங்கள் காளையை பிடிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.

    இதில் மாவட்ட கவுன்சிலர்கள் மண்டபம் மேற்கு கவிதா கதிரேசன், திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் புல்லாணி, திருப்புல்லாணி மேற்கு கார்த்திகேஸ்வரி கொத்த லிங்கம், ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சங்கு (எ) முத்து ராமலிங்கம், திருப்புல்லாணி கிழக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன், காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவர் முனியசாமி, மதுரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கிருஷ்ணா புரம் கிராம பொதுமக்கள், விளை யாட்டுக்குழு, அனைத்து மகளிர் மன்றங்கள் செய்திருந்தன. போட்டியை காண்பதற்கு பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×