search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murder of a teenager"

    • முன்விரோத தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லை பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 22). இவர் சென்னையில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார்.

    இவர் தும்பேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இது தொடர்பான முன்விரோத தகராறில் முரளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.

    அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலையாளி களை பிடிக்க வாணி யம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் முரளி கொலை செய்த வழக்கில், பெண்ணின் அண்ணன் சந்தோஷ் (25) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியை சேர்ந்த சூர்யா (24), அஜித் (24) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். வாலிபர் கொலை செய்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் முரளி கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்த காடீஸ் என்கிற காட்வின் மோசஸ்(32), முரளி காதலித்த பெண்ணின் தம்பி ஏழுமலை (24) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டரிடம் பெற்றோர் மனு
    • போலீசார் தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவே ரிப்பாக்கம் அருகே இளைஞர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யக்கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமரசம் செய்து, கோரிக்கையை மனுவாக அளிக்கும்படி தெரிவித்தனர். இதையடுத்து கொலை செய்யப்பட்ட அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளவரசனின் தாய் செல்வி (வயது 52) என்பவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார்.

    அந்த மனுவில், எனது மகன் இளவரசன் (28), லாரி டிரைவர். இவரை கடந்த 7-ந் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். தொடர்ந்து, கடந்த 15- ம் தேதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் எனது மகனை ஆற்காடு தாலுகா பெருங்கல் மேடு பாலாற்று பகுதியில் கொலை செய்து புதைத்ததாக லோகேஷ் (28), வாசுதேவன் (27), அருண்குமார் (33), பூவரசன் (24) ஆகிய 4 பேரை கைது செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய வேண்டும். என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

    • கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை வ.உ.சி. நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் விஜய் (வயது 25).

    இவர் தொழில் ரீதியாக அவ்வபோது வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு ஒரு வாரம், 10 நாட்கள் கழித்து திரும்பி வீட்டிற்கு வருவது வழக்கம்.

    அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது குறித்து தகவலும் விஜய்யின் பெற்றோருக்கு கிடைக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அவர் கிடைக்காததால் கடந்த 21- ந்தேதி திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் விஜயின் செல்போன் எண்ணை சோதனை செய்த போது அவர் கடைசியாக அவரது நண்பரான திருவண்ணா மலை பே கோபுரம் தெருவை சேர்ந்த அருண் என்பவரிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அருண் கூறியதாவது;-

    விஜயும், நானும் கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தோம், அவசர தேவைக்காக விஜயிடம் இருந்து நான் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றேன். அதை என்னால் திருப்பி தர முடியவில்லை. இதனால் விஜய் என்னை பணத்தை திருப்பி கொடுக்குமாறு தொந்தரவு கொடுத்தார்.

    அவரை அழைத்துக்கொண்டு அய்யம்பாளையம் புதூர் பகுதிக்கு சென்றேன். பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கிணற்றின் அருகில் அமர்ந்து மது அருந்தினோம். மது போதையில் இருந்த விஜயை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழுகிய நிலையில் கிடந்த விஜய் உடலை கிணற்றிலிருந்து மீட்டனர். இதையடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அருணை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் விரைந்தனர்
    • 4 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்

    அரக்கோணம்:

    சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 25). இவரது பெரியம்மா வீடு அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஏ.வி.எம். சர்ச் பகுதியில் உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பிராங்கிளின் அவரது பெரியம்மா வீட்டுக்கு வந்திருந்தார். அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பழைய 8-வது பிளாட்பாரம் உள்ளது.

    செங்கல்பட்டு வழியாக செல்லும் ரெயில்கள் நிற்கும் இந்த பிளாட்பாரம் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது.

    இந்த பிளாட்பாரத்தின் அருகே நேற்று இரவு பிராங்கிளின் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிராங்கிளினை திடீரென சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.

    கும்பல் ஓட ஓட விரட்டி கத்தியால் சரமாரியாக வெட்டினர். உடலில் பலத்த காயம் ஏற்பட்டதால் பிராங்கிளின் சரிந்து விழுந்தார். ஆஸ்பத்தரியில் சேர்க்கபட்ட அவர் இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி, அரக்கோணம் ஏ.எஸ்.பி. அசோக் கிரீஸ் யாதவ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும், குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பாரதி, விநாயகமூர்த்தி, பார்த்தசாரதி, சப்-இன்ஸ் பெக்டர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைத்து எஸ்.பி. உத்தரவிட்டார்.

    இதையடுத்து, தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதி, ரெயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட் சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் பல்வேறு முக்கிய தடையங்கள் கிடைத்து ள்ளது. குற்றவாளிகள் அங்க அடையாளங்கள் மற்றும் அவர்கள் வந்த பாதையின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

    பிராங்கிளினுக்கும் சென்னையை சேர்ந்த சில பேருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்தார்.

    இதனை நோட்டமிட்ட சென்னை கும்பல் திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிராங்கிளின் எதிரிகள் குறித்த விவரங்களை சேகரிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

    குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    • சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலை மாரியம்மன் கோவில் தெரு அருகில் உள்ள துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி விஜயா. இவர்களது மூத்த மகளான சுகுணாவிற்கும், திருவண்ணாமலை.ராம்ஜி நகரை சேர்ந்த சேகர் என்பவரின் மகனும் சுமை தூக்கும் தொழிலாளியுமான ராம்ஜிக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற் றது. பின்னர் அவர்கள் மாமனார் வீட்டோடு வசித்து வந்தனர்.

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராம்ஜி அடிக்கடி குடித்து விட்டு வந்து அவரது மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அவர்க ளுக்கு இடையே சண்டை அதிகமானதால் அவர்களை சுகு ணாவின் தங்கை கல்கி, தடுக்க சென்றார். அப்போது கல்கியை ராம்ஜி கத்தியால் முதுகில் குத்தினார்.

    மேலும் தடுக்க வந்த சுகுணாவின் தாய் விஜயாவையும் அவர் கத்தியால் குத்தினார்.

    இது குறித்து தகவலறிந்த சுகுணாவின் தம்பி பரணி (23), ராம்ஜியிடம் வந்து தட்டி கேட்டு உள்ளார். அவரையும்ராம்ஜி கத்தியால் குத்தி விட்டு தப்பி யோடிவிட்டார். இதில் படுகா யம் அடைந்த பரணி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    படுகாயம் அடைந்த விஜயா, கல்கி ஆகியோர் சிகிச்சைக் காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராம்ஜியை வலை வீசி தேடி வந்தனர். அவர் அந்த பகுதியில் ரெயில்வே தண்டவளப் பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. நள்ளிரவில் அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    • ராஜசேகரன் (வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவு மலைசுத்தி ரோடு மலர்குட்டை அருகே தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார்.
    • நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ராஜசேகரனை நண்பர்கள் அடித்து கொலை செய்து விட்டு உடலில் கல்லை கட்டி மலர் குட்டையில் வீசி சென்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை யடிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவு மலைசுத்தி ரோடு மலர்குட்டை அருகே தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார்.

    அப்போது போதையில் ராஜசேகரனுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ராஜசேகரனை நண்பர்கள் அடித்து கொலை செய்து விட்டு உடலில் கல்லை கட்டி மலர் குட்டையில் வீசி சென்றனர்.

    இதை அடுத்து நேற்று இந்த கொலை தொடர்பாக மலர் குட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் (25), பூவரசன் (23), பிரவீன்ராஜ் (27), விக்னேஷ் (27), பெரிய சாமி (25) ஆகியோர் திருச் செங்கோடு போலீஸ் நிலை யத்தில் சரணடைந்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். இன்று அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவ டிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதற்கு இடையே திருச் செங்கோடு தீயணைப்பாளர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மலர் குட்டையில் கல்லை கட்டி வீசப்பட்ட ராஜசேகரன் உடலை மீட்டனர். பின்னர் ராஜசேகரன் உடலை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீ சார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    முதற்கட்ட விசா ரணை யில், ராஜசேகரனுக்கும் சிலருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு விநாயகர் சிலை வைத்தது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள் ளது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி மதுபோதையில் தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்திய போது மீண்டும் அவர்களுடையே தகராறு ஏற்பட்டு கொலை சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படு கிறது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறுகையில், குடிபோதையில் அவர்கள் அடிக்கடி மோதிக் கொள் வார்கள் . ஒன்றாக அமர்ந்து மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் ராஜ சேகரன் கொலை செய்யப் பட்டுள்ளார். மேலும் இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றனர்.

    • சீட்டு பணம் தகராறில் விபரீதம்
    • 2 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கீழ்மிட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் ( வயது 22).

    இவர் தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெய்பிரகாஷை, மர்ம கும்பல் சிலர் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    தகவல் அறிந்த உமராபாத் போலீசார் விரைந்து வந்து, ஜெயபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பந்தமாக தந்தை - மகன் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் பெரியவரிகம் பகுதியைச் சேர்ந்த ஷூ கம்பெனி தொழிலாளி மாணிக்கம் (21) மற்றும் அவரது தந்தை ராஜ்குமார் (44) ஆகியோர் சீட்டு பணம் தகராறு காரணமாக ஜெயபிரகாஷை கொலை செய்தது தெரிய வந்தது.

    இதனை அடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கீழ் மிட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 22). இவர் தனியார் ஷூ கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு ஜெயபிரகாசை அதே பகுதியில் மர்ம கும்பல் சிலர் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை சம்பந்தமாக தந்தை- மகன் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் ரோட்டோரத்தில் தூங்கிய வாலிபரை மிதித்து கொன்றது மனநலம் பாதிக்கப்பட்ட நபரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அவர் பிணமாக கிடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்

    மதுரை

    மதுரை அனுப்பானடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவருக்கு மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சரவணன் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் இல்லாமல் வெளியே சுற்றுவது வழக்கம். சாப்பிட மட்டும் வீட்டுக்கு வரும் சரவணன் இரவு நேரங்களில் ரோடுகளில் சுற்றி அழைந்து பிளாட்பாரங்களிலேயே தூங்கி விடுவாராம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சரவணன் தவிட்டுச்சந்தை ரோட்டோ ரத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தெற்குவாசல் போலீசார் அங்கு வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரவணனை கொலை செய்தது யார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    அப்போது அவர் பிணமாக கிடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் சரவணன் ரோட்டோரத்தில் தூங்கியிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் திடீரென அவரது கழுத்தில் சரமாரியாக மிதிப்பது பதிவாகி உள்ளது. வலியால் துடித்த சரவணன் சிறிது நேரத்தில் பேச்சு மூச்சின்றி கிடப்பதும் பதிவாகி உள்ளது. இதை வைத்து போலீசார் கொலை செய்த நபரை தேடி வருகின்றனர்.

    சரவணனை கொலை செய்த நபரும் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

    • 4 பேர் கைது
    • பைக் மீது வேன் உரசியதால் கடத்தி கொலை செய்ததாக வாக்குமூலம்

    சோளிங்கர்:

    திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஐயனேரி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்(வயது 22). இசை குழு நடத்தி வந்தார். இவரும், சோளிங்கர் அடுத்த ஆயலாம்பேட்டை பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

    பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

    இதையடுத்து, பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் சரத்குமாரின் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், தலை தீபாவளிக்காக சரத்குமார் தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்றார்.

    கடந்த 24-ந் தேதி தலை தீபாவளியை கொண்டாடினர். அன்று இரவு 7 மணியளவில் சரத்குமார் தனது பைக்கிற்கு பெட்ரோல் போட மாமனார் உமாபதியுடன், சோளிங்கர் அடுத்த ஐப்பேடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார்.

    அப்போது, கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 பைக்குகளில் வந்த 7 பேர் கும்பல் திடீரென சரத்குமாரை சரமாரியாக தாக்கியது. அப்போது, தடுக்க முயன்ற உமாபதியை சரமாரியாக தாக்கினர்.

    இதில் உமாபதி லேசான காயமடைந்தார். பின்னர், சரத்குமாரை அந்த கும்பல் பைக்கில் கடத்தி சென்று, சுமார் 2 கி.மீ தொலைவில் கூடலூர் அருகே உள்ள ஒரு மறை வான இடத்தில் வைத்து, சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

    இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நடத்திய விசாரணையில், ஐப்பேடு பகுதியை சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக சரத்குமாரை கடத்தி சென்று கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அரக்கோணம் ஏஎஸ்பி கிரீஸ் யாதவ், அரக்கோணம் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    தொடர்ந்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 'ஐப்பேடு பகுதியை சேர்ந்த தாமோதரன் (24), கோபி (24), அசோக் பாண்டியன் (24), துரைபாண்டியன் (23) ஆகிய 4 பேரை அரக்கோணம் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    தகராறு

    கைதானவர்களிடம் விசாரணை நடத்தியதில் வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் ஞான கொள்ளை பகுதியில் இருந்து ஆர். கே.பேட்டை கிராமத்திற்கு நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சரத்குமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் வேனில் சென்றுள்ளனர்.

    அப்போது ஐப்பேடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சென்ற பைக் மீது வேன் உரசியுள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் வேனில் சென்றவர்கள், பைக்கில் வந்த நபர்களை தாக்கியுள்ளனர். இதில் பைக்கில் வந்தவர்களை ஆர்.கே.பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சரத்குமார் வேனில் வந்தவர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இந்த முன்விரோத தகராறில், எதிர்தரப்பைச் சேர்ந்த கோபி உள்ளிட்டோர் தங்களது கூட்டாளிகள் மூலம் சரத்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.

    இதில் கோபி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இவ்வாறு கூறினர்.

    • குண்டர் சட்டத்தில் ெஜயிலில் அடைத்தனர்
    • ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில் மேலும் நடவடிக்கை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பவர் கடந்த சில மாதங்கள் முன்னர் கை கால்கள் வெட்டப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது சம்பந்தமாக எஸ்பி உத்தரவின் பேரில் அரக்கோணம் டி.எஸ்.பி. பிரபு தலைமையில் பாணாவரம் போலீசார் எஸ்.ஐ. பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இலங்கை அகதிகள் முகாமை சார்ந்த வினோத்குமார் வீராணம் கிராமத்தை சேர்ந்த சரவணன் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த லூயி அரசன் ஆகியோர் கைது செய்து குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைத்தனர்.

    இந்நிலையில் மேலும் இந்த கொலை வழக்கில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராஜா (34) என்பவரும் பானாவரம்அடுத்த வீராணம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (33) ஆகியோர் குண்ட ர் தடுப்பு சட்டத்தின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அவனியாபுரம் அருகே வாலிபர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தங்கையின் சாவுக்கு பழி தீர்த்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம் அருகே உள்ள ஈச்சநேரி பகுதியில் காளிதாஸ் என்ற வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இந்த கொலை வழக்கு சம்பந்தமாக பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காளிதாசின் மனைவி ஒரு மாதத்திற்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் மனைவியின் உறவினர்கள் காளிதாசை கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தனர்.

    இந்த நிலையில் இந்த கொலையில் 3 பேர் சம்பந்தப்பட்டு இருப்பது போலீசுக்கு தெரிய வந்தது.அதன் அடிப்படையில் கீரைத்துறை பகுதியை சேர்ந்த காளிதாஸ் மனைவியின் அண்ணன் வழிவிட்டான் மகன் முத்துபாண்டி (27), சுந்தர்ராஜ் மகன் மாரிமுத்து (19), வில்லாபுரத்தை சேர்ந்த செல்வம் மகன் முத்துப்பாண்டி (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.தங்கையின் சாவிற்கு பழி தீர்க்க காளிதாசை கொன்றார்களா? என்று கைதான 3 வாலிபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×