search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு
    X

    விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் முரளிதரன் பரிசு வழங்கினார்.

    தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு

    • பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கலெக்டர் முரளிதரன் பரிசுகள் வழங்கினார்
    • எந்தவொரு நபரின் வெற்றியும் மன மற்றும் உடல் ஆற்றலைப் பொறுத்தே அமைகிறது என்றார்.

    தேனி:

    தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் கொடியசைத்து தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசு கோப்பைகளை வழங்கி பேசியதாவது,

    தமிழகத்தில் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை உருவாக்கிடும் பொருட்டு எண்ணற்ற விளையாட்டு சார்ந்த திட்டங்களை தீட்டி அரசு செயல்படுத்தி வருகிறது. விளையாட்டு என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் வெற்றிக்கு விடாமுயற்சி, ஒழுங்குமுறை, பொறுமை மற்றும் மிக முக்கியமாக சில உடல் செயல்பாடுகள் அதாவது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தேவை. வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபட விளையாட்டு சிறந்த வழியாகும். எந்தவொரு நபரின் வெற்றியும் மன மற்றும் உடல் ஆற்றலைப் பொறுத்தே அமைகிறது.

    குறிப்பாக மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடும்போது நம்பிக்கையுடன் விளையாடுவதால் அவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி தருகிறது. விளையாட்டில் ஈடுபடும்போது வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் தோல்வியை தாங்கிக் கொள்ளும் தன்மையும், வெற்றியை கொண்டாடிடும் சூழ்நிலையினை விளையாட்டு உருவாக்கி தருகிறது.

    எனவே மாணவ, மாணவியர்கள் கல்வி பயிலுகின்ற போது தங்களுக்குள்ளான விளையாட்டு திறனை வெளிப்படுத்தி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், விளையாட்டு பயிற்சியாளர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×