வாலிபர் கொலையில் தந்தை- மகன் உள்பட 4 சிக்கினர்

உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார் விசாரணை
வாலிபர் கொலையில் தந்தை- மகன் உள்பட 4 சிக்கினர்
Published on

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கீழ் மிட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 22). இவர் தனியார் ஷூ கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு ஜெயபிரகாசை அதே பகுதியில் மர்ம கும்பல் சிலர் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை சம்பந்தமாக தந்தை- மகன் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com