search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வானதி சீனிவாசன்"

    • கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை தலைவர் தங்கவேலு தலைமை தாங்குகிறார்.
    • ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் பிரபு, சிட்கோ சிவா, தம்புராஜ், மனோரம்யன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு எதிராக கமல் கட்சியினர் நாளை போராட்டம் நடத்துகிறார்கள். தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை வானதி சீனிவாசன் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி நாளை காலை 10.30 மணி அளவில் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை தலைவர் தங்கவேலு தலைமை தாங்குகிறார்.

    இளைஞர்அணி செயலாளர் கவிஞர் சினேகன் கண்டன உரையாற்றுகிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் மயில்சாமி, மூகாம்பிகா ரத்தினம், அனுஷா ரவி, ராதா, அருணா, ரம்யா, மஞ்சுளா, சித்திக், ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் பிரபு, சிட்கோ சிவா, தம்புராஜ், மனோரம்யன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதால், பிரதமர் மோடி எரிச்சல் அடைந்துள்ளதாக முதல்வர் பேசுகிறார்.
    • உங்கள் எதிர்க்கட்சி கூட்டணிக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது.

    கோவை:

    கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் துளிர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்யாண மேடைகளை, எதிர்கட்சிகளை திட்ட பயன்படுத்தி கொள்கிறார். பிரதமர் மோடியின் மீது விமர்சனம் வைத்ததுடன், தனது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்றும் சொல்லி இருக்கிறார். அவருக்கு எதற்காக இந்த பயம் வந்திருக்கிறது என்பது தெரியவில்லை.

    அவரது ஆட்சியை, மாநில அரசை கலைப்பதற்கான காரணங்கள் கூறுவதற்கு இடம் இருக்கிறதோ? அதுவெல்லாம் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் நினைக்கிறாரா?.

    எந்த ஒரு மாநில அரசையும், ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்க பாஜனதாவிற்கு விருப்பம் இல்லை. கலைத்ததும் இல்லை. எதற்காக முதல்வருக்கு இந்த பயம் வந்திருக்கிறது என்பது தெரியவில்லை.

    எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதால், பிரதமர் மோடி எரிச்சல் அடைந்துள்ளதாக முதல்வர் பேசுகிறார். உங்கள் எதிர்க்கட்சி கூட்டணிக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது.

    நீங்களே உங்களை பெரிதாக நினைத்துக் கொண்டு, பிரதமர் மோடி உங்களை பார்த்து பயப்படுவதாக நினைப்பது கற்பனை. முதல்வர் ஸ்டாலின் அந்த கற்பனை உலகத்தில் இருந்து வெளியே வந்து, தமிழகத்தில் இருக்கும் பிரச்சினைகளை பார்க்க வேண்டும்.

    பிரதமர் மோடி தங்களைப் பார்த்து பயப்படுகிறார் என பேசுவது மாநிலத்தின் பிரச்சினைகளை மூடி மறைக்கவே. தங்களின் ஆட்சிக்கு ஏதோ பிரச்சினை வரப்போகிறது என்பதைப் போல காட்ட முதல்வர் முயல்கிறார். தமிழகத்தின் ஆட்சியை நன்றாக நடத்த ஸ்டாலின் முயற்சி செய்யவேண்டும்.

    தமிழக கவர்னர் குறித்து ஜனாதிபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதம் முழுக்க முழுக்க கற்பனை. அவர், மாநிலத்தின் வரலாற்றை, நாட்டின் கலாச்சார பதிவுகளை, பண்பாட்டு தளங்களை பற்றி மாணவர்களிடமும், பொது வெளியிலும் கவர்னர் பேசுகிறார்.

    இது எந்த விதத்தில் சிக்கலை உருவாக்குகிறது. ஒரு கற்பனை கோட்டையை கட்டிக்கொண்டு யாரும் மாற்றுக்கருத்தை பேசக்கூடாது என்ற சர்வாதிகாரத்திற்குள் செல்கிறீர்களா.

    கவர்னரைப் பற்றி எழுதியிருக்க கூடிய கடிதம் உண்மை இல்லாத ஒன்று. தேவையில்லாமல் ஒவ்வொரு முறையும் அவரை விமர்சனம் செய்து, சிக்கலான நிலையை நீங்கள் தான் உருவாக்கிக் கொள்கிறீர்கள்.

    மாநிலத்தின் கவர்னர் எதற்கு அனுமதி கொடுப்பது? எதனால் தாமதம் என்பது குறித்து செய்தி குறிப்பாக வெளியிடப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் வெளியாகி வருகிறது. ஒவ்வொன்றிற்கும் கவர்னர் அலுவலகம் பதில் தருவதால் எரிச்சல் உங்களுக்கு வந்திருக்கிறதா.

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அக்காவும் தம்பியுமாக சேர்ந்து கட்சியை வளர்க்கின்றோம். தேசிய அரசியலில் இருப்பதால் கோவைக்கு அவர் வரும் போது இல்லாமல் இருப்பதை போன்ற சூழல் இருக்கிறது. இருவரும் அடுத்து ஒரே கூட்டத்தில் பங்கேற்பதை போல திட்டமிடுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் கோவை தொகுதியை குறிவைத்து தான் உதவிகளையும் தாராளமாக செய்யத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
    • கோவை பெண் டிரைவருக்கு கார் வாங்கி கொடுத்திருக்கிறார். இது வெறும் ரூ.13 லட்சம் தான்.

    மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல் இப்போது சினிமாவில் பிசியாக இருக்கிறார். பிக்பாஸ்-7 நிகழ்ச்சிக்கு ரூ.150 கோடிக்கும், அவர் நடிக்கும் படத்துக்கு ரூ.130 கோடிக்கும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

    இந்த கேப்பில் கோவையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தனியார் பெண் பஸ் டிரைவருக்கு ரூ.13 லட்சத்தில் சொந்த கார் வாங்கி கொடுத்தார். பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் கோவை தொகுதியை குறிவைத்து தான் உதவிகளையும் தாராளமாக செய்யத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கமலை தோற்கடித்தார்.

    அவர் கூறும்போது, கமல் தேர்தலில் ஜெயித்து இருந்தால் ரோடு போட்டாச்சா... தண்ணீர் வருகிறதா....? தெரு விளக்கு எரிகிறதா...? என்றுதான் தெருத்தெருவாக சுற்றி இருப்பார். தோற்றதால் தான் சினிமாவில் நிறைய சம்பாதிக்க முடிகிறது.

    அவர் கோவை பெண் டிரைவருக்கு கார் வாங்கி கொடுத்திருக்கிறார். இது வெறும் ரூ.13 லட்சம் தான். இன்னும் பலருக்கு நிறையவே செய்யலாம்' என்றார்.

    • கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
    • தெற்கு மாவட்ட பகுதியில் மட்டும் 20 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தெரிவித்தார்.

    கோவை:

    கோவை காந்திபுரத்தில் வி.கே.கே. மேனன் சாலையில் கடந்த மாதம் 29-ந்தேதி பாரதிய ஜனதா சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பற்றி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மீது தி.மு.க.வினர் புகார் செய்த வண்ணம் உள்ளனர்.

    பொள்ளாச்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தாவிடம் தி.மு.க. நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசி எங்கள் கட்சியினரை இழிவுப்படுத்தி உள்ளார். அவரது பேச்சு வன்முறையை தூண்டுவதாகவும், சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பதாகவும் உள்ளது.

    அமைதி பூங்காவான தமிழகத்தில் அவருடைய பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருகட்சியினரிடையே வன்மத்தை தூண்டுவதாக உள்ளது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இதேபோல கோவை ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், சாய்பாபா காலனி என மாநகரில் உள்ள 17 போலீஸ் நிலையங்களில் தி.மு.க. பகுதி செயலாளர்கள் தனித்தனியாக புகார் செய்துள்ளனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர சூலூர் போலீஸ் நிலையத்திலும் தி.மு.க. நிர்வாகிகள் புகார் கொடுத்துள்ளனர். தெற்கு மாவட்ட பகுதியில் மட்டும் 20 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தெரிவித்தார்.

    மேலும் வடக்கு மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் 15-க்கும் மேற்பட்ட புகார்கள் மனுக்கள் கொடுக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இந்த அனைத்து புகார்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக ஆளுநர் உத்தரவு
    • அமைச்சரை பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

    ஆளுநர் நடவடிக்கையை முதல்வர் தனக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க வேண்டும்: வானதி சீனிவாசன்அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இலாகா இல்லாத அமைச்சராக நியமிக்க கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால், இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

    இந்த நிலையில் நேற்று செந்தில் பாலாஜி மீதான வழக்கை சுட்டிக்காட்டி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். அமைச்சரை பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் கருத்து தெரிவித்தார்.

    இதற்கிடையே செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை கவர்னர் ரவி கிடப்பில் போட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

    செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது தொடர்பாக எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான வானதி சீனிவாசன் தெரிவித்திருப்பதாவது:-

    எந்தவொரு அரசியலமைப்பு கூறுகளை காப்பாற்ற ஆளுநர் இருக்கிறாரோ, எங்கு சட்டத்தினுடைய ஆட்சி நடைபெறுவதற்கு அரசு தடையாக இருக்கிறதோ, அப்போது இதுபோன்று நடவடிக்கை எடுக்க ஆளுநர் உள்ளாக்கப்படுகிறார்.

    முதன்முதலாக செந்தில் பாலாஜி மீது அதிகமான குற்றச்சாட்டுகளை கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரம்பித்து வைத்தது இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இன்று செந்தில் பாலாஜி நீக்கப்பட்டிருக்கிறார் என்றால், இது அவர் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்க்க வேண்டும்.

    அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழாக என்னென்னவெல்லாம் அதிகாரங்கள் சட்டத்தினுடைய ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காக அவர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமே தவிர, இதை அரசியலா பார்க்கக் கூடாது.

    இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

    • தேர்தல் அரசியல் என்பது வெறும் கூட்டல், கழித்தல் கணக்கு அல்ல.
    • பாராளுமன்ற தேர்தல் வரும் போது இப்படி கூடி கலைவது வாடிக்கைதான்.

    எதிர்க்கட்சிகளின் கூட்டம் பற்றி பா.ஜனதா மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்துள்ள விமர்சனம்தான் இது.

    தேர்தல் அரசியல் என்பது வெறும் கூட்டல், கழித்தல் கணக்கு அல்ல. அது ரசாயனம். அதாவது மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்டது. தேர்தல் அரசியலில் ஒன்றும் ஒன்றும் இரண்டாக வேண்டிய கட்டாயம் இல்லை. பூஜ்யமாகவும் மாறும். எனவே 16 கட்சி கூட்டணி அல்ல 32 கட்சிகளாக இருந்தாலும் எந்த பலனும் கிடைக்காது.

    பாராளுமன்ற தேர்தல் வரும் போது இப்படி கூடி கலைவது வாடிக்கைதான். மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைப்பாரா? கெஜ்ரிவால் டெல்லி, பஞ்சாபில் காங்கிரசுக்கு சீட் ஒதுக்குவாரா? மராட்டியத்தில் பிளவுபட்ட உத்தவ் தாக்கரே கட்சிக்கு காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் எத்தனை தொகுதிகள் கொடுக்கும்? கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்குமா? இப்படி பதில் கண்டுபிடிக்க முடியாத பல கேள்விகள் இருக்கும் போது 16 கட்சிகள் இல்லை 36 கட்சிகள் 106 நாட்கள் கூடி பேசினாலும் விடை பூஜ்யமாகத்தான் இருக்கும்.

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களது பணியை செய்கிறார்கள்.
    • செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது செய்த ஊழல் பட்டியலை வெளியிட்டனர்.

    பல்லடம் :

    பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பல்லடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கும் மத்திய அரசிற்கும் சம்பந்தமில்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களது பணியை செய்கிறார்கள். இதே திமுக அரசு எதிர்க்கட்சியாக இருக்கும்போது, செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது செய்த ஊழல் பட்டியலை வெளியிட்டனர். ஊழல் செய்தவர் இன்று திமுக கட்சியில் சேர்ந்து விட்டதால் அதை மறைத்து விட்டீர்கள், மறந்து விட்டீர்கள்.எதையும் சந்திக்க தயார் என சவால் விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென்று அன்று இரவே எப்படி உடல் நிலை சரியில்லாமல் போனார் என்பது எங்களுக்கு தெரியவில்லை.

    வழக்கை அவர்கள் சந்தித்து தான் ஆக வேண்டும். விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தி.மு.க.வின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா?.
    • செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது

    கோவை:

    பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. குற்றம்சாட்டியது.

    அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தினார்.

    தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது.

    மத்தியில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வரும் பா.ஜ.க அரசு, சட்டத்தின்படியே, அனைத்தையும் செய்து வருகிறது. அதன்படிதான், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஆனால், இதனை ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என பழிசுமத்தி, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை திசை திருப்பும் முயற்சியில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

    அ.தி.மு.க.வில் இருந்தபோது ஊழல்வாதியாக இருந்த செந்தில் பாலாஜி, தி.மு.க.வில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா? தி.மு.க.வின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா?.

    செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது. அதைவிடுத்து, நாங்கள் என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வோம். அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அப்படி நடவடிக்கை எடுத்தாலும் தடுப்போம் என்றால் அதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அனுமதிக்காது.

    பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உணர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கோவை ஜி.டி. நாயுடு மியூசியம் முன்புறம் உள்ள அவினாசி சாலையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
    • வாலிபர் வாகனம் மோதி இறந்தாரா, அல்லது எப்படி இறந்தார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் அருகே உள்ளது.

    இந்த எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் நேற்று மாலை 5.50 மணி அளவில் மர்ம வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அலுவலகத்துக்குள் நுழைந்து உள்பக்கமாக கதவை பூட்ட முயன்றார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர் அந்த வாலிபரை விரட்டினார். அவர் செல்ல மறுத்ததால் அவரை பிடித்து அலுவலகத்தின் வெளியே தள்ளினார். அதன்பிறகு அந்த வாலிபர் அங்கிருந்து எழுந்து சென்றார்.

    இந்தநிலையில் இரவு 8.30 மணி அளவில் கோவை ஜி.டி. நாயுடு மியூசியம் முன்புறம் உள்ள அவினாசி சாலையில் அதே வாலிபர் பிணமாக கிடந்தார். மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரித்து வருகிறார்கள்.

    அந்த வாலிபர் வாகனம் மோதி இறந்தாரா, அல்லது எப்படி இறந்தார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    அந்த வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அவர் எதற்காக நுழைந்தார் என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதுபற்றி வானதி சீனிவாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நேற்று மாலை எனது அலுவலகத்துக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் வந்துள்ளார். அவர் எதற்காக வந்தார், எந்த நோக்கத்துக்காக வந்தார் என்று தெரியவில்லை. அப்போது நான் அலுவலகத்தில் இல்லை. அந்த நபர் வந்த தகவலை எனது உதவியாளர் எனக்கு தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸ்நிலையத்தில் புகார் அளிக்க கூறினேன். அதன்படி அவரும் புகார் அளித்தார். இந்த நிலையில் அலுவலகத்துக்குள் நுழைந்த மர்மநபர் அவினாசி சாலையில் இறந்து கிடந்ததாக தகவல் தெரிந்தது. அவர் யார் என்று தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நமது நாட்டில் 40 சதவீதம் டிஜிட்டல் பயன்பாடு இருக்கிறது.
    • ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்து துரதிஷ்டவசமானது.

    கோவை :

    ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பா.ஜனதா சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை சித்தாபுதூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு வந்துள்ளார். குறிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனை மிகவும் எளிமையாக இருக்கிறது. நமது நாட்டில் 40 சதவீதம் டிஜிட்டல் பயன்பாடு இருக்கிறது. ஏற்றுமதி 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

    ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்து துரதிஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற விரும்பவில்லை. எதையும் மூடி மறைக்கவில்லை. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை வைத்துக்கொண்டு பா.ஜனதாவை வீழ்த்திவிடலாம் என்று ராகுல்காந்தி, நினைத்தால் அது ஒருபோதும் பலிக்காது.

    ராகுல்காந்தி வெளிநாட்டில் இருந்து நமது நாட்டுக்கு எதிராக பேசி வருவது நாட்டின் பெருமையை சிதைக்கும் வகையில் இருக்கிறது. அவர் நமது நாட்டை சேர்ந்தவர்தானே!. ஏன் வெளிநாட்டில் பேசுகிறார். இவ்வாறு அவர் பேசுவதை உடனே நிறுத்த வேண்டும்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் விளம்பர பலகை வைப்பது அதிகரித்து வருகிறது. விளம்பர பலகை வைக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் சம்பவம் நடக்கும்போது மட்டும் நடவடிக்கை எடுக்கும் நிலை இருக்கிறது.

    மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரசும், தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் தி.மு.க.வும் தமிழக நலனை காப்பாற்ற போகிறார்களா என்பதை பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் பா.ஜனதாவை தூக்கி சுமக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் தங்கள் கூட்டணி உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
    • பா.ஜனதாவை பாருங்கள் பட்டியலினத்தையும், பழங்குடியினத்தையும் சேர்ந்த பலர் எம்.பி.க்களாக இருக்கிறார்கள். முக்கிய பொறுப்புகளிலும் இருக்கிறார்கள்.

    சென்னை:

    கர்நாடக தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறும்போது, இந்தியா முழுவதும் பா.ஜனதா முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

    இந்த நேரத்தில் தமிழகத்தில் பா.ஜனதாவை தூக்கி சுமக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் தங்கள் கூட்டணி உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதிசீனிவாசன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    மற்ற கட்சிகளுக்கு ஆலோசனை கூறுவதற்கு முன்பு தான் சார்ந்து இருக்கும் கூட்டணியில் தனது எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் நிறைவேறி இருக்கிறதா என்பதை திருமாவளவன் எண்ணிப்பார்க்க வேண்டும்.

    சமூக நீதிக்காக குரல் கொடுத்து வருகிறார் திருமாவளவன். 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் சமூகநீதி பாதுகாக்கப்பட்டுள்ளதா? வேங்கைவயல் சம்பவமும், தொடரும் ஆவணகொலைகளும், தூய்மை பணியாளர்கள் பிரச்சினைகளும் சமூக நீதியின் அடையாளங்களா? ஆதிதிராவிடர்கள், பட்டியலினத் தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கோடிகணக்கான நிதியை கூட தி.மு.க. அரசு செலவளிக்க வில்லையே.

    பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தி வருகிறோம். அதை கேட்க கூட தெம்பில்லையே.

    ஆனால் பா.ஜனதாவை பாருங்கள் பட்டியலினத்தையும், பழங்குடியினத்தையும் சேர்ந்த பலர் எம்.பி.க்களாக இருக்கிறார்கள். முக்கிய பொறுப்புகளிலும் இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவருக்கு மத்தியமந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. மாநில தலைவர் பதவியும் வழங்கினோம். இது இப்போது மட்டுமல்ல எப்போதும் பா.ஜனதாவில் கடைப்பிடிக்கப்படும் சமூக நீதி.

    சமூகநீதி காக்கப்பட வேண்டும், நிலை நாட்டப்பட வேண்டும் என்ற அக்கறை இருந்தால் திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி சமூக நீதியை உண்மையாகவே கொண்டாடுகிற பா.ஜனதா கூட்டணிக்கு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் முடிவை வைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு கொண்டிருக்கிறார்.
    • கர்நாடகாவில் பிரதான எதிர்கட்சி வாய்ப்பை பா.ஜ.க.விற்கு மக்கள் கொடுத்துள்ளனர்.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடக தேர்தலில் மக்களின் தீர்ப்பை பாரதிய ஜனதா ஏற்கிறது. அங்கு ஆட்சி அமைக்க முடியாமல் போனது குறித்து கட்சி தலைமை கண்டிப்பாக ஆராயும். மக்களிடம் நெருக்கமான அனுகுமுறையை ஏற்படுத்த கர்நாடக தேர்தலை பார்க்கிறோம்.

    அந்த தேர்தல் முடிவை வைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு கொண்டிருக்கிறார்.

    நிறைய முறை திராவிடத்தையும் மக்கள் புறக்கணித்துள்ளனர். கர்நாடகாவில் பிரதான எதிர்கட்சி வாய்ப்பை பா.ஜ.க.விற்கு மக்கள் கொடுத்துள்ளனர்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கர்நாடக தேர்தலில் அவருடைய பங்களிப்பை நன்றாகவே செய்துள்ளார். கர்நாடக தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு சவாலாக இருக்காது. பா.ஜ.க. வெற்றிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×