search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் கொலை"

    • சசிகுமார் தினமும் இரவு, பகல் பாராமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் இருப்பவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
    • குடிப்பழகத்தை நிறுத்துமாறு தந்தை மற்றும் சகோதரர்கள் பலமுறை அறிவுரை கூறியும் அதனை சசிக்குமார் ஏற்கவில்லை.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி தெற்கு தெருவில் குடியிருந்து வருபவர் கணபதி. இவருக்கு கந்தசாமி என்ற சசிகுமார் (வயது 28), சரவணகுமார் (24), ராஜா (21) ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர்.

    இதில் மூத்த மகனான சரவணகுமார் திருமணம் முடித்து தந்தையின் வீட்டு அருகே தனிக்குடித்தனம் இருந்து வருகிறார். இளைய மகன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.

    அத்துடன் அவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்துள்ளது. இதனால் சசிகுமார் தினமும் இரவு, பகல் பாராமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் இருப்பவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். குடிப்பழகத்தை நிறுத்துமாறு அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் பலமுறை அறிவுரை கூறியும் அதனை சசிக்குமார் ஏற்கவில்லை.

    இந்நிலையில் இன்று அதிகாலை சசிகுமார் கத்தியால் குத்தப்பட்டு குடல் சரிந்து இறந்த நிலையில் கிடந்துள்ளார். வீட்டின் பின்புறத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணபதி எழுந்து வந்து பார்த்தபோது சசிக்குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவர் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மற்றும் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் குடும்ப பிரச்சனை காரணமாக உடன்பிறந்த சகோதரரே இந்த கொலையை செய்தாரா அல்லது மது அருந்தும் தகராறில் வேறு யாராவது மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு உடலை வீட்டில் வீசிச்சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அருப்புக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஏர்வாடி அருகே காட்டுப்பகுதியில் வாலிபர் தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • கொலை செய்ய தூண்டியதாக பிச்சை ராஜின் மனைவி பொன்செல்வியையும் வழக்கில் சேர்த்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த கீழத்திடியூர் பகுதியை சேர்ந்தவர் அல்லல் காத்தான் என்ற கார்த்திக் (வயது 24). இவர் நெல்லை வேளாண் துறையில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் கார்த்திக் நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான பேச்சி முத்துவுடன் நெல்லைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த 4 பேர் கும்பல் பணகுடி அருகே வைத்து மோட்டார் சைக்கிள் மீது காரை மோதவிட்டு கார்த்திக்கை காரில் கடத்தி சென்றது.

    இந்நிலையில் நேற்று மதியம் ஏர்வாடி அருகே காட்டுப்பகுதியில் அவர் தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் நெல்லையை அடுத்த பேட்டையை சேர்ந்த மதன்(23), கோபால சமுத்திரத்தை சேர்ந்த தளவாய்பாண்டி(23), மானூரை சேர்ந்த கார்த்திக் (31) ஆகியோர் சேர்ந்து அல்லல்காத்தான் என்ற கார்த்திக்கை காரில் கடத்தி சென்று கொன்றது தெரியவந்தது.

    தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    நெல்லை பேட்டையை அடுத்த மயிலப்புரத்தை சேர்ந்தவர் பிச்சைராஜ். அ.தி.மு.க. வட்ட செயலாளராக இருந்த இவர், அப்பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதில் தொடர்புடையவர்கள் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் பிச்சை ராஜை கொன்றவர்களை பழிக்குப்பழியாக கொலை செய்தால் தான் ஆத்திரம் தீரும் என்று அவரது மனைவி பொன்செல்வி புலம்பி வந்துள்ளார். இதைக்கண்ட பிச்சை ராஜின் அண்ணன் மகன் மதன், தங்கை மகன் கார்த்திக் ஆகியோர் வருத்தம் அடைந்துள்ளனர். அவர்கள் எப்படியாவது பிச்சை ராஜை கொலை செய்தவர்களை பழிக்குப்பழியாக கொலை செய்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டி வந்துள்ளனர்.

    இந்நிலையில் கொலையாளிகளை பார்ப்பதற்காக அவர்களது நண்பர் அல்லல்காத்தான் என்ற கார்த்திக் நாகர்கோவில் சென்றுள்ளதை மதனும், கார்த்திக்கும் அறிந்துள்ளனர்.

    இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து திரும்பி வரும்போது அந்த நபரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இதற்காக ஒரு காரில் 2 பேரும் புறப்பட்டுள்ளனர். அப்போது மதன் தனது அக்காள் கணவரான கோபாலசமுத்திரத்தை சேர்ந்த தளவாய் பாண்டியையும் அழைத்துள்ளார். பின்னர் 3 பேரும் அங்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அதன்பின்னர் பணகுடியில் வைத்து கடத்தி சென்றுள்ளனர்.

    இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் கார்த்திக்குடன் வந்த பேச்சிமுத்து தப்பியோடி பணகுடி போலீசில் நடந்த சம்பவங்களை கூறியதன்பேரில் போலீசார் நான்குவழிச்சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை நேற்று ஆய்வு செய்தபோது தான் அவர்களுக்கு ஏர்வாடி பகுதியில் கார்த்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. விசாரணையில் கிடைத்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களை கொலை செய்ய தூண்டியதாக பிச்சை ராஜின் மனைவி பொன்செல்வியையும் வழக்கில் சேர்த்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • ஏர்வாடி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • கார்த்திக்கை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழத்திடியூரை சேர்ந்தவர் அல்லல் காத்தான் என்ற கார்த்திக் (வயது 24).

    இவர் நேற்று இரவு 9 மணி அளவில் பணகுடியில் இருந்து நெல்லை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் தெற்கு வள்ளியூர் 4 வழிச்சாலை அருகே உள்ள பிலாக்கொட்டை பாறை பகுதியில் வந்த போது எதிரே வந்த ஒரு கார் அவர் மீது மோதியது.

    இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக தாக்கி, அவர்கள் வந்த காரில் கடத்தி சென்றனர்.

    இதனைப்பார்த்த அப்பகுதியினர் உடனடியாக பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் மட்டும் சாலையில் கிடந்தது.

    எனவே அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கார்த்திக்கை மர்ம கும்பல் தாக்கி காரில் கடத்தி சென்றது பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் ஏர்வாடி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று தலைதுண்டிக்கப்பட்ட உடலை கைப்பற்றினர். அங்கிருந்து சற்று தொலைவில் துண்டிக்கப்பட்ட தலையும் கிடந்தது. அதனை வைத்து நடத்திய தொடர் விசாரணையில் அவர் நேற்று காரில் கடத்தி செல்லப்பட்ட கார்த்திக் என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து, கார்த்திக்கை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை பேட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார் உரிமையாளர் பிச்சைராஜ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் எடுப்பதற்கான முயற்சியில் கார்த்திக் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. எனேவே பிச்சை ராஜ் கொலை வழக்கில் பழிக்குப்பழியாக கார்த்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெஜின், ராஜேஷ் இருவரும் மது அருந்திவிட்டு குழிக்கோடு பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.
    • கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    தக்கலை:

    தக்கலை அருகே குழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜின் (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் அனீஸ் (30). இவர்கள் இருவரும் நண்பர்கள். இருவரும் ஒன்றாக மது அருந்தும்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரெஜின் நண்பர் அனீசை தாக்கியதாக தெரிகிறது.

    படுகாயம் அடைந்த அனீஸ் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அனீஸ் கொடுத்த புகாரின் பேரில் ரெஜின் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் ரெஜின், ராஜேஷ் இருவரும் மது அருந்திவிட்டு குழிக்கோடு பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று இருவரையும் சரமாரியாக தாக்கினார்கள. கத்தியால் குத்தியதுடன் அந்த பகுதியில் கிடந்த கம்பியாலும், கற்களாலும் தாக்கியதில் ரெஜின் படுகாயம் அடைந்தார்.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. படுகாயம் அடைந்த ரெஜினை சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரெஜின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜேஷ் தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் ரெஜினை தாக்கியது கோழிப்போர்விளை பழ விளையை சேர்ந்த வினித் (24) கூட்டமாவு பகுதியை சேர்ந்த பரத் லியோன் (24), குழிக்கோட்டை சேர்ந்த அருண் (23), ஜெபின் (24), ஜிஜிஸ் (24) மற்றும் கோழிப்போர்விளையை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கைது செய்யப்பட்ட வினித், பரத் லியோன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • திருவொற்றியூர் குப்பம் கடற்கரையில் இரவு முழுவதும் மர்ம நபர்கள் மது குடிப்பது மற்றும் கஞ்சா போதையில் சுற்றி வருகிறார்கள்.
    • கடற்கரையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவொற்றியூர்:

    மணலி, எட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் ஜோதி என்கிற ஜோதீஸ்வரன் (வயது23). இவர் மீது மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளது. நேற்று இரவு ஜோதீஸ்வரன் திருவொற்றியூர் குப்பம் கடற்கரையில் உள்ள ஒரு குடிசையில் தூங்கினார்.

    நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர்கள் அங்கு வந்து குடிசையில் இருந்த ஜோதீஸ்வரனுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் இது மோதலாக மாறியது.

    இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஜோதீஸ்வரனை தரதரவென இழுத்து சென்று அவரது முகத்தில் கத்தியால் கொடூரமாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ஜோதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    மேலும் அந்த கும்பல் அங்கு நின்று கொண்டு இருந்த ஆடு ஒன்றையும் வெட்டினர். இதில் காயம் அடைந்த ஆடு சத்தமிட்டதால் அருகில் உள்ளவர்கள் திரண்டு வந்தனர். அப்போது மர்ம கும்பலை பிடிக்க முயன்ற மணிமாறன் என்பவரின் கையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது ஜோதீஸ்வரன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கையில் காயம் அடைந்த மணிமாறனை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கொலையுண்ட ஜோதீஸ்வரன் உடலும் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    திருவொற்றியூர் குப்பம் கடற்கரையில் இரவு முழுவதும் மர்ம நபர்கள் மது குடிப்பது மற்றும் கஞ்சா போதையில் சுற்றி வருகிறார்கள். அவர்கள் அங்கு மீனவர்கள் பயன்படுத்த கட்டி வைத்து உள்ள சிறிய குடிசைகளில் படுப்பதும் வழக்க மாக உள்ளது. இதேபோல் ஜோதீஸ்வரன் இருந்த போது படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

    முன்விரோதத்தில் திட்டமிட்டு கொலை நடந்ததா? அல்லது கஞ்சா போதையில் மர்ம நபர்கள் ஈடுபட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை நடந்த இடத்திற்கு மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

    இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 2 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கடற்கரையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஜெயராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
    • கொலையுண்ட ஜெயராமன் தனியார் பள்ளி வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அட்டப்பட்டி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. கணவரை இழந்த அவர் தனியாக வசித்து வருகிறார்.

    இவருக்கு சொந்தமான ஒரு வீட்டை நெருங்கிய உறவினரான கீழையூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பயன்படுத்தி வருகிறார். வெங்கடேசன் சென்னையில் மருந்துக்கடை வைத்துள்ளார். இதற்கிடையே மகளின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவர் கீழையூர் வந்திருந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கீழையூரைச் சேர்ந்த அவரது நண்பரான ஜெயராமன் (வயது 42) என்பவரும் கலந்து கொண்டார். பின்னர் ஜெயராமன் மட்டும் அட்டப்பட்டியில் உள்ள வெங்கடேசனின் சமத்துவபுரம் வீட்டிற்கு வந்தார். இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதால் பரமேஸ்வரியின் வீட்டின் முன்பு கட்டிலை போட்டு தூங்கினார்.

    இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஜெயராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

    காலையில் இதைப் பார்த்த அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியாஸ் ரெபோனி, இன்ஸ்பெக்டர் மன்னவன், கீழவளவு சப்-இன்ஸ்பெக்டர் வேல்ச்சாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட ஜெயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்காதல் மற்றும் பெண் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையுண்ட ஜெயராமன் தனியார் பள்ளி வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தற்போது அவர் வேலைக்கு செல்லாமல் இருந்தார்.

    • ஹரீஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • சில நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமக்குடி:

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள குமாரக்குறிச்சியை சேர்ந்தவர் ஹரிஷ் என்ற வாணி கருப்பு (வயது 21). இவரது நண்பர் அபிபாலன் (21). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த வேறு சில நண்பர்களுக்கும் 'கெத்து' காட்டுவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இருப்பினும் ஒன்றாக பழகி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் வழக்கம்போல் இருதரப்பினரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் யார் அதிக கெத்து என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    பின்னர் ஒரு தரப்பினர் அங்கிருந்து கோபமாக சென்றதாக கூறப்படுகிறது. ஹரிசும், அபிபாலனும் அந்த பகுதியில் நின்றிருந்தனர். அப்போது சில மர்ம நபர்கள் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது அவர்களுக்குள் கை கலப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த வாள் மற்றும் கத்தியால் ஹரீசை சரமாரியாக வெட்டினர். மேலும் பீர்பாட்டிலை உடைத்து முகத்தில் தாக்கினர். இதில் நிலைகுலைந்த ஹரீஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    உடனிருந்த அபிபாலனையும் மர்ம நபர்கள் பீர்பாட்டிலால் நெஞ்சில் குத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து பரமக்குடி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அபிபாலனை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் ஹரீஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அபிபாலன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சில நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி அதனடிப்படையில் சில நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுப்பதற்காக எதிர் தரப்பினர் வசிக்கும் வைகை நகர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நண்பர்களுக்குள் யார் கெத்து என்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரமக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஓட்டல் ஊழியருக்கும், லியாகத் அலியின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டல் ஊழியர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத், பஞ்சகுட்டா அடுத்த சந்திராயன் குட்டாவை சேர்ந்தவர் லியாகத் அலி (வயது 30).

    நேற்று முன்தினம் இரவு லியாகத் அலி அதே பகுதியில் உள்ள ஓட்டலுக்கு தனது நண்பர்களுடன் உணவு சாப்பிட சென்றார். லியாகத் அலி தனது நண்பர்கள் அனைவருக்கும் பிரியாணி ஆர்டர் செய்தார்.

    ஓட்டல் ஊழியர் பிரியாணி சப்ளை செய்தார். பிரியாணியை சாப்பிட ஆரம்பித்த லியாகத் அலி மற்றும் அவரது நண்பர்கள் பிரியாணி ருசியாக இல்லை என ஓட்டல் ஊழியரிடன் தெரிவித்தனர்.

    இதனால் ஓட்டல் ஊழியருக்கும், லியாகத் அலியின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தை கண்ட ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் ஒன்று கூடினர்.

    இதையடுத்து ஓட்டலின் ஷட்டரை இழுத்து மூடினர். பின்னர் ஓட்டல் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து லியாகத் அலி மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் கதறி துடித்தனர்.

    இருப்பினும் ஆத்திரம் தீர தாக்கிய ஓட்டல் ஊழியர்கள் பின்னர் அவர்களை வெளியே தூக்கி வீசினர். படுகாயம் அடைந்த லியாகத் அலியை மீட்ட அவரது நண்பர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் லியாகத் அலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் லியாகத் அலியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டல் ஊழியர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கருத்து வேறுபாடு காரணமாக மாரியப்பனை அவரது மனைவி பிரிந்தார்.
    • ஆத்திரம் அடைந்த மாரியப்பன், மகேந்திரனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் இனாம் ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் மகேந்திரனின் பெரியப்பா மகன் மாரியப்பன்.

    மாரியப்பனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக மாரியப்பனை அவரது மனைவி பிரிந்தார். இந்த பிரிவுக்கு மகேந்திரனே காரணம் என்று மாரியப்பன் குற்றம்சாட்டினார். மேலும் இருவரும் உறவினர்கள் என்பதால் அவர்களுக்கிடையே சொத்து தொடர்பான பிரச்சினையும் இருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக அங்குள்ள பொது கிணற்றில் மகேந்திரன் குளிக்க சென்றார். அப்போது அங்கு வந்த மாரியப்பன் மகேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது முற்றியதால் ஆத்திரம் அடைந்த மாரியப்பன், மகேந்திரனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

    முகம் மற்றும் கை, கால்களில் பலத்த காயம் அடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த விருதுநகர் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையுண்ட மகேந்திரனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. மகேந்திரனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இன்று காலை நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி பார்த்திபனை கைது செய்தனர்.
    • மது போதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    சென்னை, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்(வயது32). ஏசி மெக்கானிக். நேற்று இரவு அவர் மந்தவெளி ரெயில் நிலையம் அருகில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்றார். இரவு சாமி ஊர்வலம் நடை பெற்ற போது தினேசுக்கும், அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த தினேஷ் மயங்கி கீழே விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தினேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி பார்த்திபனை கைது செய்தனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை வ.உ.சி. நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் விஜய் (வயது 25).

    இவர் தொழில் ரீதியாக அவ்வபோது வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு ஒரு வாரம், 10 நாட்கள் கழித்து திரும்பி வீட்டிற்கு வருவது வழக்கம்.

    அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது குறித்து தகவலும் விஜய்யின் பெற்றோருக்கு கிடைக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அவர் கிடைக்காததால் கடந்த 21- ந்தேதி திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் விஜயின் செல்போன் எண்ணை சோதனை செய்த போது அவர் கடைசியாக அவரது நண்பரான திருவண்ணா மலை பே கோபுரம் தெருவை சேர்ந்த அருண் என்பவரிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அருண் கூறியதாவது;-

    விஜயும், நானும் கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தோம், அவசர தேவைக்காக விஜயிடம் இருந்து நான் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றேன். அதை என்னால் திருப்பி தர முடியவில்லை. இதனால் விஜய் என்னை பணத்தை திருப்பி கொடுக்குமாறு தொந்தரவு கொடுத்தார்.

    அவரை அழைத்துக்கொண்டு அய்யம்பாளையம் புதூர் பகுதிக்கு சென்றேன். பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கிணற்றின் அருகில் அமர்ந்து மது அருந்தினோம். மது போதையில் இருந்த விஜயை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழுகிய நிலையில் கிடந்த விஜய் உடலை கிணற்றிலிருந்து மீட்டனர். இதையடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அருணை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இறந்த பாஸ்கரன் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 34). சரக்கு வேன் டிரைவர். இவரது மனைவி ஜிந்தா ப்ரீத்தி. கடந்த 3 மாதத்திற்கு முன்பு இவர்களது உறவினர் வளைகாப்பு விழாவில் அதே பகுதியை சேர்ந்த சிவகுரு, பூமிநாதன், பிரேம்குமார் ஆகியோர் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பாஸ்கரன் மற்றும் அவரது நண்பர் அஜய் ஆகியோர் சென்று நடனம் ஆடிக்கொண்டிருந்த 3 பேரிடம் தட்டி கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    இதன் காரணமாக பாஸ்கரன் தரப்பினருக்கும், சிவகுரு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று அஜய் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பூமிநாதன், பிரேம்குமார் உட்பட 3 பேர் முன் விரோதம் காரணமாக அஜய்யை சரமாரியாக தாக்கினார்கள். இந்த தகவல் அறிந்த அஜய் உறவினர்கள் பாஸ்கர், அவரது மனைவி ஜிந்தா ப்ரீத்தி உள்பட 10 பேர் பூமிநாதன் தந்தை பத்மநாபன் வீட்டுக்கு சென்று தட்டி கேட்டனர். அப்போது திடீரென்று பாஸ்கரன் மற்றும் அவருடன் சென்ற 10 பேரை சுத்தி, கட்டை போன்ற ஆயுதங்களால் அதிரடியாக தாக்கினார்கள். பின்னர் இரு தரப்பினருக்குள் கடும் மோதலாக மாறியது.

    இந்த மோதலில் பாஸ்கர் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த நேதாஜி, மகாலட்சுமி, செல்வக்குமார், அஜித் குமார், அஜய் மற்றும் சிவகுரு தரப்பை சேர்ந்த திருமுருகன் ஆகிய 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். ஆனால் பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பரண்டு பிரபு தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாஸ்கர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியதால் ஏராளமானோர் நவநீதம் நகர் மற்றும் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர்.

    இதற்கிடையில் இறந்த பாஸ்கரன் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் இறந்த பாஸ்கரன் மனைவி ஜிந்தா ப்ரீத்தி கொடுத்த புகாரின் பேரில் சிவகுரு, விஷ்ணு, பத்மநாபன், பூமிநாதன், பிரேம்குமார் உட்பட 11 பேர் மீது கொலை வழக்கும், திருமுருகன் கொடுத்த புகாரின் பேரில் முரளி உட்பட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் சிவகுரு, சத்யா, அகிலாண்டம், அருண் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×