வால்பாறையில் மின் வாரிய உதவி என்ஜினீயர்-கிரேன் ஆபரேட்டர் நடுரோட்டில் மோதல்

குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை மருந்து வாங்க வந்ததாக கூறினார் ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வால்பாறையில் மின் வாரிய உதவி என்ஜினீயர்-கிரேன் ஆபரேட்டர் நடுரோட்டில் மோதல்
Published on

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணையை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 33). இவர் சோலையாறு அணை மின்வாரியத்தில் உதவி என்ஜினீயராக வேலை பார்த்து வருகி றார். இங்கு ராஜேந்திரன் (50) என்பவர் கிரேன் ஆபரேட்டரக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று ராமச்ச ந்திரன் பஜாருக்கு காரில் சென்றார். அப்போது அவர் அங்கு ராஜேந்திரனை பார்த்தார். உடனடியாக காரை நிறுத்தி வேலை நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கி றாய் என கேட்டார். அதற்கு ராஜேந்திரன் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை மருந்து வாங்க வந்ததாக கூறினார். என்னிடம் சொல்லாமல் ஏன் வந்தாய் என ராமச்சந்திரன் கேட்டார்.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே நடுரோட்டில் வைத்து ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் விலக்கி விட்டனர். தாக்குதலில் காயம் அடைந்த 2 பேரும் வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.

இது குறித்து உதவி என்ஜினீயர் ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com