என் மலர்

    நீங்கள் தேடியது "aaron finch"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சர்வதேச கிரிக்கெட்டில் எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் நான் நன்றியை தெரிவிக்கிறேன்.
    • 36 வயதான ஆரோன்பிஞ்ச் 76 இருபது ஓவர் போட்டிக்கு கேப்டனாக இருந்து உலக சாதனை படைத்துள்ளார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஆரோன்பிஞ்ச். அந்நாட்டு 20 ஓவர் அணியின் கேப்டனாக அவர் இருக்கிறார்.

    இந்த நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆரோன் பிஞ்ச் இன்று அறிவித்தார். அவரது இந்த முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சொந்த மண்ணில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தோற்று ஏமாற்றம் அளித்தது.

    ஓய்வு தொடர்பாக ஆரோன்பிஞ்ச் கூறியதாவது:-

    2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அடுத்த 20 ஓவர் உலக கோப்பை வரை விளையாட மாட்டேன். இதை உணர்ந்துதான் ஓய்வு முடிவை எடுத்தேன். கேப்டன் பதவியில் இருந்து செல்வதற்கு இதுவே சரியான தருணம். சர்வதேச கிரிக்கெட்டில் எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் நான் நன்றியை தெரிவிக்கிறேன்.

    36 வயதான ஆரோன்பிஞ்ச் 76 இருபது ஓவர் போட்டிக்கு கேப்டனாக இருந்து உலக சாதனை படைத்துள்ளார். 103 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 3,120 ரன் எடுத்துள்ளார். 2 சதமும், 19 அரை சதமும் அத்துள்ளார். அதிகபட்சம் 172 ரன் குவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் கடைசியாக ஒருநாள் போட்டியில் விளையாடினார். 146 ஒருநாள் ஆட்டத்தில் 5,406 ரன் எடுத்துள்ளார். இதில் 17 சதமும், 30 அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக 153 ரன்கள் குவித்துள்ளார். 5 டெஸ்டில் மட்டும் விளையாடி இருக்கிறார்.

    20 ஓவர் போட்டியில் 40 வெற்றியை கேப்டன் பதவியில் பெற்றுக் கொடுத்துள்ளார். 32 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 3 ஆட்டம் முடிவு இல்லை. ஒரு போட்டி டையில் முடிந்தது. 55 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்து 31-ல் வெற்றி பெற்றார். 24 ஆட்டத்தில் தோல்வி ஏற்பட்டது.

    20 ஓவர் உலக கோப்பையை ஆஸ்திரேலியா 2021-ம் ஆண்டு கைப்பற்றியது. ஆரோஞ்ச் பிஞ்ச் தலைமையில் தான் உலக கோப்பை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மூன்றாவது நடுவர் மற்றும் நான்காவது நடுவர் ஆகியோருடன் ஆன்-பீல்ட் நடுவர்கள் இருவரும் சேர்ந்து குற்றச்சாட்டை சுமத்தியதாக ஐசிசி அறிக்கை கூறுகிறது.
    • ஆபாசமாக பேசியும் ஆரோன் பிஞ்ச் அபராதத்தில் இருந்து தப்பித்தார்.

    டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஸ்டம்ப் மைக்ரோஃபோன் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து இன்னிங்சின் ஒன்பதாவது ஓவரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

    அந்த ஓவரின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லருக்கு பேட்டில் பந்து ஊரசியது போல இருந்தது. அதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் கேட்டனர். அதற்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இது தொடர்பாக நடுவரிடம் ஆரோன் பிஞ்ச் முறையிட்டார். அப்போது ஆபாச வார்த்தையில் பேசினார். இது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது.

    ஐசிசி நடத்தை விதி 2.3-ஐ பிஞ்ச் மீறியதாகக் கண்டறியப்பட்டது. இருப்பினும் அவர் அபராதத்தில் இருந்து தப்பித்தார். ஏனெனில் கடந்த 24 மாதங்களில் அவர் செய்த முதல் குற்றமாகும். ஆனால் ஐசிசி பிஞ்சின் ஒழுங்குமுறை மீறியதாக ஒரு குறைபாடு புள்ளியை சேர்த்துள்ளது.

    மூன்றாவது நடுவர் மற்றும் நான்காவது நடுவர் ஆகியோருடன் ஆன்-பீல்ட் நடுவர்கள் இருவரும் சேர்ந்து குற்றச்சாட்டை சுமத்தியதாக ஐசிசி அறிக்கை கூறுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாங்கள் போட்டி ஐந்து ஓவர் வரை தான் நடைபெறும் என்று நினைத்தோம்.
    • இந்த போட்டிக்கான திட்டங்கள் எங்களிடம் சரியாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2 டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

    நேற்று போட்டிக்கு முன்பாக பெய்த பலத்த மழை காரணமாக போட்டி தாமதமாக துவங்கியது. அதனால் போட்டியானது 8 ஓவர்கள் வரை மட்டுமே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பந்து வீசிய இந்திய அணியானது மிகச் சிறப்பாக பந்துவீசி 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 90 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தது.

    இதனையடுத்து 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 7.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 92 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

    தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பிஞ்ச் கூறுகையில் :

    நாங்கள் போட்டி ஐந்து ஓவர் வரை தான் நடைபெறும் என்று நினைத்தோம். ஆனால் கூடுதலாக மூன்று ஓவர் அதிகமாக வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கான திட்டங்கள் எங்களிடம் சரியாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ரோகித் சர்மா மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தார்.

    அதேபோன்று இந்திய அணியின் பவுலரான அக்சர் பட்டேல் வீசிய இரண்டு ஓவர்கள் இந்த போட்டியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தின. அவருடைய பந்துவீச்சு எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது. எங்களது அணி சார்பாக மேத்யூ வேட் மிகச் சிறப்பாக விளையாடினார். அதேபோன்று ஆடம் ஜாம்பா எங்கள் அணியில் மிகச் சிறப்பாக பந்து வீசினார்.

    இவ்வாறு ஆரோன் பிஞ்ச் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
    • நாளை நடைபெற உள்ள நியூசிலாந்துடனான 3-வது ஒருநாள் போட்டி அவரது கடைசி போட்டி ஆகும்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பிஞ்ச் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    நாளை நடைபெற உள்ள நியூசிலாந்துடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வுபெற உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    2013-ல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஆரோன் பிஞ்ச் இதுவரை 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 17 சதங்கள், 30 அரை சதங்கள் உள்பட 5,402 ரன்கள் எடுத்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து சென்னை அணி கோப்பையை வென்றதை பார்த்தோம் என ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியுள்ளார்.

    துபாய்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா - வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    முதல் முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வெல்லப்போவது ஆஸ்திரேலியாவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த போட்டி தொடரில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது. 2-வதாக பந்து வீசிய பல அணிகள் பனிபொழிவு சிக்கலை எதிர்கொண்டு தோல்வி அடைந்தன.

    பெரும்பாலான ஆட்டங்களில் 2-வது பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இதனால் இன்றைய இறுதிப் போட்டியிலும் சாம்பியன் அணியை டாஸ் முடிவு செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது தொடர்பாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன்பிஞ்ச் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    20 ஓவர் உலக கோப்பையில் சாம்பியன் அணியை டாஸ் முடிவு செய்யாது. டாசால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ளலாம். உலக கோப்பையில் வெல்ல வேண்டுமானால் முதலில் பேட்டிங் செய்தும் ஜெயிக்க வேண்டும்.

    பாகிஸ்தானுக்கு எதிராக டாசில் தோற்கவேண்டும் என எண்ணினேன். அரை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவிக்க வேண்டும் என்று கருதினேன்.

    டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய மாட்டோம். அதே சமயம் முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தாலும் அதைப்பற்றி கவலையில்லை என இருந்தேன். இதேதான் இறுதிப்போட்டியிலும் எனது நிலையாகும்.

    ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து சென்னை அணி கோப்பையை வென்றதை பார்த்தோம். முதலில் பேட்டிங் செய்து அதிக ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    அதிக ரன்களை குவித்தால் எதிரணி பேட்டிங் செய்யும்போது தவறுகளை செய்ய தூண்டமுடியும். 20 ஓவர் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டவே அணிகள் விருப்பப்படும். இதில் சில ஆபத்துகளும் உண்டு.

    எதிரணி அதிக ரன்களை குவித்துவிட்டால் இலக்கை எடுப்பது கடினம். நியூசிலாந்தை வெல்வது சவாலாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, நாங்கள் எங்கள் திட்டப்படி விளையாடுவோம். வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களின் திறமை வெளிப்படுத்துவார்கள் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உலகக்கோப்பையில் பங்கேற்கும் 10 நாடுகளின் கிரிக்கெட் கேப்டன்கள், இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்து உரையாடியபோது, இளவரசர் ஹாரி ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்சை கிண்டல் செய்த விஷயம் இப்போது கசிந்துள்ளது.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி 10 அணிகளின் கேப்டன்களும் நேற்று முன்தினம் லண்டனில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்து சிறிது நேரம் உரையாடினர். அப்போது உடன் இருந்த இளவரசர் ஹாரி, ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்சை கிண்டல் செய்த விஷயம் இப்போது கசிந்துள்ளது.

    பிஞ்ச்சை நோக்கி ஹாரி, ‘உங்களுக்கு கொஞ்சம் வயதாகி விட்டது போல் தெரிகிறதே? இன்னுமா அணியில் இருக்கிறீர்கள்? எவ்வளவு காலம் தான் விளையாடிக்கொண்டு இருப்பீர்கள்’ என்று கேட்டார். அதற்கு 32 வயதான ஆரோன் பிஞ்ச் சிரித்தபடி,‘ 8 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக்கொண்டிருக்கிறேன்’ என்று மட்டும் பதில் அளித்தார்.

    இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு யாருக்கு? என்று ஹாரி திரும்ப திரும்ப கேட்டபோது பிஞ்ச் எரிச்சலுடன், ‘இங்கிலாந்து, இந்தியா’ என்று கூறியபடி சென்றார். இளவரசர் ஹாரி இலங்கை கேப்டன் கருணாரத்னேவிடம், ‘உற்சாகமாக இருங்கள். போட்டியை அனுபவித்து விளையாடுங்கள். இல்லாவிட்டால் இங்கு ஆடியே பிரயோஜனம் இல்லை’ என்றார்.

    இதற்கிடையே இந்திய கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்து பேசியதை மையமாக வைத்து பல ரசிகர்கள் தங்களது டுவிட்டர் பதிவில், ‘ராணியிடம் உள்ள கோகினூர் வைரத்தை இந்தியாவுக்கு மீட்டு வாருங்கள் கோலி’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எல்லா காலங்களிலும் சிறந்த வீரர்களான எம்எஸ் டோனி மற்றும் விராட் கோலிக்கு நன்றி என ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். #MSDhoni #Finch #ViratKohli
    ஆஸ்திரேலிய அணி ஐபிஎல் தொடருக்கு முன் இந்தியா வந்து விளையாடியது. அப்போது டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்று அசத்தியது. அதன்பின் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 5-0 என கைப்பற்றிது. இதனால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர் அவருக்க மறக்க முடியாத தொடராகும்.

    தொடர் முடிந்து ஆஸ்திரேலியா செல்லும்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் எம்எஸ் டோனி ஆகியோரின் ஜெர்சியை வாங்கிச் சென்றார்.



    இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த இரண்டு ஜெர்சிகளையும் காண்பித்தபடி, ‘‘எல்லா காலங்களிலும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களான (ALL Time Greats) இருவருக்கும் மரியாதை அளிப்பது மிகப்பெரியது’’ என்று தெரிவித்துள்ளார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. #PAKvAUS
    சார்ஜா:

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நேற்று பகல்- இரவாக நடந்தது.

    முதலில் விளையாடிய பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன் குவித்தது. முகமது ரிஸ்வான் சதம் அடித்தார். அவர் 126 பந்தில் 115 ரன்னும் (11 பவுண்டரி) கேப்டன் சோயிப் மாலிக் 60 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 47.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் மீண்டும் சதம் அடித்தார். அவர் 143 பந்தில் 153 ரன்னும் (11 பவுண்டரி, 6 சிக்சர்), உஸ்மான் கவாஜா 88 ரன்னும் எடுத்தனர். இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்தனர். ஆரோன் பிஞ்ச் முதல் ஆட்டத்தில் 116 ரன்களை எடுத்து இருந்தார்.



    இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 5 போட்டிக் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

    முதல் ஆட்டத்திலும் 8 விக்கெட்டில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது போட்டி வருகிற 27-ந்தேதி அபுதாபியில் நடக்கிறது. #PAKvAUS
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே முழு பொறுப்பு எனவும் வேறு எவரையும் குறைகூற விரும்பவில்லை எனவும் ஆரோன் பிஞ்ச் கூறியுள்ளார். #AaronFinch #AUSvIND
    மெலபோர்ன்:

    இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டித்தொடரை ஆஸ்திரேலியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. இந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியதாவது:-

    இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே முழு பொறுப்பு. வேறு எவரையும் குறைகூற விரும்பவில்லை. டெஸ்ட், ஒருநாள் தொடரில் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆடிய எனது செயல்பாடே தோல்விக்கு காரணம். எனது ஆடும் உத்தியில் தவறுகளை களைய வேண்டும். எனது ஆட்டத் திறமையை மேம்படுத்த வேண்டும். கேப்டனாக நான் சரியாக விளையாடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.



    தொடக்க வீரரான ஆரோன் பிஞ்ச் டெஸ்ட் தொடரில் 96 ரன்களும், ஒரு நாள் தொடரில் 26 ரன்களும் மட்டுமே எடுத்தார். ஒருநாள் போட்டியில் அவர் 3 முறையும், புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில்தான் ஆட்டம் இழந்தார். #AaronFinch #AUSvIND
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஐபிஎல் 2019 சீசனுக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து யுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச் உள்பட 9 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். #IPL2019 #KXIP
    ஐபிஎல் அணிகள் 2019 சீசனுக்கு தயாராகி வருகின்றன. வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கலாம், யார் யாரை விடுவிக்கலாம் என்பதில் கவனம் செலுத்து வருகிறது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேஎல் ராகுல், கருண் நாயர், கேப்டன் அஸ்வின் உள்பட 9 பேரை தக்க வைத்துள்ளது. 11 வீரர்களை விடுவித்துள்ளது. ஒரு வீரரை மற்ற அணியில் இருந்து வாங்கியுள்ளது.

    வெளிநாட்டு வீரர்களான சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான், அண்ட்ரிவ் டை, கிறிஸ் கெய்ல், டேவிட் மில்லரை தக்கவைத்துள்ளது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விடுவித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஆரோன் பிஞ்ச், 2. அக்சார் பட்டேல், 3. மோகித் சர்மா, 4. யுவராஜ் சிங், 5. பரிந்தர் ஸ்ரன், 6. பென் டிவார்ஷுயிஸ், 7. மனோஜ் திவாரி, 8. அக்தீப் நாத், 9. பர்தீப் சாகு, 10 மயாங்க் டாகர், 11. மன்சூர் டார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print