search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Sports Day"

    • தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.
    • மாணவிகளுக்கு கூடைப் பந்து, பூப்பந்தாட்டம், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் உடற்கல்வித்துறை இணைந்து ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்த் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் காஜா நஜ்முதீன் ஆகியோர் உடற்கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதின் முக்கியத்துவம் குறித்து பேசினர். இயற்பியல் துறைத்தலைவர் முஸ்தாக் அஹமது கான் மற்றும் வணிகவியல் துறைத் தலைவர் நைனா முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவி களுக்கு கூடைப் பந்து, பூப்பந்தாட்டம், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முஹம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா மற்றும் பாத்திமா கனி ஆகியோர் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
    • இதன் ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    மேஜர் தயான் சந்த் 123-வது பிறந்தநாள் ஆகஸ்ட் 29-ந்தேதி (இன்று) இந்திய விளையாட்டு தினமாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக தேசிய விளையாட்டு தினம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் தயான் சந்த் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி கேக் வெட்டி விளையாட்டு வீரர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

    இதில் ஹாக்கி, 100 மீட்டர் ஓட்டப்போட்டி, சதுரங்கம், கேரம், நடை போட்டி ஆகியய விளையாட்டுகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர் சுங்க இலாகா துறை ஆய்வாளர் சத்யராஜ், இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சட்டக் ராமநாதபுரம் சட்டக் கல்லூரி முதல்வர், ராமநாதபுரம் மாவட்ட ஆக்கி சங்கம் செயலாளர் கிழவன் சேதுபதி, மாவட்ட ஹாக்கி பயிற்சியாளர் மணிகண்டன், உடற்கல்வி ஆசிரியர் இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார்.

    • தயான் சந்த் பிறந்த நாள் இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது
    • விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி

    ஆக்கி போட்டியில் ஜாம்பவானாக திகழ்ந்த தயான் சந்த்-ன் பிறந்த நாள் இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று இந்தியாவில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    மேலும், தனது டுவிட்டர் பக்கத்தில் ''தேசிய விளையாட்டு தினத்தில், அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். நாட்டிற்கான உங்களுடைய பங்களிப்பால், இந்தியா பெருமையடைகிறது. பிறந்த நாள் தினத்தில் மேஜர் தயான் சந்திற்கு என மரியாதையை செலுத்துகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கலெக்டர் முரளிதரன் பரிசுகள் வழங்கினார்
    • எந்தவொரு நபரின் வெற்றியும் மன மற்றும் உடல் ஆற்றலைப் பொறுத்தே அமைகிறது என்றார்.

    தேனி:

    தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் கொடியசைத்து தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசு கோப்பைகளை வழங்கி பேசியதாவது,

    தமிழகத்தில் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை உருவாக்கிடும் பொருட்டு எண்ணற்ற விளையாட்டு சார்ந்த திட்டங்களை தீட்டி அரசு செயல்படுத்தி வருகிறது. விளையாட்டு என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் வெற்றிக்கு விடாமுயற்சி, ஒழுங்குமுறை, பொறுமை மற்றும் மிக முக்கியமாக சில உடல் செயல்பாடுகள் அதாவது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தேவை. வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபட விளையாட்டு சிறந்த வழியாகும். எந்தவொரு நபரின் வெற்றியும் மன மற்றும் உடல் ஆற்றலைப் பொறுத்தே அமைகிறது.

    குறிப்பாக மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடும்போது நம்பிக்கையுடன் விளையாடுவதால் அவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி தருகிறது. விளையாட்டில் ஈடுபடும்போது வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் தோல்வியை தாங்கிக் கொள்ளும் தன்மையும், வெற்றியை கொண்டாடிடும் சூழ்நிலையினை விளையாட்டு உருவாக்கி தருகிறது.

    எனவே மாணவ, மாணவியர்கள் கல்வி பயிலுகின்ற போது தங்களுக்குள்ளான விளையாட்டு திறனை வெளிப்படுத்தி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், விளையாட்டு பயிற்சியாளர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட்டுத்துறை இணை மந்திரி வாழ்த்து.
    • நாங்கள் எப்போதும் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெறுகிறோம்.

    இந்திய ஆக்கி விளையாட்டின் தலைசிறந்த வீரராக மேஜர் தியான்சந்த் கருதப்படுகிறார். அவரது பிறந்த நாளான இன்று தேசிய விளையாட்டு தினமாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையொட்டி விளையாட்டு ஆளுமைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான தமது டுவிட்டர் பதிவில், தேசிய விளையாட்டுகள் தினம் மற்றும் மேஜர் தியான்சந்த் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சமீப ஆண்டுகளாக விளையாட்டுகள் மிக சிறந்தவையாக உள்ளன. இந்த நிலைமை தொடரட்டும். இந்தியா முழுவதும் விளையாட்டுக்கள் பிரபலமடையட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


    இந்நிலையில் ஆக்கி வீரர் தியான் சந்த் உருசிலைக்கு விளையாட்டுத்துறை இணை மந்திரி நிசித் பிரமாணிக் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.நாங்கள் எப்போதும் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெறுகிறோம் ஆனால் அது ஒரு விளையாட்டு. தோல்வியும் வெற்றியும் அதன் ஒரு பகுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஒலிம்பிக், பாராலிம்பிக்ஸ் உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிளில் எங்கள் விளையாட்டு வீரர்கள் சிறந்து விளங்கினர். விளையாட்டு கொண்டாடப்பட வேண்டும். மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளை 250க்கும் மேற்பட்ட இந்திய விளையாட்டு ஆணைய மையங்களில் நாங்கள் இன்று கொண்டாடுகிறோம் என்றும், விளையாட்டுத் துறை இணை மந்திரி நிசித் பிரமாணிக் தெரிவித்துள்ளார்.

    ×