வாலிபர் கொலை வழக்கில் தொழிலாளி கைது

சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர் போலீசார் விசாரணை
வாலிபர் கொலை வழக்கில் தொழிலாளி கைது
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலை மாரியம்மன் கோவில் தெரு அருகில் உள்ள துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி விஜயா. இவர்களது மூத்த மகளான சுகுணாவிற்கும், திருவண்ணாமலை.ராம்ஜி நகரை சேர்ந்த சேகர் என்பவரின் மகனும் சுமை தூக்கும் தொழிலாளியுமான ராம்ஜிக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற் றது. பின்னர் அவர்கள் மாமனார் வீட்டோடு வசித்து வந்தனர்.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராம்ஜி அடிக்கடி குடித்து விட்டு வந்து அவரது மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அவர்க ளுக்கு இடையே சண்டை அதிகமானதால் அவர்களை சுகு ணாவின் தங்கை கல்கி, தடுக்க சென்றார். அப்போது கல்கியை ராம்ஜி கத்தியால் முதுகில் குத்தினார்.

மேலும் தடுக்க வந்த சுகுணாவின் தாய் விஜயாவையும் அவர் கத்தியால் குத்தினார்.

இது குறித்து தகவலறிந்த சுகுணாவின் தம்பி பரணி (23), ராம்ஜியிடம் வந்து தட்டி கேட்டு உள்ளார். அவரையும்ராம்ஜி கத்தியால் குத்தி விட்டு தப்பி யோடிவிட்டார். இதில் படுகா யம் அடைந்த பரணி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த விஜயா, கல்கி ஆகியோர் சிகிச்சைக் காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராம்ஜியை வலை வீசி தேடி வந்தனர். அவர் அந்த பகுதியில் ரெயில்வே தண்டவளப் பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. நள்ளிரவில் அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com