search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "betting"

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.
    • குதிரைக்கு பந்தய தூரமானது 10 மைல், 8 மைல் என நிர்ணயிக்கப்பட்டது.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகே கீழகபிஸ்தலம், ராமானு ஜபுரம் ஊராட்சி மந்தகாரதெருவில் உள்ள அரியநாச்சியம்மன் கோவிலின் மதுஎடுப்பு மற்றும் சந்தன காப்பு உற்சவ திருவிழா நடந்தது.

    இதை முன்னிட்டு கணபதி பிரதர்ஸ் சார்பில் முதலாம் ஆண்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, தேன்சிட்டு மாடு என 3 பிரிவாக நடத்தப்பட்டது.

    மாடுகள் பிரிவில் பந்தய தூரமானது 8 மைல், 6 மைல் என நிர்ணயிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து நடந்த குதிரை வண்டி பந்தயத்தில் நடுக்குதிரை, சிறிய குதிரை என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

    குதிரைக்கு பந்தய தூரமானது 10 மைல், 8 மைல் என நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த பந்தயங்களில் வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்க தொகை மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

    பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ப ட்டிருந்தன.

    மேலும், விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்காக நடமாடும் மருத்துவ வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

    முன்னதாக குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயங்களை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் செல்வபாண்டியர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பந்தயத்தை காண கபிஸ்தலம் சாலையின் இரு ஓரங்களிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரண்டிருந்து ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    • தொடர்ந்து சைக்கிள் ஓட்டும் பந்தயமும் நடைபெற்றது.
    • 1 முதல் 4 இடம் பிடித்த வண்டிகளுக்கு ரூ.3 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அடைக்கலம் காத்த அய்யனார் குரூப்ஸ் மற்றும் வள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    பேராவூரணி ஆவணம் சாலையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தின் முதல் போட்டியை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.திருஞானசம்பந்தம், சிங்கப்பூர் தொழிலதிபர் செல்வராசு, தென்னங்குடி ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் க.அன்பழகன், அதிமுக நகர செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன், பேரூராட்சி கவுன்சிலர் மகாலெட்சுமி சதீஷ்குமார் மற்றும் பொன்காடு கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பெரிய மாடு பந்தயத்தில் 14 வண்டிகள், நடு மாடு பந்தயத்தில் 19, பூஞ்சிட்டு மாடு பந்தயத்தில் 47 வண்டிகள் பங்கு பெற்றது. அதனைத் தொடர்ந்து பெரிய குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

    இதில் 12 குதிரை வண்டிகள் ஓடியது. தொடர்ந்து சைக்கிள் ஓட்டும் பந்தயம் நடைபெற்றது.

    தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் பங்கேற்றது.

    போட்டியில் முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாமிடம், நான்காவது இடத்தில் வந்த வண்டிகளுக்கு ரூ.3 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டது.

    கொடி பரிசாக ஆட்டு கிடா, செல்போன் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை தனவேந்தன் ஒருங்கிணைத்தார்.

    பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பந்தயங்களை கண்டுகளித்தனர்.

    ஐபிஎல் டி20 லீக்கில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா விருப்பம் தெரிவித்துள்ளார். #IPL #KXIP
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் உலகளவில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. வளர்ச்சி பெற்ற ஐபிஎல் சூதாட்டம் என்ற வார்த்தையால் கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

    ஐபிஎல் மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் ஸ்ரீசந்த் உள்பட சில வீரர்கள் தங்கள் கேரியரை இழந்தனர். இந்தியாவில் சூதாட்டம் சட்டப்பூர்வம் ஆக்கப்படாததால் மறைமுகமாக நடைபெற்று வருகிறது. இதில் சில வீரர்கள் தவாறாக வழிநடத்தப்பட வாய்ப்பு உள்ளதால், ஊழல் கண்காணிப்பு பிரிவு ஐபிஎல் தொடர் நடைபெறும்போது மிகவும் விழிப்போடு கண்காணித்து வருகிறது.

    லோதா கமிட்டி பரிந்துரையில் கூட சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாம் என்று கூறியிருந்தது. அதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

    இந்நிலையில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ப்ரீத்தி ஜிந்தா கூறுகையில் ‘‘அரசு சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கினால் அது சிறப்பானதாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். ஏனென்றால், வருமானத்திற்கு சிறந்ததாக இருக்கும். இரண்டாவது, அப்படி செய்தால் சூதாட்டம் போன்றவற்றை நிறுத்த முடியும்.



    ஏனென்றால், உங்களால் எத்தனை மக்களை நிறுத்த முடியும்?. அடிக்கடி உண்மை கண்டறியும் சோதனையை ரேண்டம் முறையில் நடத்த வேண்டும் என்று நான் சொல்கிறேன். இதை பிசிசிஐ ஒரு கொள்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் அற்புதமானது.

    நான் பிடிபட்டு விடுவேன் என்று ரசிகர்கள் பயந்து கொண்டே இருக்க வேண்டும் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த அளவிற்கு போலீசால் மக்களை பயமுறுத்த முடியாது’’ என்றார்.
    ×