search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதுரங்கம்"

    • மூளை வளர்ச்சியை தூண்ட சில விளையாட்டுகள் உதவும்.
    • விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

    குழந்தைகளின் மூளை வளர்ச்சியை தூண்டும் விளையாட்டுகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

    குழந்தைகள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான தனித்துவத்தோடு பிறக்கிறார்கள். சுற்றுச்சூழல் காரணிகள் அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிறந்தது முதல் 5 வயது வரை குழந்தைகளின் மூளை வேகமாக வளரும்.

    அந்த காலகட்டத்தில் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய அவர்களை ஊக்கப்படுத்துவது, சுயக்கட்டுப்பாட்டை கற்பிப்பது, பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறமைகளை வளர்ப்பது, தகவல் தொடர்பை மேம்படுத்த உதவி செய்வது போன்ற செயல்பாடுகளை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்.

    அதன்மூலம் குழந்தைகள் எதையும் அறிவுப்பூர்வமாக பகுப்பாய்வு செய்து பார்ப்பார்கள். அவர்களின் பகுத்தறிவு சிந்தனையை மேம்படுத்திக் கொள்வார்கள். இதற்கு மூளை வளர்ச்சியை தூண்டும் சில விளையாட்டுகள் உதவும்.

     புதிர் விளையாட்டுகள்:

    பலதரப்பட்ட வயதினரையும் ஈர்க்கும் புதிர் விளையாட்டுகள், பல்வேறு வடிவங்களில் சந்தைகளில் கிடைக்கின்றன. குழந்தைகள் தங்களின் கவனத்தை மேம்படுத்துவதற்கும், சிக்கல்களை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இவ்வகை விளையாட்டுகள் உதவுகின்றன. இவற்றை தொடர்ந்து விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும். அவர்களின் பகுத்தறிவும், சிக்கல்களை அணுகும் தன்மையும் மேம்படும்.

     வியூக விளையாட்டுகள்:

    பகடைக்காய், ஏணியும் பாம்பும் போன்ற வியூக விளையாட்டுகள், குழந்தைகளுக்கு சிக்கலான சூழ்நிலைகளில் முடிவுகளை எடுப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கின்றன. இத்தகைய விளையாட்டுகள் மூலம் அவர்கள் திட்டங்களை உருவாக்கவும், அதில் உள்ள ஆபத்துகள் மற்றும் அதனால் கிடைக்கும் ஆதாயங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு சமநிலைப்படுத்தவும் கற்றுக்கொள்ள முடியும். வியூக விளையாட்டுகள் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளின் மாதிரியாக திகழ்பவையாகும்.

     சுடோகு:

    எண் புதிர் விளையாட்டான சுடோகு, குழந்தைகளின் அறிவை மேம்படுத்தும். எண்களை கட்டங்களில் நிரப்புவதன் மூலம் சாத்தியக்கூறுகளை எடை போடுவதற்கும், அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுப்பதற்கும் குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும். சுடோகுவின் மூலம் கணிதம் மற்றும் எண்ணியல் சார்ந்த அறிவையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும்.

     வார்த்தை விளையாட்டுகள்:

    குறுக்கெழுத்துப் புதிர்கள், சொல் தேடல்கள் என பல வகையான வார்த்தை விளையாட்டுகள் உள்ளன. இவை குழந்தைகளின் மொழித்திறனையும், மொழியியல் நுண்ணறிவையும் மேம்படுத்தும். இவ்வகை விளையாட்டுகளின் மூலம் பல்வேறு புதிய சொற்களை தெரிந்துகொள்ள முடியும்.

     சதுரங்கம்:

    உலக அளவில் மூளை வளர்ச்சியைத்தூண்டும் விளையாட்டுகளின் பட்டியலில், இது முதன்மை இடத்தில் உள்ளது. இருவர் மட்டுமே பங்குபெறும் இந்த விளையாட்டில், விளையாடுபவர்கள் விழிப்புணர்வோடு திட்டமிட்டு விளையாடுவது முக்கியமானது. இதில் எதிரிகளின் நகர்வுகளை கணிக்க வேண்டும்.

    நம்முடைய ஒவ்வொரு அசைவிற்கும் எதிரியின் அசைவு என்னவாக இருக்கும் என்பதை கணித்து சாதுரியமாக காய்களை நகர்த்த வேண்டும். சதுரங்கம் குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்த உதவும். பொறுமை, கவனம் மற்றும் முடிவெடுக்கும் திறன்களை இந்த விளையாட்டின் மூலம் வளர்த்துக்கொள்ளவும் முடியும்.

     இசை:

    சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்வேறு வகையான இசைகளை அறிமுகப்படுத்துங்கள். இசைக்கு, நினைவாற்றலை வளமாக்கும் ஆற்றல் உண்டு. அதேபோல, ஏதாவது ஒரு இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக் கொடுங்கள். இந்த பயிற்சிகூட கற்றல் திறனை மேம்படுத்தவும், படிப்பில் நல்ல மதிப்பெண்களை பெறவும் உதவும். தெய்வீக பாடல்களை அவ்வப்போது வீட்டில் ஒலிக்க செய்து அதனை குழந்தை கேட்குமாறு செய்யலாம்.

     5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு...

    ஒன்றரை வயது தொடங்கி ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, பில்டிங் பிளாக் விளையாட்டுகள் சிறப்பானதாக இருக்கும். அதேபோல, செம்மையான இயக்க திறன்களை (பைன் மோட்டார் ஸ்கில்ஸ்) வளர்க்க, வண்ணம் தீட்டுதல், வண்ணங்களை கண்டறிதல் போன்ற பயிற்சிகள் கை கொடுக்கும்.

    வட்டம், சதுரம் போன்ற எல்லைகளுக்குள் வண்ணம் தீட்ட பழகுவதால், புத்திக்கூர்மை அதிகமாகும். மேலும் இரு கைகளையும் பயன்படுத்தி எழுத வைப்பது, ஒரே நேரத்தில் இரு கைகளுக்கும் இருவேறு வேலை கொடுப்பது போன்ற பயிற்சிகளிலும் ஈடுபடுத்தலாம். இது அவர்களது வலது-இடது மூளைகளை தூண்டி, அவர்களை சிறப்பானவர்களாக மாற்ற உதவும்.

    • சர்வதேச சதுரங்க தினம் குறித்து ஆசிரியர் சுந்தர் பேசினார்.
    • மாணவர்களுக்கு சதுரங்கம் விளையாடும் முறைகள் கற்று கொடுக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சர்வதேச நிலவு தினம் மற்றும் சதுரங்க தின கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முன்னதாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சக்கரபாணி அனை வரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு நிலவு தினம் குறித்து பேசினார்.

    தொடர்ந்து, சர்வதேச சதுரங்க தினம் குறித்து ஆசிரியர் சுந்தர் பேசினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு சதுரங்க போட்டியின் விதிமுறைகள், விளையாடும் முறைகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

    இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாணவன் ஜீவன் நன்றி கூறினார்.

    • தேசிய அளவில் பார்வையற்றவர்களுக்கான சதுரங்க போட்டி நடந்தது.
    • சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் 162 பேர் பங்கேற்றனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள விசாலயன் கோட்டை சேது பாஸ்கரா வேளா ண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய அளவில் பார்வையற்ற வர்களுக்கான முதலாவது ''சேது பாஸ்கரா பிடே தரவரிசை சதுரங்க போட்டி'' நடந்தது.

    போட்டியை சேது பாஸ்கரா கல்வி குழுமங்களின் தலைவர் சேது குமணன் தொடங்கி வைத்தார். இதில் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களை சேர்ந்த சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் 162 பேர் பங்கேற்றனர்.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.25 ஆயிரம் சேது பாஸ்கரா கல்வி குழுமம் சார்பில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூ தன்ரெட்டி வழங்கினார். அவர் பேசுகையில், உலக தரமான கல்வியுடன் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்க ளை திறம்பட செய்து வருகிறது, சேது பாஸ்கரா கல்வி குழுமம்.

    இங்கு படிக்கும் மாணவர்கள் மிகப்பெரிய நிலையில் உயர்ந்து சிறப்பிடம் பெறுவார்கள். கண்பார்வையற்ற வர்களுக்கான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு வாழ்த்துக்கள். குறைபாடுள்ளவர்கள் முன்னேறுவதை அனை வரும் பாராட்ட வேண்டும் என்றார். அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் திருப்பதி, கல்லூரி முதல்வர் கருணாநிதி, இயக்குநர் கோபால், ஆலோசகர் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட மற்றும் மாநில அளவில் 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன்.
    • மிகப்பெரிய அளவில் சதுரங்க போட்டியில் சாதனை படைப்பேன்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த மகிழஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் விவசாய கூலி தொழிலாளி பக்கிரிசாமி- புவனேஸ்வரி தம்பதியின் மகள் மகிஷா. இவர் மகிழஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது பள்ளி ஆசிரியர் ஈஸ்வரன் துணையுடன் மாநில அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார்.

    இதுகுறித்து மாணவி கூறியதாவது:-

    வறுமையான குடும்பத்தில் பிறந்து, இடிந்துள்ள வீட்டில் வசிக்கும் நான் பள்ளி ஆசிரியர் உதவியுடனும், எனது 67 வயது பாட்டி பத்மாவதி துணையுடன் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். என் குடும்ப சூழ்நிலையால் என்னால் முறையாக பயிற்சி எடுக்கவும், அதற்கான சாதனங்களை வாங்குவதற்கும் முடியவில்லை. எனவே, கருணை மனம் கொண்டவர்களும், தமிழக அரசும் எனக்கு உறுதுணையாக ஆதரவளித்தால் மிகப்பெரிய அளவில் சதுரங்க போட்டியில் சாதனை படைப்பேன் என கண்ணீர் மல்க கூறினார்.

    • சதுரங்க போட்டியை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.
    • பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.

    கயத்தாறு:

    தமிழக அரசு அறிவித்ததின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் சதுரங்க போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் சதுரங்க போட்டி நடைபெற்றது. பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் மரகதம் தலைமை தாங்கினார். போட்டியை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.

    போட்டியில் மாணவ, மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட உடற்பயிற்சி அலுவலர் பால்சாமி, கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், அரசு மேல்நிலைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்கள் சுப்புராஜ், சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கோகிலா, தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியில் சீர்காழி தாலுக்கா பகுதி மாணவர்கள் பங்கேற்று பெருமை சேர்க்கவேண்டும்.
    • 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பாக சதுரங்கபோட்டி நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி வரவேற்றார். போட்டியினை சீர்காழி எம்.எல்.ஏ எம்.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து, மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியில் சீர்காழி தாலுக்கா பகுதி மாணவர்கள் பங்கேற்று பெருமை சேர்க்கவேண்டும் என்றார்.

    இப்போட்டியில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளி லிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாண விகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், செல்வராஜ், மோகன் செய்திருந்தனர்.

    இதில் பள்ளி மேலா ண்மை குழு தலைவர் தமிழரசி, ஒன்றியக்குழு உறுப்பினர் பூவரசன், ஆசிரியர் சங்க தலைவர் கோவி.நடராஜன், பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏராளமான பள்ளிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சான்றிதழ்களை வழங்கினார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் ஒன்றிய அளவிலான அரசு பள்ளி மாணவ- மாணவிய ர்களுக்கான சதுரங்க போட்டி நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி தலைமையாசிரியர் செந்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர்கள் சத்திய சாய் நாதன், கலை வாணன், தமிழ்வாணன் ஆகியோர் சதுரங்க போட்டி யில் நடுவராக இருந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை தேர்வு செய்தனர்.

    ஏராளமான பள்ளிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் பங்கேற்றனர்.

    போட்டியில் இளையோர் பிரிவில் திருமீயச்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவன் பாவேந்தன் முதலிடத்தையும்,கோவில் திருமாகாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புருஷோத் இரண்டா மிடத்தையும், பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சர்மால்ராஜ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

    மேலோர் பிரிவில் சன்னாநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி திவ்யா முதலிடத்தையும், பேரளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அட்சயா இரண்டாமிடத்தையும், உபய வேதாந்தம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆப்ரின்ஷிபானா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.மேன்மேலோர் பிரிவில் பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் முதலிடத்தையும், பணங்குடி அரசு மேல்நிலை ப்பள்ளி ராஜபிரியன் இரண்டாமிடத்தையும், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ராம்பிரசாத் மூன்றா மிடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாண வர்களுக்கு நன்னிலம் அரசு ஆண்கள்மேல்நி லைப்பள்ளி தலைமை யாசிரியர் சான்றி தழ்களை வழங்கினார்.

    • சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளனர்.
    • விளையாட்டு போட்டியை ஊக்கப்படுத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28ஆம் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க உள்ளன. அடுத்த மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த விளையாட்டுப் போட்டியை ஊக்கப்படுத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன்படி தஞ்சை மாவ ட்டம் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டிகள் பள்ளி கல்வித்துறை சார்பாகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாகவும் இன்று அன்னை சத்யா உள் விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவ- மாணவிகளை கொண்டு நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மாணவர்களுடன் சதுரங்கம் போட்டியில் விளையாடினார். இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், மாவட்ட கல்வி அலுவலர் குழந்தை ராஜ், உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி மற்றும் மாவட்ட விளையாட்டு பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ -மாணவிகளின் பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் வரும் 25-ந் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர்.

    ×