search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோக்கியா டி20"

    உலகின் பிரபல தேடுப்பொறி சேவையாக விளங்கும் கூகுளில் இந்த ஆண்டு மக்கள் அதிகம் தேடியவற்றை தொடர்ந்து பார்ப்போம். #Google



    உலகின் முன்னணி தேடுப்பொறி சேவையை வழங்கி வரும் கூகுள், இந்த ஆண்டிற்கான இயர் இன் சர்ச் (Year in Search) வெளியிட்டுள்ளது. 2018 ஆண்டு துவங்கியதில் இருந்து இதுவரை மக்கள் கூகுளில் அதிகம் தேடிய சம்பவங்கள் மற்றும் தலைப்புக்களை தொகுத்து ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் கூகுள் இயர் இன் சர்ச் என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கூகுள் இயர் இன் சர்ச் பட்டியலில் இடம்பெற்ற தலைப்புக்களின் விளையாட்டுக்களில் பிபா உலக கோப்பை, ஐ.பி.எல்., ஆசிய கோப்பை 2018, குளிர்கால ஒலிம்பிக்ஸ் உள்ளிட்டவை ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன.

    கூகுளில் குழந்தைகள் அதிகம் தேடியவற்றை பார்க்கும் போது பால் வீர் மற்றும் மோடு பட்லு முன்னிலையிலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரோபோட் 2.0 திரைப்படம் உள்ளிட்டவை இடம்பிடித்து இருக்கின்றன.



    இவற்றை தொடர்ந்து மார்வெல் வெளியிட்ட அவென்ஜர்ஸ்: இன்ஃபினிட்டி வார், பிளாக் பேந்தர் மற்றும் டெட்பூல் 2 உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்கள் கூகுள் தேடலில் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன. இசையை பொருத்த வரை நேஹா கக்கரின் தில்பார் தில்பார், அரிஜித் சிங்கின் தெரா ஃபிதூர் உள்ளிட்டவையும் ஆங்கில மொழி தேடலில் லத்தீன் மொழியில் வெளியாகி வைரலான டெஸ்பாசிட்டோ அதிகம் பேர் தேடி இருக்கின்றனர்.

    2018இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் ப்ரியா பிரகாஷ் வாரியர், பிரியண்கா சோப்ராவின் கணவரான நிக் ஜோனஸ், சப்னா சௌத்ரி, பிரியண்கா சோப்ரா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். 

    இதைத்தொடர்ந்து ‘How to..’, தேடல்களில் வாட்ஸ்அப் ஸ்டிக்கர், ஆதாருடன் மொபைல் நம்பரை இணைப்பது எப்படி உள்ளிட்டவையும், ‘What is…’, தலைப்பில் சட்டப்பிரிவு 377, சிரியாவில் என்ன நடக்கிறது, கிகி சேலஞ்ச் என்றால் என்ன உள்ளிட்டவற்றை பெரும்பாலானோர் தேடியிருக்கின்றனர். #Google
    ஹூவாய் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. #HuaweiMate20 #HuaweiMate20Pro



    ஹூவாய் நிறுவனம் மேட் 20 மற்றும் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. 

    இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களிலும் OLED DCI-P3 HDR டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹூவாய் மேட் 20 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD+  ஸ்கிரீன், மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் QHD+ ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் கிரின் 980 7என்.எம். பிராசஸர், டூயல் NPU மற்றும் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த EMUI 9.0 கொண்டுள்ளது.



    ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சஎன்சார், 10-லெவல் டைனமிக் பிரெஷர் சென்சிங் தொழில்நுட்பம், 3D ஃபேஸ் அன்லாக், 3D லைவ் எமோஜி மற்றும் ஏ.ஐ. லைவ் மாடல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் மேட் ஸ்மார்ட்போன்களில் மூன்று பிரைமரி கேமரா மேட்ரிக்ஸ் சிஸ்டம் மற்றும் OIS வழங்கப்பட்டுள்ளது.

    மேட் 20 ஸ்மார்ட்போனில் லெய்கா அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் மேக்ரோ டிஸ்டன்ஸ் வசதி கொண்டுள்ளது. மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 40 எம்.பி. பிரைமரி கேமரா, 20 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கில் கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    ஹூவாய் மேட் 20 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.39 இன்ச் 3120x1440 பிக்சல் QHD+ OLED 19:5:9 டிஸ்ப்ளே
    - ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
    - 720 MHz ARM மாலி-G76MP10 GPU
    - 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
    - 40 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
    - 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
    - 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
    - 24 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3D ஃபேஸ் அன்லாக்
    - வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
    - டூயல் ஸ்பீக்கர்கள்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 40 வாட் சூப்பர்சார்ஜ், 15 வாட் வயர்லெஸ் க்விக் சார்ஜ்



    ஹூவாய் மேட் 20 சிறப்பம்சங்கள்:

    - 6.53 இன்ச் 2244x1080 பிக்சல் FHD+ OLED 18:7:9 டிஸ்ப்ளே
    - ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
    - 720 MHz ARM மாலி-G76MP10 GPU
    - 4 ஜி.பி., 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
    - 16 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
    - 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
    - 24 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - கைரேகை சென்சார்
    - வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
    - டூயல் ஸ்பீக்கர்கள்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஹூவாய் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஹூவாய் மேட் 20 ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு, பிளாக் மற்றும் டுவிலைட் கலர்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை 799 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.67,820 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை 849 யூரோ இந்திய மதிப்பில் ரூ.72,070 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு, பிளாக், டுவிலைட் மற்றும் எமரால்டு கிரீன் உள்ளி்ட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 1049 யூரோ இந்திய மதிப்பில் ரூ.89,050 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இரண்டு ஸ்மார்ட்போன்களும் லண்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபர் 16-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
    ஹூவாய் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மேட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. முன்னதாக ஹூவாய் நிறுவனத்தின் கிரின் 980 ரக சிப்செட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. #Mate20



    ஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹூவாய் தனது கிரின் 980 7என்.எம். பிராசஸர்களை அறிமுகம் செய்தது. புதிய பிராசஸரில் பிரத்யேக டூயல் நியூரல் நெட்வொர்க் பிராசசிங் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய பிராசஸர் அறிமுகம் செய்ததும் மேட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிடப்பட்டது. அதன்படி மேட் 20 சீரிஸ் மாடல்களில் கிரின் 980 பிராசஸர்களை கொண்டிருக்கும் என்றும் இவை அக்டோபர் 16-ம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    உயர்-ரக மேட் 20 ப்ரோ ஃபிளாக்ஷிப் மாடலில் மூன்று பிரைமரி கேமராக்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்ற அம்சங்கள் ஹூவாய் P20 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹூவாய் மேட் 20 மாடலில் 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 6.3 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் சார்ஜர், கிளாஸ் பேக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0 கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹூவாய் மேட் 20 சீரிஸ் மொத்தம் நான்கு மாடல்கள்: HMA-AL00, HMA-L09, HMA-L29, HMA-TL00 வெளியிடப்படும் என்றும் இவற்றின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற வங்காள தேசம் 2-1 என தொடரை அசத்தலாக கைப்பற்றியது. #WIvBAN
    வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸும், 2-வது ஆட்டத்தில் வங்காள தேசமும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி அமெரிக்கா நேரப்படி நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. புளோரிடாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வங்காள தேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி லித்தோன் தாஸ், தமிம் இக்பால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தமிம் இக்பால் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். லித்தோன் தாஸ் 32 பந்தில் 61 ரன்கள் விளாசினார்.



    அதன்பின் வந்த ஷாகிப் அல் ஹசன் 24 ரன்களும், மெஹ்முதுல்லா ஆட்டமிழக்காமல் 32 ரன்களும் அடிக்க வங்காள தேசம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

    பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க விக்கட்டுக்கள் சீரான இடைவெளில் சரிந்து கொண்டே வந்தது.

    அதிரடி மன்னன் அந்த்ரே ரஸல் பட்டாசாக வெடித்தார். அவர் 21 பந்தில் 47 ரன்கள் குவித்தார். அப்போது 17.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. அந்த நேரத்தில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது.



    இதில் வங்காள தேசம் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 எனத் தொடரைக் கைப்பற்றியது. லித்தோன் தாஸ் ஆட்ட நாயகன் விருதையும், ஷாகிப் அல் ஹசன் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வங்காள தேசம் 2-0 எனக் கைப்பற்றியது. அதன்பின் ஒருநாள் மற்றும் டி20 தொடரை வங்காள தேசம் 2-1 எனக் கைப்பற்றியது.
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேன்ன நடிப்பில் வெளியாகி திரையரங்குளில் ஓடிக் கொண்டிருக்கும் `தமிழ்ப்படம் 2' படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #TP2 #Tamizhpadam2
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேன்ன நடிப்பில் நேற்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் `தமிழ்ப்படம் 2'. தமிழ்ப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த பாகம் போலீஸ் அத்தியாயமாக உருவாகி இருக்கிறது. முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

    படத்தில் நடிகர் சிவா போலீஸ் அதிகாரியாக வந்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார். ரஜினி, கமல், அஜித், விஜய், விஷால் என பிரபல நடிகர்களின் படங்களை கலாய்த்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள சதீஷுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
    படம் ரிலீசாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #TP2 #Tamizhpadam2

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தமிழ்ப்படம் 2' படத்தின் விமர்சனம். #TP2 #Tamizhpadam2
    தமிழ்ப்படம் முதல் பாகத்தில் `டி' என்ற வில்லனை கண்டுபிடிக்க போலீசாக வரும் சிவாவுக்கு, தனது பாட்டியை கைது செய்ய வேண்டிய நிலை வர தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்வார். அதன் தொர்ச்சியாக இந்த படம் உருவாகி இருக்கிறது. 

    மதுரையில் கலவரம் நடக்க, அதை கட்டுப்படுத்த சிவாவால் தான் முடியும் என்று, காவல்துறை சிவாவின் உதவியை நாடுகிறது. சமூக நலனை கருத்தில் கொண்டு சிவா கலவரக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பேசியே அந்த பிரச்சனையை தீர்த்தும் வைக்கிறார். அவரது இந்த அசாத்திய திறமையை பார்த்து வியக்கும் காவல்துறை, அவரை மீண்டும் பணியில் சேர அழைக்க, சிவா மறுத்துவிடுகிறார். 



    இந்த நிலையில், சிவாவின் வீட்டிற்கு ஒரு பார்சல் வருகிறது. அதை அவரது மனைவி திஷா பாண்டே வாங்கி திறக்கும் போது குண்டுவெடித்து இறந்துவிடுகிறார். சிவாவின் பாட்டி நமது குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்று சிவாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார். இதற்கிடையே ஐஸ்வர்யா மேனனையும் சந்திக்கிறார். இருப்பினும் தனது மனைவியை கொன்றவனை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக கண்ணீர் மல்க மீண்டும் போலீஸ் வேலையில் சேர்கிறார். 

    மீண்டும் போலீசில் சேரும் சிவா, அந்த பார்சலை அனுப்பியது `பி' என்று அழைக்கப்படும் சதீஷ் என்பது தெரிய வருகிறது. சிவாவை மீண்டும் போலீஸ் வேலையில் சேர வைத்து சிவாவை பழிவாங்க வேண்டும் என்பதே சதீஷின் நோக்கம். 



    கடைசியில், தனது மனைவியை கொன்ற சதீஷை சிவா பழிவாங்கினாரா? இரண்டாவது திருமணம் செய்தாரா? ஐஸ்வர்யா மேனனுடன் இணைந்தாரா? சிவாவின் போலீஸ் அத்தியாயம் எப்படி முடிந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் சிவா முதல் பாகத்தை போலவே, இந்த பாகத்திலும் தனக்கே உண்டான தனித்துவமான நடிப்புடன், நடனத்துடன், பேச்சுடன், அன்புடன், அடக்கத்துடன், பணிவுடன், கோபத்துடன், சிரிப்புடன், கவலையுடன், காதலுடன், பிரம்மாண்டத்துடன் கலக்கியிருக்கிறார். இந்த பாகத்திலும் சிவாவின் போட்டி நடனம் பிரளயத்தை உண்டுபண்ணும்படியாக இருக்கிறது. அகில உலக சூப்பர் ஸ்டாராகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். 



    ஐஸ்வர்யா மேனன் அவருக்கு கொடுத்த கதபாத்திரத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக `எவடா உன்ன பெத்தா' பாடலில் அவரது நடனம் ரசிக்கும்படியாக இருக்கிறது. வில்லனாக சதீஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். தசாவதாரம் கமலை விட இந்த படத்தில் சதீஷுக்கு கெட்அப்புகள் அதிகம். அதிலும் அவர் கவர்ந்திருக்கிறார். தொடக்கம் முதல் இறுதி வரை சிவா - சதீஷ் இடையே நடக்கும் அதி தீவிர மோதல் அனைவரையும் கவரும்படியாக இருக்கிறது. 

    திஷா பாண்டே குடும்ப பெண்ணாக சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார். சேத்தன், கலைராணி கதாபாத்திரங்கள் ரசிகர்களை கவர்கிறது. நிழல்கள் ரவி, மனோபாலா, சந்தான பாரதி, ஜார்ஜ் படத்தின் ஓட்டத்துக்கு உதவியாக இருந்துள்ளனர். 



    தமிழ்ப்படம் முதல் பாகத்தில் நடிகர் சிவா போலீசாக வருவார். அதன் தொடர்ச்சியாக, போலீஸ் அத்தியாயமாக இந்த பாகத்தை உருவாக்கி இருக்கிறார் சி.எஸ்.அமுதன். முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் தனது அட்ராசிட்டியை உச்ச நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார் அமுதன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால் என பிரபல நடிகர்கள் ஒருத்தரைது படத்தையும் விட்டுவைக்கவில்லை. படத்தில் முடிவில் முன்னணி நாயகிகளை வைத்து உருவாக்கி இருக்கும் காட்சிகளும் ரசிகர்களை கவரும்படியாகவே இருக்கிறது. 

    அரசியல் பிரபலங்கள், தொலைக்காட்சி சேனல்கள் என அனைத்தையும் கலாய்த்துள்ளனர். கலாய்ப்பது மட்டுமின்றி, சமூகத்திற்கு தேவையானவற்றை வலியுறுத்துவதும், சமூகத்தில் நடக்கும் குற்றங்களை குத்திக்காட்டும்படியாகவும் சில காட்சிகளை ஆங்காங்கே வைத்திருப்பது சிறப்பு. இவ்வாறாக அனைத்தும் கலந்த கலவையாக, இளைஞர்களுக்கு ஏற்ற படமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். இருப்பினும் படத்தின் நீளத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் படம் சிறப்பாக இருக்கும். 



    கண்ணனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. கோபி அமர்நாத்தின் கேமராவில் காட்சிகள் பல இடங்களை ரம்மியமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. 

    மொத்தத்தில் `தமிழ்ப்படம் 2' வச்சி செஞ்ச படம். #TP2 #Tamizhpadam2 #Shiva #IshwaryaMenon

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் தமிழ்ப்படம் 2 நாளை வெளியாக இருக்கும் நிலையில், வெற்றி அடைந்த படங்களை தான் எடுத்து ஸ்பூப் பண்ண முடியும் என்று நடிகர் சிவா கூறினார். #Tamizhpadam2 #TP2 #Shiva
    போஸ்டர்கள் மூலமாகவே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது தமிழ்படம் 2. அதன் கதாநாயகன் சிவாவிடம் பேசினோம்.

    ஸ்பூப் பண்ணுவது எளிது அல்ல. எளிது என்றால் இந்நேரம் தமிழ்படம் பாணியில் 10 படங்களாவது வந்து இருக்கும். ஒரு படம் கூட வரவில்லையே? புதிதாக ஒரு கதையை உருவாக்குவது கூட எளிது. ஆனால் ஏற்கெனவே இருக்கும் காட்சிகளை வைத்து கதை எழுதுவது சிரமம். படம் தொடங்குவதற்கு 6 மாதங்கள் முன்பே தயாரிப்பாளர் சசிகாந்த் என்னை அழைத்து 2வது பாகம் உருவாக இருப்பதை கூறினார். கதை தயாரான பின் நான் பார்ட்டி, கலகலப்பு 2 படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால் தாமதம் ஆனது.

    உங்கள் கேரியரில் அடிக்கடி இடைவெளி விழுகிறதே?

    குவார்ட்டர் கட்டிங் தோல்விக்கு பிறகு நடிக்கவே வேண்டாம் என்று நினைத்தேன். ரேடியோவில் வேலை பார்க்கும்போது சுந்தர்.சி அழைத்ததால் கலகலப்பில் நடித்தேன். இடையில் படம் இயக்கும் எண்ணத்தில் கதைகள் எழுத தொடங்கினேன். சென்னை 28 பார்ட் 2, கலகலப்பு 2, பார்ட்டி, தமிழ்படம் 2 என்று போகிறது. நாம் ஒரு திட்டம் வைத்து இருந்தால், கடவுள் ஒரு திட்டம் வைத்து இருக்கிறார். பார்ப்போம்.



    தமிழ் சினிமாவில் உங்களுக்கு என்று ஒரு இடம் இல்லையே?

    நான் திரையில் தோன்றினால் சிரிப்பு வரும் என்று மக்கள் நம்புகிறார்கள். மக்களை திருப்திபடுத்தினால் போதும் என்று நினைக்கிறேன். இருக்கை நிரந்தரம் இல்லை என்று நினைப்பவர்கள் தான் இடம் பிடிக்க முயற்சிப்பார்கள். ஆனால் மக்கள் மனதில் இடம் இருக்கும்போது ஏன் மற்ற இடத்தை பற்றி கவலைப்பட வேண்டும்?

    யாரையும் கலாய்க்கவோ, கிண்டலடிக்கவோ இல்லை. வெற்றி அடைந்த படங்களை தான் எடுத்து ஸ்பூப் பண்ண முடியும். அப்போது தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இது ஒரு வகை சினிமா. இது யாரையும் புண்படுத்த செய்யவில்லை. ரசிக்க மட்டும்தான். ஏற்கனவே வந்த காட்சிகள் இப்படி இருந்தால் எப்படி இருந்து இருக்கும்? என்பதே ஸ்பூப். எனக்கு தெரிந்து யாரும் புண்பட்டதாக தெரியவில்லை. அப்படி புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    விடியற்காலை 5 மணி காட்சி அளவுக்கு வளர்ந்துவிட்டீர்கள். அகில உலக சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டீர்களா?

    அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? 5 மணிக்கு காட்சி திறக்க காரணம் மக்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு தான். இதை நான் மனதில் ஏற்றிக்கொண்டால் அடுத்த படத்துக்கு இது நடக்கவில்லையே என்று ஏமாற்றம் ஆவேன். நாம் எதையும் எதிர்பார்க்காமல் செய்தால் போதும். தானாக சில வி‌ஷயங்கள் நடக்கும்.



    சீரியஸ் வேடங்களில் நடிக்க விருப்பம் இல்லையா?

    காமெடி என்பதே சீரியசான வி‌ஷயம் தான். சீரியசான வேடங்களில் நடிப்பதைவிட காமெடி வேடம் தான் சிரமம்.

    கதைகள் தயாராகி இயக்கலாம் என்று முடிவெடுத்தால், யாராவது வந்து நடிக்க அழைத்து விடுகிறார்கள். நல்ல படம் கொடுக்க வேண்டும். எனவே காத்திருக்கிறேன்.

    எந்த திட்டமும் இல்லை. இனிமேல் தேர்ந்தெடுத்து தான் நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன் என்றார். #Tamizhpadam2 #TP2 #Shiva

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்ப்படம் 2' படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குநர் அமுதன் உறுதிப்படுத்தியிருக்கிறார். #Tamizhpadam2 #TP2
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தமிழ்படத்தின் இரண்டாவது பாகமாக `தமிழ்ப்படம் 2' உருவாகி இருக்கிறது. 

    சிவா நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் முதல் தற்போது வரை பல்வேறு திரைப்படங்களையும், அரசியல் சம்பந்தப்பட்ட சில நிகழ்ச்சிகளையும் கலாய்த்து போஸ்டர் வெளியிட்டு வரும் படக்குழு சமீபத்தில் பாகுபலி, நடிகையர் திலகம், டார்க் நைட், சின்னக்கவுண்டர் உள்ளிட்ட படங்களை சமீபத்தில் கலாய்த்து போஸ்டர் வெளியிட்டிருந்தது. படத்தின் டீசர் முதல் பாடல்கள் வரை நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படம் வருகிற 12-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக முன்னதாக தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், இயக்குநர் அமுதன் தற்போது அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். 
    படத்தின் ரிலீசுக்கு நடுவே ரசிகர்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்ட அமுதனிடம் ரசிகர்கள் படம் குறித்த பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதில் ரசிகர் ஒருவர் படத்தின் ரிலீஸ் எப்போது என கேட்க, 12 என்று அவர் பதிலளித்தார். இதன் மூலம் படத்தின் ரிலீஸை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். #Tamizhpadam2 #TP2

    இந்தியாவிற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கார்டிஃபில் இரவு 10 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் 9.30 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.



    இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்குப் பதிலாக ஜேக் பால் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு இதுதான் முதல் டி20 போட்டியாகும். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
    முத்தரப்பு டி20 தொடரில் ஆரோன் பிஞ்ச் அதிரடியால் 10.5 ஓவரில் 117 ரன்கள் குவித்து பாகிஸ்தானை துவம்சம் செய்தது ஆஸ்திரேலியா. #AUSvPAK
    ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 116 ரன்னில் சுருண்டது.

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டேன்லேக் 4 விக்கெட்டும், அன்ட்ரிவ் டை 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியாவின் ஷார்ட், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    ஆரோன் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் பந்தை துவம்சம் செய்து 27 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய ஷார்ட் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து ஆரோன் பிஞ்ச் உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 10.5 ஓவரிலேயே 117 ரன்களை எட்டியது. இதனால் ஆஸ்திரேலியா 55 பந்துகள் மீதமுள்ள நிலையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய ஸ்டேன்லேக் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
    நூறு டி20 போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் பாகிஸ்தானின் சோயிப் மாலிக் #PAKvAUS #ShoaibMalik
    ஜிம்பாப்வேயில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் தற்போது நடைபெற்ற வருகிறது. இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் இடம்பிடித்துள்ளார். இது 36 வயதாகும் சோயிப் மாலிக்கிற்கு 100-வது டி20 போட்டியாகும். இதன்மூலம் சர்வதேச அளவில் 100 டி20 போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.



    2006-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான சோயிப் மாலிக் 2039 ரன்கள் அடித்துள்ளார். அத்துடன் 28 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

    இன்றைய போட்டியில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ஷாகித் அப்ரிடி 99 போட்டிகளில் பங்கேற்று 2-வது இடத்திலும், எம்எஸ் டோனி 90 போட்டிகளில் விளையாடி 3-வது இடத்திலும் உள்ளார்.
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2' படத்தை ரிலீஸ் செய்ய பயங்கரமான நாளை தேர்ந்தெடுத்திருப்பதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். #TamizhPadam2 #TP2
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் படம் `தமிழ்படம் 2'. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை ரிலீஸ் குறித்து படக்குழு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. 

    இந்த நிலையில், படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் அவரது டுவிட்டர் பக்கத்தில் `ஜூலை 13-ஆம் தேதி எனக்கு மிகவும் பயங்கரமானது, அந்த தேதியில் என்ன மறைந்திருக்கிறது என்று தெரியவில்லை, காத்திருங்கள்'. என்று குறிப்பிட்டிருக்கிறார். 



    இதில் இருந்து படத்தை ஜுலை 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் வெளியான படத்தில் டீசர், நேற்று வெளியான பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தில் சிவா ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #TamizhPadam2 #TP2

    ×