என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஒருநாள் அணி கேப்டன்: சுப்மன் கில்லுக்கு ஆரோன் பிஞ்ச் ஆதரவு
    X

    ஒருநாள் அணி கேப்டன்: சுப்மன் கில்லுக்கு ஆரோன் பிஞ்ச் ஆதரவு

    • சுப்மன் கில் டி20 மற்றும் டெஸ்ட் கிரகி்கெட்டின் சிறந்த கேப்டன் என்பதை ஏற்கனவே காண்பித்து விட்டார்.
    • ஆகவே, ஒருநாள் கிரிக்கெட்டிலும் எந்த மாறுபாடும் இருக்காது.

    இந்திய ஒருநாள் அணி கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் 2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதற்கு ஒரு பக்கம் ஆதரவும், மறுபக்கம் எதிர்ப்பும் உருவாகியுள்ளது.

    இந்த நிலையில், சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஆதரித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச்.

    சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக ஆரோன் பிஞ்ச் கூறியதாவது:-

    சுப்மன் கில் டி20 மற்றும் டெஸ்ட் கிரகி்கெட்டின் சிறந்த கேப்டன் என்பதை ஏற்கனவே காண்பித்து விட்டார். ஆகவே, ஒருநாள் கிரிக்கெட்டிலும் எந்த மாறுபாடும் இருக்காது என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.

    ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான தொடர் மிகச் சிறந்த தொடராக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவான் என நினைக்கிறேன். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலியா 2-1 எனக் கைப்பற்றும். இருந்தாலும் இதில் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் இந்தியா சிறந்த அணி. இந்த தொடரை பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்றார்.

    Next Story
    ×