search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாரச்சந்தை"

    • வருகின்ற 15-ந் தேதி தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
    • இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் திருச்சி, சேலம், மதுரை, தேனி, கம்பம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் பல பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து இருந்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம்.

    அதன்படி இன்று நடைபெற்ற இந்த சந்தைக்கு ஆசனூர், குன்னத்தூர், எறையூர், கிளியூர், பாதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    வருகின்ற 15-ந் தேதி தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வார சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை களை கட்டியது. இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் திருச்சி, சேலம், மதுரை, தேனி, கம்பம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் பல பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து இருந்தனர்.

    ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூ. 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது சந்தை தொடங்கி 2 மணி நேரத்திலேயே ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அபிராமம் வாரச் சந்தையில் எடை மோசடி நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • சரியான எடை அளவுடன் விற்பனை செய்ய தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்திற்கு உட்பட்ட காடனேரி, நத்தம், அச்சங்குளம், அகத்தாரிருப்பு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அபிராமத்தில் திங்கட்கிழமை வாரச்சந்தை கூடுகிறது.

    இங்கு பொருட்கள் வாங்கும் பொதுமக்களிடம் வியாபாரிகள் தராசில் இரும்பு எடை கற்களால் எடை போடுகின்றனர். இதில் எடை குறைவாக உள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காய்கறிகளை அள்ளி போட்டு ஒரு பக்க தராசு தட்டு தரையை தொடும் அளவிற்கு செய்கின்றனர்.வீட்டில் எடை போட்டால் குறைகிறது.

    எங்களை வியாபாரிகள் நூதன முறையில் ஏமாற்றுகின்றனர். வசதி உள்ளவர்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்குகிறார்கள். நாங்களோ நம்பி இருப்பது வாரச்சந்தையை தான். சரியான எடை அளவுடன் விற்பனை செய்ய தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எடை கற்கள் மற்றும் எலக்ட்ரானிக் தராசுகளை பயன்படுத்துபவர்கள் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்திரையிட்டு அனுமதி பெற வேண்டும்.

    இதை பெரும்பாலான விற்பனையாளர்கள் பின்பற்றுவதில்லை. இதையும் முறையாக கண்காணிக்க வேண்டும் என்றனர்.

    • வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வாரத்திற்கான காய்கறி மளிகை சாமான்கள் வாங்கி செல்வார்கள்.
    • வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வாரத்திற்கான காய்கறி மளிகை சாமான்கள் வாங்கி செல்வார்கள்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரந்தோறும் ஞாயிறு அன்று வார சந்தை செயல்படும். இந்த வார சந்தைக்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறி பயிர் வகைகள் கொண்டுவந்து விற்பனை செய்வார்கள். வெள்ளகோவில் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வாரத்திற்கான காய்கறி மளிகை சாமான்கள் வாங்கி செல்வார்கள்.

    கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்ததால் விவசாயிகள் அதிக அளவில் விற்பனைக்கு விளை பொருட்களை கொண்டு வரவில்லை. காய்கறிகளை விவசாயிகளிடம் வாங்கி விற்கும் வியாபாரிகளும் அதிக அளவில் வரவில்லை. இதனால் வார சந்தையில் வியாபாரம் குறைவாகவே காணப்பட்டது.

    • 30 விவசாயிகள் 2 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கை க்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். நேற்று 30 விவசாயிகள் 2 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபா ரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.90 முதல் 100 வரைக்கும், மரம் முருங்கை ரூ.95முதல் 100 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.115முதல் 120 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும். சில வாரங்களுக்கு முன்பு முருங்கை பூ பூத்த நிலையில் மழை பெய்ததால் முருங்கைக்காய் வரத்து தற்போது மிகவும் குறைந்துள்ளதாகவும். இன்னும் இரண்டு வாரத்திற்கு வரத்து குறைவாக தான் இருக்கும், தற்போது தென் மாவட்டங்களில் இருந்து தான் மார்க்கெட் மற்றும் ஓட்டல்களுக்கு முருங்கைகாய் வந்து கொண்டு உள்ளது அதானல் விலை உயர்ந்துள்ளது என்று முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • தக்காளி சீசன் என்பதால் அதிக அளவிலான டெம்போ வேன்களில் தக்காளி வந்து இறங்குகிறது.
    • டெம்போ வேன்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை வாரச்சந்தைக்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு வந்து கடைக்காரர்களிடம் விற்பனை செய்கின்றனர். தற்பொழுது தக்காளி சீசன் என்பதால் அதிக அளவிலான டெம்போ வேன்களில் தக்காளி வந்து இறங்குகிறது. ஆனால் உடனடியாக லோடுகளை இறக்க முடியாததாலும் கடைகள் முன்பு நீண்ட நேரம் வண்டியை நிறுத்தி வைப்பதாலும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

    இது தொடர்பாக விவசாயிகள் ,கலாசு தொழிலாளர்கள் , வியாபாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயிகள் தக்காளி வண்டிகளை நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கலாசு தொழிலாளிகள் இது குறித்து கூறுகையில், வாரச்சந்தை வளாகம் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடை முன்பு வண்டியை நிறுத்தக்கூடாது என்கின்றனர். எனவே காய்கறிகளை ஏற்றி இறக்க முடியவில்லை என்றனர். விவசாயிகள் கூறுகையில் லோடு வந்தால் இறக்க ஆட்கள் வருவதில்லை. முதல் நாள் வந்தால் மறுநாள் வருவதில்லை.

    அதனால் தான் இன்று வண்டியை நிறுத்தி உள்ளோம். இனி நாங்களே இறக்கி கொள்கிறோம். கூலியை அவர்கள் வைத்துக் கொள்ளட்டும் என்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த உடுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்.

    • ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் வாரச்சந்தை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    • கடைகள் ஆக்கிரமிப்பால் பஸ்சை இயக்குவதற்கு டிரைவர்கள் சிரமம் அடைகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை சந்தை நடக்கிறது. சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    சந்தைக்கு இடவசதி இல்லாததால் வியாபாரிகள் ரோட்டில் கடை விரித்து இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு வியாபாரம் செய்கின்றனர். தற்போது ரோட்டோரங்களில் இடம் இல்லாததால் பஸ் நிலைய வளாகத்திற்குள் தன்னிச்சையாக நீண்ட வரிசையில் தரைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    ஏற்கனவே பஸ்கள் நிறுத்துவதற்கு இடம் இல்லாத நிலையில் சந்தை வியாபாரிகளும் கடை விரித்து விட்டதால் பஸ்சை இயக்குவதற்கு டிரைவர்கள் சிரமம் அடைகின்றனர். பஸ்கள் வருவது கூட தெரியாத நிலையில் மக்கள் அலை மோதி வருகின்றனர்.

    இதனால் விபத்து அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.சந்தை பகுதியில் போலீசாரும் பாதுகாப்புக்கு கிடையாது. இதன் காரணமாக பஸ்நிலைய வளாகத்தில் நடை பாதை கடைகள் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பான முறையில் வாரச்சந்தை இயங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • 90 விவசாயிகள் 20 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ முருங்கை ரூ.15 முதல் ரூ.25 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிற்றுக்கிழமைதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    அந்தவகையில் இந்த வாரம் 90 விவசாயிகள் 20 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.15 முதல் ரூ.17 வரைக்கும், மரம் முருங்கை ரூ.12 முதல் ரூ.15 வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.18 முதல் ரூ.25 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    • உடன்குடி சந்தையில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய பேரூராட்சி சார்பில் ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டது.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சந்தை மேம்பாட்டுப்பணிகள் நடைபெறவுள்ள இடங்களை ஆய்வு செய்தார்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட் டத்தின் 2-வது மிகப்பெரிய வாரச்சந்தை உடன்குடி மெயின் பஜார் 4 சந்திப்பில் தினசரி மக்கள் கூடும் இடத்தல் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யவும், சுற்றுப்புற பகுதியில் உள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் பொருட்களை வாங்கவும் திங்கள்கிழமை தோறும் இங்கு வருவார்கள்.

    இச்சந்தையில் வியபாரிகள், பொதுமக்களுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய உடன்குடி பேரூராட்சி சார்பில் ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டது

    இப்பணிகளை மேற்கொள்வதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு உடன்குடிபேரூராட்சி மன்றத் தலைவி ஹூமைரா ஆஸ்ஸாப் கல்லாசி தலைமை தாங்கினார்.பேரூராட்சி துணைத்தலைவர் சந்தையடியூர்மால்ராஜேஷ், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், ஒன்றியக்குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், பேரூராட்சி செயல் ஆலுவலர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று அடிக்கல்லை நாட்டி சந்தை மேம்பாட்டுப்பணிகள் நடைபெறவுள்ள இடங்களை ஆய்வு செய்தார்.

    வியாபாரிகள் சிறந்த முறையில் பொருட்களை விற்கும் வகையிலும், பொதுமக்கள் எந்தவித இடையூறுமின்றி பொருட்களை வாங்கக் கூடிய வகையிலும் மேம்பாட்டுப் பணிகளை சிறப்பாக செய்யவேண்டும் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் வலியுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்ககர், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், பேரூராட்சி மன்ற நியமனக்குழு உறுப்பினர் ஜான் பாஸ்கர், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் முகமது சலீம், தொழிலதிபர்கள் ஞானராஜ் கோயில்பிள்ளை, ராம்குமார், தி.மு.க. மாவட்ட சார்பு ஆணி நிர்வாகிகள் மகாவிஷ்ணு, ரவிராஜா, சிராஜூதீன், ஓன்றிய, நகர இளைஞரணி அமைப்பாளர்கள் பைஸ், அஜய், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், ஓன்றிய மகளிரணி அமைப்பாளர் ராஜேஸ்வரி, குலசேகரன் பட்டினம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கணேசன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் நடராஜன், மாவட்டப் பிரதிநிதிமதன்ராஜ் மற்றும் முரளி, ஆனந்த், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • திங்கள் நகர் தினசரி காய்கறிகள் வியாபாரிகள் கோரிக்கை
    • திங்கட் கிழமை மாலை 5 மணி வரை காய்கறி, பழங்கள் வியாபாரம் முடித்து வாரச்சந்தை வாசல் இரண்டும் பூட்டு போட வேண்டும்.

    கன்னியாகுமரி:

    திங்கள் நகர் தினசரி காய்கறிகள் வியாபாரிகள், திங்கள்நகர் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் மற்றும் தலைவர் சுமன் ஆகியோரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறப் பட்டுள்ளதாவது:-

    திங்கள் சந்தை வாரச்சந்தை யில் விவசாயி கள் வெள்ளிக்கிழமை தோறும் மாலை 4 மணிக்கு வாழைக்குலைகள் கொண்டு வருவார்கள். அதனை மறுநாள் காலை 6.30 மணி அளவில் விற்பனை செய்வார்கள். விற்பனை முடிந்த உடன் 10 மணி அளவில் மார்க்கெட் வாசலை மூடி விடுவார்கள். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் காய்கறி வியாபாரிகள் திங்கட் கிழமை வியாபாரம் செய்ய காய்கறிகள் கொண்டு வரு வார்கள்.

    திங்கட்கிழமை காலை 4 மணி முதல் 7 மணி வரை ஆடு, மாடு, கோழி வியாபாரம் நடக்கும் காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை காய்கறி பழங்கள் வியாபாரம் நடக்கும். அதன் பிறகு பேரூராட்சி காவலாளி 2 வாசல்களையும் பூட்டி விடுவது நடைமுறையாக இருந்தது.

    கொேரானா பாதிப்பு ஏற்பட்ட பிறகு இப்போது இரண்டு வாசல்கள் பூட்டப்படாமல் உள்ளது. இதனால் பேரூராட்சியில் வரிகட்டி செயல்படும் தினசரி சந்தை வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் மிகுந்த கடன் தொல்லையில் அவதிப்படுகிறோம்.

    ஆகையால் தினசரி வியாபாரிகள் நலன் கருதி திங்கட் கிழமை மாலை 5 மணி வரை காய்கறி, பழங்கள் வியாபாரம் முடித்து வாரச்சந்தை வாசல் இரண்டும் பூட்டு போட்டு இதற்கு முன்னர் இருந்த நடைமுறையை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திண்டுக்கல் அருகே அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் அதிகாலை முதல் ஆடு மற்றும் கோழிச்சந்தை நடைபெற்று வருகிறது.
    • போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரதீர்வு காணவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் அதிகாலை முதல் ஆடு மற்றும் கோழிச்சந்தை நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் இங்கு வருகின்றனர்.

    இங்கிருந்து ஆடு, கோழி மட்டுமின்றி காய்கறிகளையும் கொள்முதல் செய்து வெளியூர்களுக்கு அனுப்பி வருகின்றனர். இந்த சந்தை தனியார் வசம் உள்ளதால் பெரும்பாலான வியாபாரிகள், விவசாயிகள் திண்டுக்கல்-திருச்சி சர்வீஸ் சாலையில் சந்தையில் கூடுகின்றனர். அங்கேயே வியாபாரம் நடப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    குறிப்பாக காலையில் பள்ளிக்கு செல்லும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். வியாழக்கிழமை தோறும் நடைபெறும் சந்தையால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

    எனவே வாரசந்தையை சம்பந்தப்பட்ட இடத்தில் நடத்த அனுமதி வழங்கவேண்டும் எனவும், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரதீர்வு காணவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

    • காங்கேயம் வாரச்சந்தையில் 2 ஏக்கர் பரப்பளவில் 380 கடைகள் அமைக்கப் படுகின்றன.
    • இயற்கை சீற்றங்கள் எதிலிருந்தும் பாதுகாப்பாக வியாபாரம் செய்யவும், பொது மக்கள் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் சந்தை அமைக்கப்படுகிறது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வாரச்சந்தை மிக பழமையானதாகும். இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் திங்கள் தோறும் நடக்கும் சந்தையில் பொருட்களை வாங்கி விற்று வருவது வழக்கம். ஆனால் சந்தை பல ஆண்டாக அடிப்படை வசதிகள் இன்றி காணப்பட்டது.

    இதனை மேம்படுத்த வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று 2 ஏக்கர் பரப்பளவில் 380 கடைகள் அமைக்கப் படுகின்றன. சாய்வு தளத்துடன் விவசாயிகள் கொண்டு வரும் பொருட்களை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்ய ஏதுவாக கடைகள் அமைக்கப்படும். இதில் தினசரி மார்க்கெட்க்கு 67 கடைகள் அமைக்கப்படுகின்றன.

    இந்தக் கடைகளுக்கு வந்து செல்ல வசதியாக அகலமான தடம் அமைக்கப்படும். மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங்கள் எதிலிருந்தும் பாதுகாப்பாக வியாபாரிகள் வியாபாரம் செய்யவும், பொது மக்கள் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது.

    மேலும் 27 கறிக்கடைகள் அமைக்க இடம் தனியாக ஒதுக்கப்பட்டு, முறைப்படி இந்த கடைகள் அங்கு அமைக்கப்பட உள்ளது. இதில் ஒரு பெரிய அளவிலான குடோனும் அமைக்கப்பட உள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் ஏடிஎம். சென்டர் ஒன்றும் இதில் அமைய உள்ளது. மேலும் பாத்ரூம், டாய்லெட் 20 அமைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்த தனியாக பார்க்கிங் வசதியும் இதில் செய்யப்பட உள்ளது. இதனால் மக்கள் எளிதில் வந்து செல்ல முடியும்.

    இந்த சந்தைக்கு 24 மணி நேரம் பாதுகாப்பு என நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. கடந்த 10 வருடத்திற்கு மேல் சந்தையில் அடிப்படை வசதி செய்து தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சாமிநாதன் சந்தையை மேம்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்தார். இதனை அடுத்து தற்போது சந்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த சந்தை பணிகள் ஒரு வருடத்தில் முடிக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அமைச்சரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தரப்பிலிருந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    • பக்ரீத் பண்டிகை எதிரொலியாக செஞ்சி வாரசந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
    • செம்மறி ஆடுகள் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையிலும் கருப்பு ஆடுகள் ரூ. 8000 முதல் ரூ.15,000 விற்கபட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். செஞ்சியில் சந்தையில் கருவாடுஆடுகள் அதிகளவில் விற்பனையாகும். எனவே இந்த சந்தைக்கு சேலம், தர்மபுரி, வேலூர்,ஆம்பூர் மற்றும் புதுவை பெங்களுர் போன்ற பகுதியில் இருந்தும் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள். வருகிற 10-ந் தேதி பக்ரீத் பண்டிகை வருகிறது. இதையொட்டி இன்று கூடிய சந்தையில்கூடுதலாக ஆடுகள்விற்பனைக்கு வந்தது. ஆடுகளைவாங்குவத ற்காக பெங்களுர் மற்றும் சேலம், திருவ ண்ணாமலை, வேலுர், தருமபுரி,சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் செஞ்சி வார சந்தைக்கு வந்து குவிந்தனர்.

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் வியாபாரிகள் அதிகமாக வருவார்கள் என கருதி சுற்றுவட்டார கிராம பகுதி யில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர் அதன்படி அதிக மான ஆடுகள் விற்பனைக்கு வந்த தால்தான் விலையும் சிறிதுகுறைவாகவே இருந்தது. பக்ரீத்பண்டிகை குர்பானிக்காக செம்மறி ஆடுகள் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையிலும் கருப்பு ஆடுகள் ரூ. 8000 முதல் ரூ.15,000 விற்கபட்டது. இந்த வார சந்தையில் மட்டும் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யபட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 5 கோடி ஆகும்.

    ×