search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எருதுகட்டு விழா"

    • கீழக்கரை அருகே மேலவலசை கிராமத்தில் 263-வது ஆண்டு எருதுகட்டு விழா நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அடுத்துள்ள காஞ்சிரங்குடி மேலவலசை கிராமத்தில் பொன்னும் சிறை எடுத்த அய்யனார் கோவிலில் 263-ம் ஆண்டு எருதுகட்டு விழா நடைபெற் றது.

    இதில், 55 கிராமங்களில் இருந்து 55 காளைகள் போட் டியில் பங்கேற்றது. பின்னர் மைதானத்தில் அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக களத் தில் அவிழ்த்து விடப்பட் டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டு அடக்கினர்.

    இதனை காண பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதில், மாடு முட்டியதில் காயமடைந்தவர்கள் ஆம்பு லன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச் சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை கோவில் டிரஸ்டி மேலவலசை கிழவன் தலைமையிலான விழாக் கமிட்டி யினர் சிறப்பாக செய்திருந் தனர்.

    • திருப்புல்லாணி அருகே சமத்துவ எருதுகட்டு விழா நடந்தது.
    • பல கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் கமிட்டியின் நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் தாதனேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் 57-ம் ஆண்டு சமத்துவ எருது கட்டு விழா நடந்தது. இதை ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக காளைகளின் கழுத்தில் வடமாடு கயிறு கட்டப்பட்டு மைதானத்தை சுற்றி வந்தன. இந்த மாடுகளை வீரர்கள் ஆர்வத்துடன் அடக்க முயன்றனர். ஆனால் வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் மாடுகள் ஒவ்வொன்றும் திமிறியபடி மைதானத்தை சுற்றி வலம் வந்தன. ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் 30-க்கும் மேற்பட்ட காளைகள் இந்த சமத்துவ எருது கட்டு விழாவில் கலந்து கொண்டன. எருதுகட்டு விழாவில் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்தர், ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எருதுகட்டு விழாவில் வெற்றி பெற்ற காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.

    எருது கட்டு விழா ஏற்பாடுகளை பொக்கனாரேந்தல், பள்ளபச்சேரி, பால்கரை, முத்து வீரப்பன் வலசை, ராஜ சூரியமடை, கோவிந்தநேந்தல், திருப்புல்லாணி இந்திரா நகர், அச்சடிபிரம்பு, ஆனைக்குடி, வீரன் வலசை, தெற்குதரவை, கொடிக்குளம், வித்தானூர், எல்.கருங்குளம், ஆர்.காவனூர், ராமநாதபுரம் இந்திரா நகர் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் கமிட்டியின் நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

    ×