என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதியதாக 2 பகுதி நேர ரேசன் கடை
- கலெக்டர் திறந்து வைத்தார்
- ரேசன் அட்டை தாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நாட்றம்பள்ளி முழு நேர ரேசன் கடையை பிரித்து பி.பந்தாரப்பள்ளி கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் கத்தாரி முழு நேர ரேசன் கடையை பிரித்து பள்ளத்தூர் கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை ஆகிய 2 ரேசன் கடையை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. தேவராஜ் முன்னிலை வகித்தார் அதன் பிறகு மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து அத்தியாவசிய பொருட்களை ரேசன் அட்டை தாரர்களுக்கு வழங்கினர்.
இவ்விழாக்களில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், நாட்றம்பள்ளி பேரூராட்சி தலைவர் சசிகலா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனுசாமி, வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர், கூட்டுறவு சார் பதிவாளர் பூவண்ணன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






