search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்தில்"

    • அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.
    • இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் கோபால்(34)இவருடைய தந்தை சுப்பிரமணி (67). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மேட்டூர் சென்று விட்டு மீண்டும் பவானியை நோக்கி வந்து கொண்டி ருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை கோபால் ஓடி வந்தார். சுப்பிரமணி பின்னால் அமர்ந்திருந்தார்.

    அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் கம்பெனி அருகே வந்து கொண்டிருந்த பொழுது வடமாநிலத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (26) என்பவர் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.

    இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த சுப்பிர மணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைய டுத்து அவர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ெமாபட் ஓட்டி வந்த ரவிக்குமார் என்பருக்கு காயம் ஏற்பட்டு பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக ஈரோடு உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சேலம் அப்சரா இறக்கத்தில் இருந்து குகை நோக்கி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்த ஆட்டோ விபத்தில் சிக்கியது.
    • இந்த விபத்தில் மாணவர்கள் அதிஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

    சேலம்:

    சேலம் அப்சரா இறக்கத்தில் இருந்து குகை நோக்கி ஆட்டோ ஒன்று சென்று பள்ளி மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.

    அப்போது ஆட்டோவின் முன்பு சென்று கொண்டி ருந்த மோட்டார் சைக்கிளின் குறுக்கே குடிபோதையில் தள்ளாடிய படி ஒருவர் திடீரென வந்தார். இத னால் தடுமாறிய மோட்டார் சைக்கிளில் சென்றவர் அவர் மீது மோதி கிேழ விழுந்தார். இதனை கவனித்த ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டு ஆட்டோைவ நிறுத்த முயன்றார். ஆனால் நிலை தடுமாறிய ஆட்டோ அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மாணவர்கள் அதிஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

    உடனடியாக அவர்கள் மாற்று வண்டியில் ஏற்றி பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    • விபத்தில் தனயார் நிறுவன ஊழியர் கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த காகம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (48). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் வேலை முடிந்து ஈரோட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் மொடக்குறிச்சி அடுத்த கருந்தேவன்பாளையம் பகுதியில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மூதாட்டி வந்தார்.

    அப்போது அவர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் சந்திரசேகர் கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் காயம் அடைந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாகன விபத்தில் ஒருவர் பலியானார்
    • முதியவர் படுகாயம் அடைந்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், மருதடி கிராமத்தை சேர்ந்த கதிரேசன்(வயது 37). இவரும் அதே பகுதியை சேர்ந்த சின்னையன்(65) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் காரை பிரிவு ரோட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பி சென்ற கொண்டு இருந்தனர். அப்போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கதிரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சின்னையன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
    • பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

    பெரம்பலூர்:

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர்பந்தல் இந்திரா நகர் பிரிவு சாலை அருகே நேற்று முன்தினம் மதியம் சென்று கொண்டிருந்த கார், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் அந்த கார் சாலையோரத்தில் டயர் பஞ்சராகி நின்ற கார் மீதும் மோதி விட்டு நிற்காமல், அருகே உள்ள மரத்தின் மீது மோதி நின்றது.

    இந்த விபத்தில் அந்த காரில் பயணம் செய்த தஞ்சை சிராஜ் நகரை சேர்ந்த ஜானி பாஷாவின் மனைவி மேரிஜான் (வயது 65) படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அந்த காரில் பயணம் செய்த தஞ்சை சிராஜ் நகரை சேர்ந்த ஜஹாங்கீர் மனைவி ஜீனத்பேகம், ரஹீம் மனைவி மகபூபி, பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு ஆசியா நகரை சேர்ந்த அன்வரின் மனைவி சம்சாத்பேகம், மல்லிகை நகரை சேர்ந்த தவுலத் பாஷாவின் மனைவி சுபேதா பேகம், கார் டிரைவர் பட்டுக்கோட்டை பெரிய கடை தெருவை சேர்ந்த தமிழ்வாணனின் மகன் கிருபாகரன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    பஞ்சராகி நின்ற காரின் டயருக்கு பஞ்சர் ஓட்டிக்கொண்டிருந்த தண்ணீர்பந்தலை சேர்ந்த மெக்கானிக் அருண், அந்த காரில் வந்த சென்னை அண்ணா நகரை சேர்ந்த முனிசாமி, கொளத்தூரை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோரும், மோட்டார் சைக்கிளில் வந்த கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா, வடபாதியை சேர்ந்த பெரியசாமி (65), நடராஜனின் மனைவி பூபதி (35) ஆகியோரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெரியசாமி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கே.ஆர்.தோப்பூர்கயிறு குடோன் முன்பு பி ன்னால் வந்தமற்றோரு மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானுர் அருந்ததியர் காலனியை சேர்ந்த பழனிசாமி மகன் செந்தில்வேல் (வயது 38) கூலி தொழிலாளி .இவர் இரும்பாலை அருகே தனது மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கே.ஆர்.தோப்பூர்கயிறு குடோன் முன்பு பி ன்னால் வந்தமற்றோரு மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியது. இதில் செந்தி ல்வேல் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார் .

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் வேல் உயிரிழந்தார் . இதுபற்றி தாய் ஜெக தாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் தாரம ங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் பலியானார்.
    • சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்

    புதுக்கோட்டை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ரசாக் (வயது 54). முன்னாள் ராணுவ வீரரான இவர் நேற்று முன்தினம் காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். புதுக்கோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திருக்கோகர்ணம் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு முன்னால் சென்ற லாரி ஒன்று திடீரென பிரேக் போட்டு நின்றது. இதனால் பின்னால் வந்த ரசாக், லாரியின் பின்பக்கம் மோதினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி கணவன்-மனைவி லாரி மோதியது விபத்தில் பெண் பலியானார்.
    • இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ராஜேஸ்வரி (57). இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சண்முகம் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று ராஜேஸ்வரிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை மருத்துவமனைக்கு கணவர் சண்முகம் தனது மொபட்டில் அழைத்து சென்றார். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று கணவன்-மனைவி இருவரும் மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

    சாந்தி தியேட்டர் பிரிவு அருகே ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக சண்முகம் மொபட் மீது மோதியது. இதில் சண்முகம், ராஜேஸ்வரி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    அப்ேபாது அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கணவன்-மனைவி இருவரையும் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் கோவை அரசு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். சண்முகம் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பவானி அருகிலுள்ள சித்தோடு சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் கார் அவ்வழியாக எதிரே வந்த லாரி மீது மோதி கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டது.
    • விபத்து குறித்து லாரி டிரைவர் கோபால் என்பவரிடம் சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சித்தோடு:

    சேலம் நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளாராக இருப்பவர் சுரேஷ் (50) . இவர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான காரில் சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்றார். காரை டிரைவர் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, கன்னிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பச்சியப்பன் (46) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    கார் பவானி அருகிலுள்ள சித்தோடு, நசியனூர் சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக எதிரே வந்த லாரி மீது மோதி கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் நெடுஞ்சாலைத்துறை கார் டிரைவர் பச்சியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.‌ காரில் பயணம் செய்த சேலம் நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் சுரேஷ் (50) காயத்துடன் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று இறந்த பச்சியப்பன் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனைதொடர்ந்து விபத்து குறித்து லாரி டிரைவர் கோபால் என்பவரிடம் சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விபத்தில் தாய் மகள் பலியான சம்பவம் குறித்து டிராக்டர் டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இன்று பிரேத பரிசோதனை முடிந்து இன்று உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த செல்லம்பகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார்(34). இவர் மொடக்குறிச்சி பூந்துறை ரோட்டில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கோமதி (30). இவர்களுக்கு 4 வயதில் சுகுதி என்ற மகள் உள்ளார். நேற்று கோமதி தனது மகளுடன் நரிகாட்டுவலசு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு மொபட்டில் சென்றார். பின்னர் இரவு தாய் வீட்டில் சென்று விட்டு மீண்டும் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    வேலம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் கருப்பு பாரம் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிராக்டரை முந்திச் செல்வதற்காக கோமதி முயன்றார்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிள் வந்ததால் கோமதி நிலைதடுமாறி மகளுடன் கீழே விழுந்தார். இதில் டிராக்டரின் சக்கரம் ஏறி அவர்கள் 2 பேரு ம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து மொட க்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டிராக்டர் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த கோமதி, சுகுதி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    குமாரபாளையத்தில் விபத்தில் பெண் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் எதிர்மேடு பகுதியில் வசிப்பவர் குப்புலட்சுமி(வயது 54). கூலி தொழிலாளி. இவர் இரவு சேலம் கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு, காளியம்மன் கோவில் பகுதியில் தனது மொபட்டில் சென்றார். அப்போது அந்த வழியே வந்த கார் மோதியதில், குப்புலட்சுமி பலத்த காயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குமார பாளையம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுனர் ஈரோடு, சென்னிமலை ரோட்டை சேர்ந்த மளிகை கடை தொழில் செய்து வரும் கார்த்திகேயன்(31) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் கொல்லப்பட்டி பகுதியில் வசிப்பவர் கோபி(29), கட்டிட தொழிலாளி. இவர் சேலம், கோவை புறவழிச்சாலை, பல்லக்காபாளையம் கொல்லப்பட்டி பிரிவு சாலையில் மொபட்டில் சென்றார்.

    அதே வழியில் வந்த வேன், மோதியதில், கோபி பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குமாரபாளையம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, வேன் ஓட்டுனர் ஈரோடு மாவட்டம், பெருந்துறை ரோடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ், (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீவட்டிபட்டி அருகே மாட்டு வியாபாரி விபத்தில் பலியானார்.

    காடையாம்பட்டி:

    காடையாம்பட்டி அருகே சிங்கார ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 50). இவர் மாட்டு வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் தர்மபுரியில் இருந்து தீவட்டிப்பட்டி அடுத்த காருவள்ளி சனி சந்தைக்கு மாடு வாங்க காரில் வந்தார்.

    இவருடன் அதே பகுதியை சேர்ந்த 3 வியாபாரிகளும் காரில் வந்தனர். கார் தீவட்டிப்பட்டியை அடுத்த அக்ரகாரம் போலீஸ் நிலையம் எதிரில் திரும்பும் போது எதிர்பாராவிதமாக பின்னால் வந்த லாரி காரின் பின்புறத்தில் பலமாக மோதியது.

    இதில் காரில் இருந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காரில் வந்த மற்ற 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    ×