search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரர்கள்"

    • ராமநாதபுரத்தில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
    • இதன் ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    மேஜர் தயான் சந்த் 123-வது பிறந்தநாள் ஆகஸ்ட் 29-ந்தேதி (இன்று) இந்திய விளையாட்டு தினமாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக தேசிய விளையாட்டு தினம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் தயான் சந்த் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி கேக் வெட்டி விளையாட்டு வீரர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

    இதில் ஹாக்கி, 100 மீட்டர் ஓட்டப்போட்டி, சதுரங்கம், கேரம், நடை போட்டி ஆகியய விளையாட்டுகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர் சுங்க இலாகா துறை ஆய்வாளர் சத்யராஜ், இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சட்டக் ராமநாதபுரம் சட்டக் கல்லூரி முதல்வர், ராமநாதபுரம் மாவட்ட ஆக்கி சங்கம் செயலாளர் கிழவன் சேதுபதி, மாவட்ட ஹாக்கி பயிற்சியாளர் மணிகண்டன், உடற்கல்வி ஆசிரியர் இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார்.

    • பள்ளி கல்வித்துறை அந்தந்த மாவட்ட விளையாட்டுத்துறையுடன் இணைந்து தேர்வு போட்டிகளை நடத்தி தகுதியான வீரர்களை தேர்வு செய்கிறது.
    • இப்போட்டியில் 4 மாவட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    திருப்பூர்

    பள்ளி கல்வித்துறை அந்தந்த மாவட்ட விளையாட்டுத்துறையுடன் இணைந்து தேர்வு போட்டிகளை நடத்தி தகுதியான வீரர்களை தேர்வு செய்கிறது. அவ்வகையில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூரை உள்ளடக்கிய கோவை மண்டல அணிக்கான தேர்வு குன்னூரில் துவங்கியது. செப்டம்பர் 9-ந்தேதி வரை நடக்கிறது.

    4 போட்டிகளுக்கான அணிகளுக்கு வீரர், வீராங்கனைகள் திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்மாதம் 31ந் தேதி திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 14, 17 மற்றும், 19 வயது பிரிவுக்கான கூடைப்பந்து வீரர் அணி தேர்வு நடக்கிறது. செப்டம்பர் 4ந்தேதி, கூடைப்பந்து வீராங்கனைகள அணித்தேர்வு நடக்கிறது.

    செப்டம்பர் 2-ந்தேதி நஞ்சப்பா பள்ளியில், மாணவர் கபடி அணித்தேர்வும், ஜெய்வாபாய் பள்ளியில் மாணவிகள் கபடி அணி தேர்வும் நடக்கிறது.

    இப்போட்டியில் 4 மாவட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.   

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.
    • குதிரைக்கு பந்தய தூரமானது 10 மைல், 8 மைல் என நிர்ணயிக்கப்பட்டது.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகே கீழகபிஸ்தலம், ராமானு ஜபுரம் ஊராட்சி மந்தகாரதெருவில் உள்ள அரியநாச்சியம்மன் கோவிலின் மதுஎடுப்பு மற்றும் சந்தன காப்பு உற்சவ திருவிழா நடந்தது.

    இதை முன்னிட்டு கணபதி பிரதர்ஸ் சார்பில் முதலாம் ஆண்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, தேன்சிட்டு மாடு என 3 பிரிவாக நடத்தப்பட்டது.

    மாடுகள் பிரிவில் பந்தய தூரமானது 8 மைல், 6 மைல் என நிர்ணயிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து நடந்த குதிரை வண்டி பந்தயத்தில் நடுக்குதிரை, சிறிய குதிரை என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

    குதிரைக்கு பந்தய தூரமானது 10 மைல், 8 மைல் என நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த பந்தயங்களில் வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்க தொகை மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

    பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ப ட்டிருந்தன.

    மேலும், விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்காக நடமாடும் மருத்துவ வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

    முன்னதாக குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயங்களை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் செல்வபாண்டியர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பந்தயத்தை காண கபிஸ்தலம் சாலையின் இரு ஓரங்களிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரண்டிருந்து ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    • மேலூர் அருகே மஞ்சுவிரட்டு நடந்தது.
    • மஞ்சுவிரட்டையொட்டி கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சருகு வலையபட்டியில் பெரிய கருப்பசாமி மற்றும் பூத கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த பகுதி மக்கள் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் இன்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதைெயாட்டி அங்குள்ள கம்புலியன் கண்மாயில் தொழு அமைக்கப்பட்டு சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்து 220 காளைகள் கொண்டு வரப்பட்டன. கிராம முக்கியஸ்தர்கள் வேட்டி, துண்டுகளை மாடுகளுக்கு அணிவித்தனர். மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

    இதில் மாடுகளை பிடித்த 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். மஞ்சுவிரட்டையொட்டி கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மதுரை வீரர்கள் சிலம்பாட்டத்தில் உலக சாதனை படைத்தனர்.
    • அறக்கட்டளை தலைவர் ராஜதுரை வேல்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை பரவை தனியார் கல்லூரியில் ஆசான் காட்டு ராஜா இலவச சிலம்ப பயிற்சி பள்ளி, ஜல்லிக்கட்டு பேரவை இலக்கிய அணி, பாரத சமூக பண்பாட்டுக் கழகம் இணைந்து நோபல் சாதனை சிலம்ப நிகழ்ச்சியை நடத்தியது. 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் குழு சிலம்பம், மரக்காலில் கண்ணை கட்டிக்கொண்டு 32 வகை சிலம்பம், ஆணிப்பலகை யில் ஒற்றை சிலம்பம், நீர்சிலம்பம், நெருப்பு வளையத்திற்குள் சிலம்பம் என்று 5 மணி நேரம் திறமைகளை வெளிபடுத்தினர்.

    அவர்களுக்கு சான்றிதழ், கோப்பைகள் வழங்கப் பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் மங்கையர்க்கரசி கல்வி குழும செயலாளர் அசோக்குமார், மதுரை இலக்கிய மன்ற துணைத் தலைவர் சம்பத், தமிழ் தேசிய சான்றோர்கள் அறக்கட்டளை தலைவர் ராஜதுரை வேல்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • திருப்புல்லாணி அருகே சமத்துவ எருதுகட்டு விழா நடந்தது.
    • பல கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் கமிட்டியின் நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் தாதனேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் 57-ம் ஆண்டு சமத்துவ எருது கட்டு விழா நடந்தது. இதை ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக காளைகளின் கழுத்தில் வடமாடு கயிறு கட்டப்பட்டு மைதானத்தை சுற்றி வந்தன. இந்த மாடுகளை வீரர்கள் ஆர்வத்துடன் அடக்க முயன்றனர். ஆனால் வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் மாடுகள் ஒவ்வொன்றும் திமிறியபடி மைதானத்தை சுற்றி வலம் வந்தன. ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் 30-க்கும் மேற்பட்ட காளைகள் இந்த சமத்துவ எருது கட்டு விழாவில் கலந்து கொண்டன. எருதுகட்டு விழாவில் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்தர், ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எருதுகட்டு விழாவில் வெற்றி பெற்ற காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.

    எருது கட்டு விழா ஏற்பாடுகளை பொக்கனாரேந்தல், பள்ளபச்சேரி, பால்கரை, முத்து வீரப்பன் வலசை, ராஜ சூரியமடை, கோவிந்தநேந்தல், திருப்புல்லாணி இந்திரா நகர், அச்சடிபிரம்பு, ஆனைக்குடி, வீரன் வலசை, தெற்குதரவை, கொடிக்குளம், வித்தானூர், எல்.கருங்குளம், ஆர்.காவனூர், ராமநாதபுரம் இந்திரா நகர் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் கமிட்டியின் நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

    • மாநில அளவிலான 70-வது சாம்பியன்ஷிப் போட்டி தாம்பரத்தில் நடைபெற உள்ளது.
    • கலந்து கொள்ளும் வீரர்கள் எடை 85 கிலோவிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளர் தியாக இளையரசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாநில அளவிலான 70ஆவது சாம்பியன்ஷிப் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் வரும் 5-ம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் தஞ்சை மாவட்ட கபடி அணிக்கான வீரர்கள் தேர்வு திருக்காட்டுப்பள்ளிசர் சிவசாமி ஐயர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாளை மறுநாள் 3-ம் தேதி (புதன்கிழமை) காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது.

    இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் எடை 85 கிலோவிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

    வயது வரம்பு கிடையாது.

    தகுதியான தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீராங்கனைகள் தோ்வு ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
    • மே 5-ந் தேதி முதல் மே 7ந் தேதி வரையில் நடைபெறுகின்றன.

    திருப்பூர் :

    மாநில அளவிலான கபடி சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்பத ற்கான திருப்பூா் மாவட்ட ஆடவா், மகளிா் கபடி அணிகளுக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வு ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கபடி கழகத்தின் செயலாளா் ஜெயசித்ரா ஏ.சண்முகம் வெளியிட்டு ள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது :- செங்கல்பட்டு மாவட்ட த்தில் மாநில அளவிலான ஆடவா் கபடி சாம்பியன் ஷிப் போட்டிகள் வரும் மே 5-ந்தேதி முதல் மே 7ந்தேதி வரையில் நடைபெறுகின்றன. அதேபோல, கோவை மாவட்டம் மேட்டுப்பாளை யத்தில் மகளிருக்கான மாநில அளவிலான கபடி சாம்பியன் ஷிப் போட்டிகள் மே 12-ந்தேதி முதல் மே 14ந் தேதி வரையில் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் திருப்பூா் மாவட்டத்தின் சாா்பில் பங்கேற்பதற்கான ஆடவா், மகளிா் அணிகளுக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வானது ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

    திருவள்ளுவா் நற்பணி மன்றம் சாா்பில் நடத்தப்படும் மாநில தொடா் கபடிப் போட்டியில் இருந்து வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இப் போட்டியில் பங்கேற்க ஆடவா் 85 கிலோவுக்கு மிகாமலும், மகளிா் 75 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. இதில், தோ்வு செய்யப்படும் வீரா், வீராங்கனைகளுக்கு மாவட்ட கபடிக் கழகத்தின் சாா்பில் பயிற்சி முகாம் நடத்தி மாநில அளவிலான சாம்பியன் ஷிப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவா்.

    மேலும், மதுரையில் ஹரியாணா ஸ்டீல்ஸ் புரோ கபடி போட்டிக்கான ஆள்கள் தோ்வு ஏப்ரல் 30-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக திருப்பூா் மாவட்ட கபடிக் கழகத்தின் சாா்பில் 5 சிறந்த விளையாட்டு வீா்கள் தோ்வு செய்யப்பட்டு மதுரைக்கு அனுப்பிவைக்க ப்படவுள்ளனா். இந்த புரோ கபடிப் போட்டியில் பங்கேற்க வயது வரம்பு சிறுவா்களுக்கு மே 25-ந் தேதியன்று 16 வயதுக்கு உள்பட்டவா்களாக இருக்க வேண்டும். பள்ளிச் சான்றிதழ் அல்லது ஆதாா் அட்டையை எடுத்துவர வேண்டும் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    • தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் பாபநாசத்தில் நடைபெற்றது.
    • தீயணைப்பு படை அலுவலர்களும், தீயணைப்பு துறை வீரர்களும் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையிலும் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலையிலும் தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரம் புதிய பஸ் ஸ்டாண்ட் , பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி மற்றும் முக்கிய இடங்களில் நடைபெற்றது.

    தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தி பொது மக்களுக்கு தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் தீயணைப்பு படை அலுவலர்களும் தீயணைப்பு துறை வீரர்களும் கலந்து கொண்டனர்.

    • நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    விளையாட்டுத்துறையில் சர்வதேச/தேசிய அளவி லான போட்டிகளில் வெற்றி களை பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழ கத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய சர்வதேச அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றி ருக்க வேண்டும். மேலும் அதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

    மத்திய அரசு, பல்கலைக்கழகங்கள் நடத்திய போட்டிகள், ஒலிம்பிக் சங்கம், விளையாட்டு அமைச்சகம் நடத்திய போட்டிகளில் விளையா டியிருக்க வேண்டும். விண்ணப்ப தாரர்கள் ஜனவரி மாதம் 58 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவ ராகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்ற வராகவும் இருக்க வேண்டும். மாத வருமானம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மத்திய-மாநில அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுபவர்கள் விண்ணப் பிக்க முடியாது.

    மேற்கண்ட தகுதியுடை யவர்கள் www.sdat.tn.gbv.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கி, 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
    • 22 மாநிலங்களிலிருந்து 36 அணிகளை சேர்ந்த சுமார் 450 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விளையாடவுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள் விளையாட்டரங்கத்தில் 11 ஆவது அகில இந்திய பாரா வாலிபால் போட்டி பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

    இது தொடர்பான இலச்சி னையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது :-

    இந்திய பாரா வாலிபால் சங்கம், தமிழ்நாடு பாரா வாலி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலி சங்கம் ஆகியவை சார்பிலும், மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைந்து அகில இந்திய அளவிலான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 11 ஆவது அகில இந்திய பாரா வாலிபால் போட்டி தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக உள் விளையாட்டரங்கத்தில் பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கி, 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இந்தப் போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரம், உத்ரகாண்ட், ஜார்கண்ட், பிகார், ராஜஸ்தான், ஒரிசா, மேற்கு வங்கம், திரிபுரா உள்பட 22 மாநிலங்க ளிலிருந்து 36 அணிகளைச் சார்ந்த சுமார் 450 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடவுள்ளனர்.இப்போட்டியிலிருந்து வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, உலக அளவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

    இந்தப் போட்டியைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். நிறைவு நாளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு வெற்றிக் கோப்பையையும், பரிசுத் தொகையையும் வழங்கவுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக அவர், போட்டிக்கான லோகோவை வெளியிட்டார்.

    அப்போது, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சங்கீதா, தமிழ்நாடு பாரா வாலி சங்க மாநிலத் தலைவர் மக்கள் ராஜன், மாவட்ட தடகள சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்ட பாரா வாலி சங்க தலைவர் ராமநாத துளசி அய்யா வாண்டையார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல்உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • வாழ்க்கைத்திறன் மேம்பாட்டுடன் கூடிய விளையாட்டின் முக்கியத்து வத்தைப் பற்றியும் அதனால் மாணவர்கள் அடையும் பலன்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
    • செங்கல்பட்டு மாவட்ட கூடைப்பந்து அணிக்காக விளையாடிய ஹரிச்சந்திரன் ராஜேஷ் ஆகிய பவுண்டேஷன் மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

    தஞ்சாவூர்:

    மாமன்னன் ராஜராஜ சோழன் பவுண்டேஷன்-நில் வாழ்க்கை திறன் மேம்பாட்டுடன் கூடிய கூடைப்பந்து பயிற்சி வகுப்பின் "இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், மாவட்ட கூடைப்பந்து அணிக்காக விளையாடிய வீரர்களை பாராட்டு நிகழ்வும் தஞ்சாவூரில் நடைபெற்றது.

    இந்த நிகழ்விற்கு பவுண்டேஷனின் மாணவன் ஸ்வேதன்ஷூ நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.

    மாமன்னன் ராஜராஜ சோழன்பவுண்டேஷன் சேர்மன் பொறியாளர்இளவரசு முன்னிலை வகித்தார்.

    ஜேசி பொறியாளர் சுரேஷ்குமார் தலைவர் தேர்வு, ஜேசிஐ தஞ்சாவூர் மாமன்னன் ராஜராஜ சோழன் தலைமை உரையாற்றினார்.

    மாமன்னன் ராஜராஜ சோழன் பவுண்டேஷனின் நிறுவனரும், முன்னாள் சர்வதேச கூடைப்பந்து நடுவ ருமான 'ஏசியாட்' முனைவர் ரமேஷ்குமார் துரைராஜு வாழ்க்கைத்திறன் மேம்பாட்டுடன் கூடிய விளையாட்டின் முக்கியத்து வத்தைப் பற்றியும் அதனால் மாணவர்கள் அடையும் பலன்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.

    கௌரவ விருந்தினராக மேகளத்தூர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி ஜோஸ்பின் ஆல்பர்ட் மேரி, சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர்இன்னிசை சுகுமாரன் ஆகியோர் மாணவர்கள் எதிர்கா லத்தில் தலைசிறந்த தலைவர்களாக உருவாக தற்காலத்தில் எந்தெந்த பகுதியில் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று பேசினர்.

    சமீபத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற 13 வயதுக்கு ட்பட்ட மாநில அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தஞ்சை மாவட்ட கூடைப்பந்து அணிக்கு தலைவராக விளையாடிய கனிஷ்கர் மற்றும் அனிருத்தன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கூடைப்பந்து அணிக்காக விளையாடிய ஹரிச்சந்திரன் ராஜேஷ் ஆகிய பவுண்டேஷன் மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

    முடிவில் பவுண்டேஷன் மாணவர் அமுதன் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    ×