search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் கடை"

    • ரேசன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • வழிகாட்டு நெறிமுறைகள் பணியாளர்களுக்கு கூறப்பட்டது.

    கோபி:

    தமிழக அரசு பொறு ப்பேற்றதும் மகளிருக்கான மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க ப்போவதாக அறிவித்தது. இந்த உரிமைத்தொகையை ரேசன் கடை மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்க ப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் நியாய விலை கடைகளில் வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் இந்த படிவங்கள் உரிய முறையில் உண்மையான பயனாளி களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

    அதன டிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடை பணியா ளர்களுக்கும் இது தொட ர்பாக ஆலோசனையும், பயிற்சியும் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் கோபி கோட்டத்தில் உள்ள கோபி, நம்பியூர், சத்திய மங்கலம், தாளவாடி, அந்தி யூர் மற்றும் பவானி ஆகிய பகுதிகளில் முழுநேர மற்றும் பகுதி நேரமாக செயல்பட்டு வரும் 670 ரேசன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப திவாளர் ராஜ்குமார் தலைமையில் கோபி சரக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் நர்மதா முன்னிலையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி வகுப்பில் பொது விநியோக திட்ட பதிவாளர் கந்தசாமி, கூட்டு றவு சார்பதிவாளரும், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனருமான சுரேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    இந்த பயிற்சி வகுப்பில், கோபி, அந்தியூர், நம்பியூர், தாளவாடி, சத்தியமங்கலம், பவானி ஆகிய 6 தாலுகாவில் உள்ள 680 ரேசன் கடைகளில் பணியாற்றும் 468 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சி வகுப்பில் படிவங்களை வழங்குதல், நாள் தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களிலும் 160 பேருக்கு மட்டும் படிவம் வழங்க வேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பணியாளர்களுக்கு கூற ப்பட்டது.

    நிகழ்ச்சியில் கோபி குடிமை பொருள் தாசில்தார் கார்த்திக், கோபி வருவாய் ஆய்வாளர் ரஜிக்குமார், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க பொது மேலாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் உரிமைத் திட்டத்தினை தொய்வின்றி செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
    • எவ்வித புகாருக்கும் இடமின்றி இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வீடு வீடாக வழங்கும் பணியில் ரேசன் கடைகளுக்கு தொடர்பு இல்லாத நபர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று கூட்டுறவுதுறை பதிவாளர் எச்சரித்துள்ளார். எக்காரணத்தை கொண்டும் வெளிநபர்களால் விண்ணப்பம் வழங்கப்படுவதற்கு அனுமதி இல்லை.

    மகளிர் உரிமைத் திட்டத்தினை தொய்வின்றி செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எவ்வித புகாருக்கும் இடமின்றி இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கடந்த இரண்டு மாதத்திற்கு முன் காய்கறிகளுக்கு உரிய விலை இல்லாமல் விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.
    • காய்கறிகளின் விலை சந்தையில் ஏற்றம், இறக்கத்தின் போது சராசரி விலை கிடைத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தருமபுரி,

    காய்கறி பொருட்களை ரேசன் கடையில், குறைந்த விலையில், குடும்ப அட்டை தாரருக்கு வழங்க வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதாவிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    மத்திய அரசின் மோசமான கொள்கையே விலை உயர்வுக்கு காரணம். கடந்த இரண்டு மாதத்திற்கு முன் காய்கறிகளுக்கு உரிய விலை இல்லாமல் விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.

    தக்காளி உள்ளிட்ட சிலகாய்களுக்கு உரிய கட்டுப்படியான விலை கிடைக்காததால் தோட்டத்திலேயே தக்காளியை அழித்தனர். தற்போது தக்காளி உயர்வுக்கு பருவநிலை ஒரு காரணமாக உள்ளது.

    காய்கறிகளின் விலை சந்தையில் ஏற்றம், இறக்கத்தின் போது சராசரி விலை கிடைத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு காய்கறிகள் விலை சராசரியாக கிடைக்க ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரருக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா, முன்னாள் மாவட்ட செயலாளர் கிரைஸாமேரி, மாவட்ட தலைவர் ஜெயா, நகரசெயலாளர் நிர்மலாராணி, உள்ளிட்டா நிர்வாகிகளுடன் மனு கொடுத்தனர்.

    • ரேசன்கடைகளில் தக்காளியை விற்பதால் மக்களுக்கு பயன் இல்லை.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.

    மதுரை

    அ.தி.மு.க. பொதுச்செய லாளராக எடப்பாடி பழனி சாமி தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்தது. இதையடுத்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலை மையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்

    பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வுக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை வலிமையான இயக்கமாக நடத்தி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால் இதுவரை மக்களுக்கு பயன்படக்கூடிய எந்த திட்டத்தையும் அவர்கள் நிறைவேற்ற வில்லை. மதுரை மக்களுக்கு எந்த அடிப்படை திட்டங் களையும் கொண்டு வராமல் கலைஞர் பெயரிலான நூலகத்தை மட்டுமே தந்துள்ளனர்.

    மக்களுக்கு போதிய சாலை வசதி இல்லை. அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. விலைவாசி தற்போது அதி கரித்துவிட்டது. காய்கறிகள் மளிகை பொருட்கள் தினந்தோறும் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ரேஷன் கடைகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விற்க போவதாக கூறுகிறார்கள். ரேஷன் கடையில் தக்காளியை விற்பதால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை .

    தக்காளி அழுகும் தன்மை கொண்டதால் விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படு வார்கள்.

    மேலும் நகரும் கடைகள் மூலம் காய்கறிகள், தக்காளியை விற்பனை செய்தால் மட்டுமே மக்கள் பயனடைவார்கள். இதனை அரசு கவனத்தில் கொண்டு நகரும் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்ய வேண்டும் .

    அமைச்சர் செந்தில் பாலாஜியை சுதந்திர போராட்ட தியாகி போல தி.மு.க.வினர் போற்று கிறார்கள். ஊழல் செய்தால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத்தான் செய்யும். ஆனால் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தேவை யில்லாமல் மத்திய அரசை விமர்சிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்
    • ஒரு கிலோ ரூ.60-க்கு தருகிறார்கள்

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்திலும் தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை விற்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் தக்காளி விலையை குறைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ரேசன் கடைகள் மூலமாக தக்காளியை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து ரேசன் கடைகள் மூலமாக தற்போது தக்காளி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதேபோல நாகர்கோவில் ஊட்டுவாழ்ம டம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று தக்காளி விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்வமாக வந்து தக்காளியை வாங்கி சென்றனர். ஒரு நபருக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்பட்டது.

    இதேபோல மாவட்டத்தில் உள்ள மேலும் 4 ரேசன் கடைகளில் தக்காளி பொதுமக்களுக்கு வழங்க கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வகையில் மறவன்குடியிருப்பு, கலைநகர், புன்னைநகர் மற்றும் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே என மேலும் 4 ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி வினியோகம் செய்யப்பட்டது.

    ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வெளி மார்க்கெட்டில் இன்றும் தக்காளி விலை அதிகமாகவே இருந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்டா மார்க்கெட், கனக மூலம் சந்தை மற்றும் கோட்டார் மார்க்கெட்டு களில் தக்காளி ரூ.120-க்கு விற்பனையானது.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "தக்காளியின் வரத்து குறைவாக உள்ளதால் தொடர்ந்து ரூ.120-க்கு விற்கப்பட்டு வருகிறது. தக்காளியின் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது. பெங்களூர் பகுதிகளில் இருந்து வழக்கமாக வரும் தக்காளியை விட பாதி அளவே தக்காளிகள் மார்க்கெட்டு களுக்கு விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது" என்றனர்.

    ரேஷன் கடைகளில் தக்காளி வினியோகம் செய்யப்பட்டது. இது குறித்து இல்லத்தரசிகளிடம் கேட்டபோது," மார்க்கெட்டுகளில் தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் நாங்கள் தக்காளி பயன்பாட்டை குறைத்து வந்தோம். வழக்கமாக ஒரு கிலோ தக்காளியை வாங்கி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிராம் கணக்கில் தான் தக்காளியை வாங்குகிறோம்.

    இந்த நிலையில் ரேசன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 விற்பனை செய்யப்படுவது வரவேற்கத் தகக்கது. ஒரு சில கடைகளில் மட்டுமே தற்போது தக்காளி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து ரேசன் கடைகளிலும் தக்காளியை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

    • உழவாலயத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
    • உழவர் தின விழாவை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைமை அலுவலகம் உழவாலயத்தில் கட்சித் தலைவர் செல்லமுத்து தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் மாநில செயலாளர் சின்ன காளிபாளையம் ஈஸ்வரன், மாநில பொருளாளர் பாலசுப்ரமணியம், மாநில மகளிர் அணி செயலாளர் கே.சி.எம். சங்கீத பிரியா, ஊடக பிரிவு செயலாளர் ஈஸ்வரன்,இளைஞரணி செயலாளர் காடாம்பாடி கணேசன், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி.பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் வரும் ஜூலை 5ந்தேதி உழவர் தின விழாவை சிறப்பாக நடத்துவது. தமிழக அரசு ரேசன்கடைகளில், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின் கட்சித் தலைவர் செல்லமுத்து செய்தியாளரிடம் கூறியதாவது:- திருப்பூர், கோவை மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் இங்கு உள்ள பல விவசாயிகள் தென்னை விவசாயத்திற்கு மாறிவிட்டனர். இந்தநிலையில் தற்போது தேங்காய் விலை குறைந்துள்ளது.

    உதாரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன் தேங்காய் ஒன்றின் விலை ரூ.13 முதல் ரூ. 14.50 வரை விலை கிடைத்தது. தற்போது தேங்காய் ஒன்றின் விலை ரூ.10 முதல் 11.50 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தென்னை விவசாயத்திற்கு பயன்படும் மருந்துகள், உரம், போன்றவைகள் கடுமையாக விலை அதிகரித்துள்ள நிலையில் தேங்காய் விலை குறைவால் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    மேலும் ரேசன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெயை வினியோகிக்க அரசு முன்வர வேண்டும். மேலும் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசு உரம், இடுபொருள்களுக்கு மானியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு விவசாயிகளிடமிருந்து இனாம் நிலங்களை கைப்பற்றுவதை விடுத்து அந்த நிலங்களை பண்படுத்தி பல வருடங்களாக கஷ்டப்பட்டு கடன் பட்டு, மலடாக இருந்த நிலத்தை ,விளை நிலமாக மாற்றிய விவசாயிகளுக்கு அவர்களது பெயரிலேயே பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்
    • வெட்டூர்ணி மடம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படாமல் தடுக்க உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காமினி உத்தரவின்பேரில் தென் மண்டல போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா அறிவுறுத்தல்படி குமரி மாவட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள் தலைமையிலான போலீசார் நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ரேஷன் கடையில் பொருட்கள் இருப்பு குறித்தும், சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    • ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ரேசன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • போலீசார் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரையில் ரேசன் அரிசி மற்றும் பொருட்கள் கடத்தப்படுவதாக குடிமை பொருள் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து ரேசன் அரிசி மற்றும் பொருட்கள் கடத்தலை தடுக்கவும், அதில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் போலீசார் திடீர் சோதனை களை நடத்தி வருகின்றனர்.

    இதன் மூலம் ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்தும், கடத்தலுக்கு பயன்படும் வாகனங்களை பறிமுதல் செய்தும் நட வடிக்கை எடுத்து வரு கின்றனர்.

    இந்த நிலையில் மதுரை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை துணை சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் மாரி முத்து, ராமச்சந்திரன் ஆகியோர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்தனர்.

    ரேசன் கடைகளில் பொருட்களின் இருப்பு மற்றும் எடை அளவு ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    • ரேசன் கடைகள் கட்டிட பணிகளை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை தாங்கினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள36 வார்டுகளில் இரண்டுக்கும் மேற்பட்ட வார்டுகளை உள்ளடக்கிய ஒரு ரேசன் கடை இருப்பதால் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. மேலும் ரேசன் கடை பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக, பரமக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 21, 28 26 ஆகிய வார்டுகளில் புதிய ரேஷன் கடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது.நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் முன்னிலை வகித்தார்.

    இதில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் பங்கேற்று ரேசன் கடை கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இளநிலை பொறியாளர் சுரேஷ், 28-வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி, 30-வது வார்டு கவுன்சிலர் மாரியம்மாள் மும்மூர்த்தி, நகர் மாணவரணி மகேந்திரன், 26-வது கவுன்சிலர் ராதா பூசத்துரை, சோலை செல்லப்பாண்டி, 21-வது வார்டு கவுன்சிலர் பிரபா சாலமன், வார்டு செயலாளர் வாணி குமார், நகர் மீனவரணி அமைப்பாளர் நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் திறந்து வைத்தார்
    • ரேசன் அட்டை தாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நாட்றம்பள்ளி முழு நேர ரேசன் கடையை பிரித்து பி.பந்தாரப்பள்ளி கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் கத்தாரி முழு நேர ரேசன் கடையை பிரித்து பள்ளத்தூர் கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை ஆகிய 2 ரேசன் கடையை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. தேவராஜ் முன்னிலை வகித்தார் அதன் பிறகு மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து அத்தியாவசிய பொருட்களை ரேசன் அட்டை தாரர்களுக்கு வழங்கினர்.

    இவ்விழாக்களில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், நாட்றம்பள்ளி பேரூராட்சி தலைவர் சசிகலா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனுசாமி, வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர், கூட்டுறவு சார் பதிவாளர் பூவண்ணன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • குறுகிய இடத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது.

    நாகர்கோவில்:

    பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட சகாயகிரி பகுதியில் உள்ள ரேசன் கடை இடநெருக்கடியான குறுகிய இடத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது.

    எனவே ரேசன் கடைக்கு என புதிதாக சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து நடுத்துறை மீனவர் கூட்டுறவு சங்கம் அருகில் ரேசன் கடை கட்டிடம் கட்டுவதற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

    இதனைத் தொடர்ந்து கட்டப்பபட்ட புதிய ரேசன் கடை கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்து, அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    ரேசன் கடை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் திருமங்கலத்தில் நடந்தது.
    திருமங்கலம்

     தமிழக அரசு சார்பில் நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம் மதுரை மாவட்டத்தில் முதன் முதலாக திருமங்கலத்தில் நடந்தது. இதில்  திருமங்கலம், கள்ளிக்குடி, உசிலம்பட்டி, பேரையூர், செல்லம்பட்டி பகுதியில் உள்ள 600 நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பங்கேற்றனர்.  

    முகாமை மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின்  இணைப்பதிவாளர் குருமூர்த்தி தொடங்கி வைத்தார். 

    முழு உடல் பரிசோதனை, கண், சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்து மருத்துவம் பார்க்கப்பட்டது. மேலும் நியாய விலை கடை பணியாளர்களுக்கு மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டது. 

    இதில் ராக்ஸ் மருத்துவமனை மற்றும் அகர்வால் மருத்துவமனை இணைந்து  பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சார்பதிவாளர்கள் நடராஜன், ராஜகுமார், ரமேஷ், சுந்தரபாண்டியன், தங்கமுத்து, தினேஷ், தமிழ்ச்செல்வன், தங்கநாதகுரு, சீனியப்பா முன்னிலை வகித்தனர்.
    ×