சாலை விபத்தில் லாரி டிரைவர் பலி

செங்கல் லோடு ஏற்றிய லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டிருந்தது. எதிர்பாரத விதமாக நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது.
சாலை விபத்தில் லாரி டிரைவர் பலி
Published on

சுவாமிமலை:

கும்பகோணம் அருகே அசூர் புறவழிச்சாலையில் நேற்று இரவு செங்கல் லோடு ஏற்றிய லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டிருந்தது. பெரம்பலூரியில் இருந்து பூம்புகார் நோக்கி செங்கல் லோடு ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை அரியலூர் மாவட்டம் ஆமணக்கு தோப்பு பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் ஒட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஆனஸ்ட் ராஜ் (வயது 33) என்பவர் மாற்று டிரைவராக பணியில் இருந்தார். இந்நிலையில் பெரம்பலூரில் இருந்து பூம்புகார் நோக்கி சென்ற லாரி எதிர்பாரத விதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இதில் ஆனஸ்ட் ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த ஆனஸ்ட்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com