search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும்- ப்ரீத்தி ஜிந்தா விருப்பம்
    X

    ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும்- ப்ரீத்தி ஜிந்தா விருப்பம்

    ஐபிஎல் டி20 லீக்கில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா விருப்பம் தெரிவித்துள்ளார். #IPL #KXIP
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் உலகளவில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. வளர்ச்சி பெற்ற ஐபிஎல் சூதாட்டம் என்ற வார்த்தையால் கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

    ஐபிஎல் மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் ஸ்ரீசந்த் உள்பட சில வீரர்கள் தங்கள் கேரியரை இழந்தனர். இந்தியாவில் சூதாட்டம் சட்டப்பூர்வம் ஆக்கப்படாததால் மறைமுகமாக நடைபெற்று வருகிறது. இதில் சில வீரர்கள் தவாறாக வழிநடத்தப்பட வாய்ப்பு உள்ளதால், ஊழல் கண்காணிப்பு பிரிவு ஐபிஎல் தொடர் நடைபெறும்போது மிகவும் விழிப்போடு கண்காணித்து வருகிறது.

    லோதா கமிட்டி பரிந்துரையில் கூட சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாம் என்று கூறியிருந்தது. அதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

    இந்நிலையில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ப்ரீத்தி ஜிந்தா கூறுகையில் ‘‘அரசு சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கினால் அது சிறப்பானதாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். ஏனென்றால், வருமானத்திற்கு சிறந்ததாக இருக்கும். இரண்டாவது, அப்படி செய்தால் சூதாட்டம் போன்றவற்றை நிறுத்த முடியும்.



    ஏனென்றால், உங்களால் எத்தனை மக்களை நிறுத்த முடியும்?. அடிக்கடி உண்மை கண்டறியும் சோதனையை ரேண்டம் முறையில் நடத்த வேண்டும் என்று நான் சொல்கிறேன். இதை பிசிசிஐ ஒரு கொள்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் அற்புதமானது.

    நான் பிடிபட்டு விடுவேன் என்று ரசிகர்கள் பயந்து கொண்டே இருக்க வேண்டும் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த அளவிற்கு போலீசால் மக்களை பயமுறுத்த முடியாது’’ என்றார்.
    Next Story
    ×