search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோதல்"

    • வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • முருகன், மகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஆனைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 52).

    இவர் தனது குடும்பத்தினருடன் நாகர்கோவிலில் நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்கு வந்திருந்தார். அப்போது அங்கு ஆணை பொத்தை புத்தேரியை சேர்ந்த முருகன் (45) என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி கை கலப்பு ஏற்பட்டது.

    இதில் கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் லட்சுமி, செந்தூர் பாண்டி, ஆனந்த், வளர்மதி, விஜயன், சூரியா, மணிகண்டன், சத்யா, மற்றொரு மணிகண்டன் ஆகியோர் காயம் அடைந்ததாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்து உள்ளனர்.

    இது குறித்து வடசேரி போலீசில் கணேசன் புகார் செய்தார். அதில், முருகன், அவரது மகன்கள் சிவா(24), கார்த்திக் (22) மற்றும் செல்வம் (26), மகேஷ் (35) மற்றும் சிலர் சேர்ந்து கம்பு, கத்தி, அரிவாள் ஆகியவற்றால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டு உள்ளார்.

    மேலும் தங்கள் குடும்பத்தினரின் 6 செல்போன்கள் மற்றும் சகோதரியின் தாலி சங்கிலி சம்பவத்தின் போது மாயமாகி விட்டதாகவும் கணேசன் புகாரில் தெரிவித்து உள்ளார். அதன் அடிப்படையில் வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து சிவா, அவரது சகோதரர் கார்த்திக் மற்றும் செல்வம் கைது செய்யப்பட்டனர். முருகன், மகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • கடந்த ஒரு ஆண்டாக மாணவர்க ளிடையே சிறு, சிறு மோதல் ஏற்பட்டு வருவதும், மாணவர்கள் ஆசிரியர் மீது கல் எரிந்து பிரச்சினையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது
    • ஆசிரியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி யில் 740 மாண வர்கள் பயின்று வருகின்ற னர். 20 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்தப் பள்ளியில் கடந்த ஒரு ஆண்டாக மாணவர்க ளிடையே சிறு, சிறு மோதல் ஏற்பட்டு வருவதும், மாணவர்கள் ஆசிரியர் மீது கல் எரிந்து பிரச்சினையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சம்பவத் தன்று மாலை மாணவர்கள் 2 பிரிவினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பள்ளி வளாகத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களின் வெளி நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து பள்ளிக்கு வரவழைத்து பெரும் மோதலில் ஈடுபட ஆயத்தமாகினர்.

    இந்த தகவல் அறிந்த ஆசிரியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

    இதையடுத்து நேற்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கராஜ், தலைமை ஆசிரியர் உமாராணி ஆகியோர் மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்தனர்.

    தொடர்ந்து தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தரன் உள்ளிட்டோர் முன்னி லையில் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தவறான நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். மேலும் இதுபோன்ற மோதல்கள் உருவாகாமல் இருக்க பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி மாணவர்களின் போக்கை கண்காணித்து ஒழுங்கு படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    • செந்துறையில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது
    • மோதல் தொடர்பாக 82 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள பால் பண்ணை அருகே அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அலுவலகம் உள்ளது. இந்தநிலையில், அ.தி.மு.க.வினர் தங்களது அலுவலகத்தின் கிழக்கு பகுதியில் இருந்த சுற்றுச்சுவரை அகற்றி டீக்கடை வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் டீக்கடை வைக்கும் பணியினை நேற்று முன்தினம் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் அந்த கடையை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதனைதொடர்ந்து இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். பின்னர் கல்வீச்சில் போலீசார் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் 82 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டைமிங் பிரச்சினையில் 2 பஸ் டிரைவர், கண்டக்டர்களும் செரு ப்பால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு அரசு ஏ.சி. பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதனைத் ெதாடர்ந்து சாதாரண அரசு பஸ்சும் அடுத்து புறப்பட்டு செல்லும். இந்த நிலையில் கொடைக்கானல் பஸ் நிலையத்தில் ஏ.சி. பஸ் டிரைவர் தாமதமாக பஸ்சை எடுத்துள்ளார்.

    இதனை சாதாரண பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் தட்டிக்கேட்டு ள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பும் ஒருவரு க்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து 2 பஸ் டிரைவர், கண்டக்டர்களும் செரு ப்பால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது. டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்கள் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பொது இடத்தில் தகாதமுறையில் நடக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • அழகிய மீனாள் கோவிலில் சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினர் திடீரென மோதிக் கொண்டனர்.
    • திருவிழாவின் போது மாவட்ட காவல்துறை சார்பாக 100-க்கும் மேற் பட்ட போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ளது பள்ளப்பட்டி கிராமம். இந்த கிராமத்தினருக்கும், நரிக்கு டியிலுள்ள ஒரு தரப்பினர் மற்றும் இதர பிரிவை சேர்ந்த மக்களுக்கும் சாமி கும்பிடுவதில் சமீப காலமாக பிரச்சினை இருந்து வந்தது.

    இந்த நிலையில் நரிக்குடி பகுதியில் அமைந்துள்ள அழகிய மீனாள் கோவிலில் பள்ளப்பட்டி கிராமத்தினர் தனியாக காப்புக்கட்டி திரு விழா நடத்த முடிவு செய்த தாக கூறப்படுகிறது. இத னையறிந்த நரிக்குடி பகு தியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினரும் மற்றும் இதர சமூகத்தினரும் பள்ளப்பட்டி கிராமத்தினர் திருவிழாவை தனித்து நின்று நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த னர்.

    இதனால் பாதிக்கப்பட்ட பள்ளப்பட்டி கிராமத்தினர் திருச்சுழி தாசில்தாரிடம் புகார் அளித்தனர். இதனை யடுத்து திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் இரு தரப்பையும் சேர்ந்த தலா 5 பேரை ஊர் முக்கியதர்களாக அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து இரண்டு மணி நேர பேச்சு வார்த் தைக்கு பிறகு இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    இதில் பள்ளப்பட்டி கிரா மத்தினர் நரிக்குடி பேருந்து நிலையம் அருகேயுள்ள அய்யனார் கோவிலில் காப் புக்கட்டும் நிகழ்ச்சியை நடத் திக்கொள்வது, கிராமத்தி னர் சார்பாக 5 பொங்கல் வைத்து சாமி கும்பிடுவது, கோவில் திருவிழாவின் போது மேள, தாளமின்றி அமைதியான முறையில் வழிபாடு செய்வது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பா டுகளுடன் சாமி கும்பிட கூட்டத்தில் முடிவு செய்து இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் மேலும் பள்ளப்பட்டி கிராமத்தினர் நடத்தும் இந்த திருவிழா விற்கு இந்த ஆண்டு மட்டுமே அனுமதி எனவும், வரும் காலங்களில் அனுமதி யில்லை எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு இரு தரப்பினரும் சம்மதம் தெரி வித்தனர். பள்ளப்பட்டி கிராமத்தினர் அய்யனார் சுவாமிக்கு பல்வேறு பூஜை கள் நடத்திய நிலையில் ஆண்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் காப்புக் கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர்.

    இதற்கிடையே பள்ளப் பட்டி கிராமத்தினர் அதிக எண்ணிக்கையில் பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்வ தற்கு மீண்டும் அனு மதி கோரியதாக கூறப்படு கிறது. இந்தநிலையில் அருப்புக்கோட்டை கோட் டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதனைய டுத்து பள்ளப்பட்டி கிரா மத்தினர் கோரிய அதிகப்ப டியான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிக்கு நரிக்குடி பகு தியை சேர்ந்த ஒரு தரப்பினர் மற்றும் இதர வகுப்பை சேர்ந்தவர்களுக்கு உடன் பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஏற்க னவே திட்டமிட்டப்படி நேற்று மாலை பள்ளபட்டி கிராமத்தினர் போலீசாரின் பாதுகாப்புடன் நரிக்குடி அழகிய மீனாள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் வளாகத் தில் பள்ளப்பட்டி கிராமத் தினர் பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்தனர்.

    இந்த விழாவில் பள்ளப் பட்டி கிராமத்தினர் அனை வரும் ஒன்றிணைந்து அமை தியான முறையில் சாமி கும்பிட்டு வழிபாடுகள் செய்த நிலையில் நேற்று மாலை திருவிழா நிறைவ டைந்தது. இந்த திருவிழாவின் போது மாவட்ட காவல்துறை சார்பாக 100-க்கும் மேற் பட்ட போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை மருந்து வாங்க வந்ததாக கூறினார்
    • ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணையை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 33). இவர் சோலையாறு அணை மின்வாரியத்தில் உதவி என்ஜினீயராக வேலை பார்த்து வருகி றார். இங்கு ராஜேந்திரன் (50) என்பவர் கிரேன் ஆபரேட்டரக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று ராமச்ச ந்திரன் பஜாருக்கு காரில் சென்றார். அப்போது அவர் அங்கு ராஜேந்திரனை பார்த்தார். உடனடியாக காரை நிறுத்தி வேலை நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கி றாய் என கேட்டார். அதற்கு ராஜேந்திரன் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை மருந்து வாங்க வந்ததாக கூறினார். என்னிடம் சொல்லாமல் ஏன் வந்தாய் என ராமச்சந்திரன் கேட்டார்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே நடுரோட்டில் வைத்து ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் விலக்கி விட்டனர். தாக்குதலில் காயம் அடைந்த 2 பேரும் வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.

    இது குறித்து உதவி என்ஜினீயர் ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரு தரப்பினர் மோதல்; 9 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ளது கீழக்குளம் கிராமம். இங்குள்ள மந்திரமூர்த்தி அய்யனார் கோவிலில் கடந்த வாரம் புரவிடுப்பு விழா தொடங்கி யது. இந்த திருவிழா தொடர்பாக கீழக்கு ளத்தைச் சேர்ந்தவரும் கே.ஆர். பட்டணம் ஊராட்சியின் துணைத் தலைவருமான பெரியசாமி தரப்பிற்கும், முதுகுளத்தூர் திமுக ஒன்றிய செயலா ளரான சண்முகம் தரப்பிற்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    கோவில் திருவிழா முடிந்து அன்னதானம் நடந்த போது இருதரப்பி னரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அரிவாள், கத்தி, கம்பு, கிரிக்கெட் மட்டை ஆகிய வற்றால் தாக்கியும், கற்களை வீசி எறிந்தும் இருதரப்பி னரும் கடுமை யாக மோதி கொண்டனர்.

    இதில் கீழக்குளத்தை சேர்ந்த சந்திரசேகர் (வயது42), சண்முகவேலு(67), பெருங்கருணையைச் சேர்ந்த சண்முகம்(47), கீழக்குளம் முருகன்(46) முத்துராமலிங்கம் மனைவி கஸ்தூரி(50), மகாலிங்கம் மகன் உதயகுமார்(19), முத்துக்குமார்(30), மாரி முத்து (43), ஜெகதீஸ்வரன்(33) ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இவர்கள் மதுரை, ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இந்த மோதலின் போது பாது காப்பு பணியில் ஈடுபட்ட அபிராமத்தை சேர்ந்த காவலர் சரவணன் காயம் அடைந்தார். இவர் கமுதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த மோதல் குறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி செல்வி நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது27). இவர் தனது நண்பர் பாலமுருகனோடு சிவகாசிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பாலமுருகன் பின்னால் அமர்ந்து சென்றார்.

    எதிர் திசையில் முதலிபட்டியை சேர்ந்த குருசாமி தனது தம்பி வருண்குமாருடன் (23) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் பாலமுருகன் மற்றும் வருண்குமார் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வருண்குமார் மேல்சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஆனால் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குருசாமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஆண்டு இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • இரு மாநில எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

    ஷில்லாங்:

    கடந்த 1972-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து மேகாலயா மாநிலம் உதயமானது. அப்போது முதல் இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.

    மத்திய அரசின் சமரசத்தால் கடந்த ஆண்டு இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும் இருமாநில எல்லையில் மோதல் சம்பவங்கள் தொடர் கதையாய் உள்ளன.

    இந்த நிலையில் மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்துக்கும் அசாமின் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்துக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள லபங்காப் கிராமத்தில் நேற்று இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது.

    இருதரப்பினரும் வில் மற்றும் அம்புகளை பயன்படுத்தி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். எனினும் இந்த மோதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் இரு மாநில எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

    • வடமாநில தொழிலாளர்களுக்கிடையே மோதல்-இரும்பு கம்பியால் தாக்கியதில் ஒருவர் காயம்
    • மேலும் தப்பிச்சென்ற சோட்டு, சச்சின் ஆகிய இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்

    துறையூர்,  

    திருச்சி மாவட்டம் துறையூர் மலையப்பன் சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் (வயது57).

    இவர் மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் கோவை மாவட்டம் சூலூரில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் இவரது வீட்டின் உட்புறத்தை அழகு படுத்துவதற்காக நாமக்கல்லை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை அணுகி உள்ளார்.

    அவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தர்மேந்தர் சர்மா (31), சோட்டு (28), சச்சின் (28) ஆகிய 3 பணியாளர்களை கண்ணையன் வீட்டிற்கு பணிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த மூன்று ேபரும் கண்ணையன் வீட்டின் கீழ் புறத்தில் ஒரு அறையில் தங்கி பணி செய்துள்ளனர்.

    இந்நிலையில் தர்மேந்தர் சர்மா என்பவரை சோட்டு, சச்சின் ஆகிய இருவரும் இரும்பு கம்பியால் தாக்கினர்.

    இதனை பார்த்த கண்ணையன் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டு உள்ளார்.

    இதனை கேட்ட சோட்டு, சச்சின் கண்ணையனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    பின்னர் மயக்க நிலையில் இருந்த தர்மேந்திர ஷர்மாவை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கண்ணையன் அளித்த புகாரின் பேரில் சோட்டு, சச்சின் ஆகிய இருவர் மீதும் துறையூர் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 307 (கொலை முயற்சி) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் தப்பிச்சென்ற சோட்டு, சச்சின் ஆகிய இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். துறையூரில் வடமாநில இளைஞர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • 2 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் மோதிக்கொண்டார்.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் ஊர் பிரச்சினையில் படிக்கும் மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து மோதிக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் அவர்கள் குற்ற வழக்குகளில் சிக்கி கல்வி பாதிக்கப் படுவதோடு வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாத்தூர் அருகே உள்ள நத்தத்துபட்டி, பொட்டல் பச்சேரியை சேர்ந்த சிலருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக 2 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் ஒருவரை யொருவர் தாக்குவதும், மோதிக்கொள்ளுவதும் நடந்து வருகிறது.

    அதன்படி சம்பவத்தன்று பொட்டல் பச்சேரியை சேர்ந்த ரடால்ப் சர்மா என்ற கல்லூரி மாணவர் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த நத்தத்து பட்டியை சேர்ந்த முக்தீஸ் வரன், சஞ்சய்பாண்டி, நவீன்குமார், பிரவீன்குமார் ஆகியோர் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள னர்.

    இதேபோல் சாத்தூர் சிலோன் காலனியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவரும், அணைக்கரைபட்டியை சேர்ந்த மாணவர்களால் தாக்கப்பட்டார். இது தொடர்பாக அம்மாபட்டி போலீசார் அந்த ஊரை சேர்ந்த கபிலேஷ், மாதேஷ் மீது வழக்குப்பதிவு செய்து ள்ளனர். மாணவர்கள் மோதலை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • செங்கல் லோடு ஏற்றிய லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டிருந்தது.
    • எதிர்பாரத விதமாக நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே அசூர் புறவழிச்சாலையில் நேற்று இரவு செங்கல் லோடு ஏற்றிய லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டிருந்தது. பெரம்பலூரியில் இருந்து பூம்புகார் நோக்கி செங்கல் லோடு ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை அரியலூர் மாவட்டம் ஆமணக்கு தோப்பு பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் ஒட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஆனஸ்ட் ராஜ் (வயது 33) என்பவர் மாற்று டிரைவராக பணியில் இருந்தார். இந்நிலையில் பெரம்பலூரில் இருந்து பூம்புகார் நோக்கி சென்ற லாரி எதிர்பாரத விதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

    இதில் ஆனஸ்ட் ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த ஆனஸ்ட்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×