வாலிபர் கொலையில் மேலும் 4 பேர் கைது

முன்விரோத தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார் போலீசார் விசாரணை
வாலிபர் கொலையில் மேலும் 4 பேர் கைது
Published on

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லை பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 22). இவர் சென்னையில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார்.

இவர் தும்பேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இது தொடர்பான முன்விரோத தகராறில் முரளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.

அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் கொலையாளி களை பிடிக்க வாணி யம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் முரளி கொலை செய்த வழக்கில், பெண்ணின் அண்ணன் சந்தோஷ் (25) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியை சேர்ந்த சூர்யா (24), அஜித் (24) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். வாலிபர் கொலை செய்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் முரளி கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்த காடீஸ் என்கிற காட்வின் மோசஸ்(32), முரளி காதலித்த பெண்ணின் தம்பி ஏழுமலை (24) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com