என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்ததை கொண்டாடும் வகையில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இனிப்பு வழங்கினார். அருகில் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, திரவியம், குமார், கருப்பசாமி, முத்துவேல் உள்ளனர்.
ரேசன்கடைகளில் தக்காளியை விற்பதால் மக்களுக்கு பயன் இல்லை
- ரேசன்கடைகளில் தக்காளியை விற்பதால் மக்களுக்கு பயன் இல்லை.
- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.
மதுரை
அ.தி.மு.க. பொதுச்செய லாளராக எடப்பாடி பழனி சாமி தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்தது. இதையடுத்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலை மையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்
பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வுக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை வலிமையான இயக்கமாக நடத்தி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால் இதுவரை மக்களுக்கு பயன்படக்கூடிய எந்த திட்டத்தையும் அவர்கள் நிறைவேற்ற வில்லை. மதுரை மக்களுக்கு எந்த அடிப்படை திட்டங் களையும் கொண்டு வராமல் கலைஞர் பெயரிலான நூலகத்தை மட்டுமே தந்துள்ளனர்.
மக்களுக்கு போதிய சாலை வசதி இல்லை. அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. விலைவாசி தற்போது அதி கரித்துவிட்டது. காய்கறிகள் மளிகை பொருட்கள் தினந்தோறும் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ரேஷன் கடைகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விற்க போவதாக கூறுகிறார்கள். ரேஷன் கடையில் தக்காளியை விற்பதால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை .
தக்காளி அழுகும் தன்மை கொண்டதால் விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படு வார்கள்.
மேலும் நகரும் கடைகள் மூலம் காய்கறிகள், தக்காளியை விற்பனை செய்தால் மட்டுமே மக்கள் பயனடைவார்கள். இதனை அரசு கவனத்தில் கொண்டு நகரும் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்ய வேண்டும் .
அமைச்சர் செந்தில் பாலாஜியை சுதந்திர போராட்ட தியாகி போல தி.மு.க.வினர் போற்று கிறார்கள். ஊழல் செய்தால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத்தான் செய்யும். ஆனால் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தேவை யில்லாமல் மத்திய அரசை விமர்சிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்






