என் மலர்tooltip icon

    உலகம்

    வெனிசுலா அதிபர் மதுரோவின் வீழ்ச்சி குறித்து ஆன்லைனில் பந்தயம் கட்டி ரூ. 3.4 கோடியை அள்ளிய நபர்
    X

    வெனிசுலா அதிபர் மதுரோவின் வீழ்ச்சி குறித்து ஆன்லைனில் பந்தயம் கட்டி ரூ. 3.4 கோடியை அள்ளிய நபர்

    • ஜனவரி 31-க்குள் அமெரிக்கா வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் அல்லது மதுரோ பதவி விலகுவார் என்று பந்தயம் காட்டினார்
    • வெறும் 96 டாலருக்கு ஒப்பந்தங்களை வாங்கினார்.

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ பதவியிலிருந்து தூக்கியெறியப்படுவார் என்று ஆன்லைனில் பந்தயம் கட்டிய மர்ம நபர் ஒருவர், ஒரே நாளில் 4,10,000 டாலர் (சுமார் 3.4 கோடி ரூபாய்) வென்றுள்ளார்.

    Polymarket என்ற பிரபல ஆன்லைன் பந்தய தளத்தில், கடந்த டிசம்பர் 27 அன்று, ஜனவரி 31-க்குள் அமெரிக்கா வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் அல்லது மதுரோ பதவி விலகுவார் என்ற பந்தயத்தின் அடிப்படையில் வெறும் 96 டாலருக்கு பெயர் குறிப்பிடாத நபர் ஒருவர் ஒப்பந்தங்களை வாங்கினார்.

    மதுரோவுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தி அவரைப் பிடித்த செய்தி வெளியானவுடன், அந்த நபர் கட்டிய பந்தயத்தின் மதிப்பு தாறுமாறாக உயர்ந்தது. மதுரோவின் வீழ்ச்சி உறுதி செய்யப்பட்டவுடன், அந்த நபரின் லாபம் 4.10 லட்சம் டாலராக எகிறியது.

    அமெரிக்காவின் ராணுவத் திட்டம் குறித்து முன்கூட்டியே தெரிந்த யாரோ ஒருவர்தான் இப்படிப் பந்தயம் கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    Next Story
    ×