மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்
Published on

விருதுநகர்

சிவகாசி செல்வி நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது27). இவர் தனது நண்பர் பாலமுருகனோடு சிவகாசிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பாலமுருகன் பின்னால் அமர்ந்து சென்றார்.

எதிர் திசையில் முதலிபட்டியை சேர்ந்த குருசாமி தனது தம்பி வருண்குமாருடன் (23) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் பாலமுருகன் மற்றும் வருண்குமார் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வருண்குமார் மேல்சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குருசாமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com