என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு பள்ளியில் சதுரங்க தின கருத்தரங்கம்
Byமாலை மலர்22 July 2023 3:22 PM IST
- சர்வதேச சதுரங்க தினம் குறித்து ஆசிரியர் சுந்தர் பேசினார்.
- மாணவர்களுக்கு சதுரங்கம் விளையாடும் முறைகள் கற்று கொடுக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சர்வதேச நிலவு தினம் மற்றும் சதுரங்க தின கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முன்னதாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சக்கரபாணி அனை வரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு நிலவு தினம் குறித்து பேசினார்.
தொடர்ந்து, சர்வதேச சதுரங்க தினம் குறித்து ஆசிரியர் சுந்தர் பேசினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு சதுரங்க போட்டியின் விதிமுறைகள், விளையாடும் முறைகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாணவன் ஜீவன் நன்றி கூறினார்.
Next Story
×
X