search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நூறு டி20 போட்டிகளில் பங்கேற்று சாதனைப் படைத்துள்ளார் சோயிப் மாலிக்
    X

    நூறு டி20 போட்டிகளில் பங்கேற்று சாதனைப் படைத்துள்ளார் சோயிப் மாலிக்

    நூறு டி20 போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் பாகிஸ்தானின் சோயிப் மாலிக் #PAKvAUS #ShoaibMalik
    ஜிம்பாப்வேயில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் தற்போது நடைபெற்ற வருகிறது. இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் இடம்பிடித்துள்ளார். இது 36 வயதாகும் சோயிப் மாலிக்கிற்கு 100-வது டி20 போட்டியாகும். இதன்மூலம் சர்வதேச அளவில் 100 டி20 போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.



    2006-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான சோயிப் மாலிக் 2039 ரன்கள் அடித்துள்ளார். அத்துடன் 28 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

    இன்றைய போட்டியில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ஷாகித் அப்ரிடி 99 போட்டிகளில் பங்கேற்று 2-வது இடத்திலும், எம்எஸ் டோனி 90 போட்டிகளில் விளையாடி 3-வது இடத்திலும் உள்ளார்.
    Next Story
    ×