search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க.ஸ்டாலின்"

    • மதுரை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும்.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்திறப்பு விழாவிற்கு நாளை (15-ந்தேதி) மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைகளுடன் மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் சார்பில் எழுச்சிமிக்க வரவேற்பு அளிக்கப்ப டுகிறது.

    இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மு.மணி மாறன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    செம்மொழி நாயகர், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நூலகம் மதுரையில் உலகத்தரம் வாய்ந்த அளவில் ரூ.216 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க நூலகத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைத்து பேசுகிறார். இதற்காக நாளை காலை விமானம் மூலம் மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைகளுடன் மதுரை விமான நிலையம் முதல் விழா நடைபெறும் இடம் வரை பல்லாயிரக் கணக்கான தி.மு.க.வினர் பதாகைகளை ஏந்தி, எழுச்சிமிகுதியுடன் வரவேற்க வேண்டும்.

    இந்த மாபெரும் வரவேற்பு நிகழ்வில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட கழகத்தினர், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பி னர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக்கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பா ளர் கள், துணை அமைப்பாளர் கள், கழக முன்னோடிகள், உள்ளா ட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், கழகத்தினர், கழக உடன்பிறப்புகள் என பல்லாயி ரக்க ணக்கானோர் பங்கேற்க வேண்டும்.

    இந்த வரவேற்பு நிகழ்வில் பொதுமக்களுக் கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறுமின்றி தி.மு.க.வினர் மிக உற்சாக மாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    • நடிகரும் முன்னாள் எம்.பியுமான ராமராஜன் நேரில் சென்று இளையராஜாவிடம் ஆசிபெற்றார்.

    அன்னக்கிளி படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது இசையின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இளையராஜா. இவரது பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் வாழ்க்கையில் பிணைந்திருக்கும் அளவிற்கு கால் ஊன்றியிருக்கிறது.

    இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டி வருகிறார். இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவின் பிறந்தநாள் விழா இன்று கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தி இருந்தார்.



    இந்நிலையில் இளையராஜாவின் இல்லத்திற்கு நடிகரும் முன்னாள் எம்.பியுமான ராமராஜன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து ஆசிபெற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமராஜன், ஒவ்வொரு பிறந்தநாளிலும் அண்ணன் இளையராஜாவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டிருக்கிறேன். அவருடைய ஆசிர்வாதம் என்றும் எனக்கு இருக்கும். உலகம் முழுவதும் மயங்கக்கூடிய அளவிற்கு சுவையான பாடல்களை கொடுத்திருக்கிறார்.



    இன்று ராமராஜன் என்று மக்கள் பேசுகிறார்கள் என்றால் அதற்கு முழு காரணம் இளையராஜா அண்ணன் எனக்கு அளித்த பாடல்கள். 23 வாருடங்களுக்கு பிறகு மீண்டும் சாமானியன் படத்தின் மூலம் அவருடன் இணைந்திருக்கிறேன். அடுத்தடுத்த படங்களிலும் அவர் எனக்கு இசையமைப்பார். எல்லா படங்களுக்கும் அவர் நன்றாக இசையமைத்துள்ளார். ஆனால் என் படங்களுக்கு பெண்கள் விரும்பும் படி கிராமத்து சாயல் கொண்ட பாடல்களை கொடுத்தார். இன்னாள் எம்.பி அண்ணன் இளையராவை முன்னாள் எம்.பி. ராமராஜன் வாழ்த்துவது எனக்கு மிக பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.

    தற்போது ராமராஜன் நடிப்பில் உருவாகி வரும் சாமானியன் படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    • இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டி வருகிறார். இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவரது பிறந்தநாள் விழா இன்று இளையராஜாவின் இல்லத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    • மேலலட்சுமிபுரம் கிராமத்தில் ரூ. 1 கோடி 39 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் யூனியன் தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலலட்சுமிபுரம் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் ரூ. 1 கோடி 39 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

    சண்முகையா எம்.எல்.ஏ.

    இதனை தொடர்ந்து மேலலட்சுமிபுரம் புதிய துணை மின் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி துணை மின் நிலையத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒட்டப்பி டாரம் யூனியன் தலைவர் ரமேஷ், துணை தலைவர் காசிவிஸ்வநாதன், தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை பொறியாளர்கள் குருவம்மாள் (தூத்துக்குடி), பிரேமலதா (மதுரை)

    செயற்பொறியாளர்கள் கணேசன், சாமுவேல் சுந்தராஜ், ராம்குமார், உதவி செயற்பொறியாளர்கள் மாரிமுத்து, ஜெகதீசன், அருணாச்சலம் ராஜ்குமார், சுடலைமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் நவநீத கிருஷ்ணன், கனக ரத்தினம் சுகுமார், பஞ்சாயத்து தலைவர்கள் இளைய ராஜா, அருண்குமார், முத்து மகாலட்சுமி உட்பட மின்சார வாரிய உதவி பொறியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சுமார் 10 ஏக்கர் பரப்பளவு அருங்காட்சியக மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும்.
    • அகழாய்வு மூலம் கிடைத்த அரும்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

    நெல்லை:

    தமிகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், தமிழ் மற்றும் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அகழாய்வு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் பகுதியில் நடந்து வரும் அகழாய்வில் முதுமக்கள் தாழி உள்ளிட்ட அரும்பொருட்கள் ஏராளமானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    இந்த அரும் பொருட்களை மக்கள் பார்வையிட்டு, பழங்கால வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் அவற்றை அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் உள்பட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    அதில் நெல்லை மாநகரில் பொருநை நாகரிகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளையில் அகழாய்வு மூலம் கிடைத்த பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் தொல்லியல் துறை அதிகாரிகள் சார்பில் நடந்த இடம் தேர்வு பணியில் பாளை கே.டி.சி. நகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் 4 வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த இடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    நெல்லையின் அடையாளமாகவும், தமிழரின் அடையாளத்தை உலக மக்களுக்கு எடுத்துச்செல்லும் வகையிலும் அங்கு அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து அங்கு ஆரம்ப கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று காலை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதனையொட்டி ரெட்டியார்பட்டியில் நடந்த அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், கலெக்டர் கார்த்திகேயன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மொத்தம் ரூ.33 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு ரெட்டியார்பட்டி மலை பகுதியில் மொத்தம் 13 ஏக்கர் பரப்பளவு இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு அருங்காட்சியக மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும். 55 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் ரூ.33 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பொருநை அருங்காட்சியகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இங்கு அகழாய்வு மூலம் கிடைத்த அரும்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

    கொற்கை அகழாய்வில் கிடைத்த 812 பொருட்கள், ஆதிச்சநல்லூரில் கிடைத்த 1,620 பொருட்கள், சிவகளையில் கிடைத்த 185 பொருட்கள் என 2,617 பொருட்கள், 106 முதுமக்கள் தாழிகள் ஆகியவை பொதுமக்களுக்கு காட்சிபடுத்தும் வகையில் அங்கு வைக்கப்பட உள்ளது. மேலும் அந்த 3 இடங்களிலும் கிடைத்துள்ள வளையல்கள், பாசிமணிகள், சுடுமண் பொம்மைகள், இரும்பு, தாமிரத்தாலான பொருட்கள், நாணயங்கள், பல்வேறு வகையான பானை ஓடுகள், வெளிநாடுகளுடன் தமிழர்களின் தொடர்புகள் குறித்த பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது.

    அருங்காட்சியகமாக மட்டுமல்லாமல் இதை சுற்றுலா தலமாகவும் பயன்படுத்தும் வகையில் இதன் அருகில் உள்ள உயரமான பகுதியில், மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 'வியூ பாயிண்ட்' அமைக்கப்பட உள்ளது. இங்குள்ள தொலைநோக்கி மூலம் நெல்லையின் அழகை பார்க்கும் வசதி கிடைக்கும்.

    மேலும் இங்கு மூலிகை தோட்டங்கள், கைவினைப் பொருட்கள், கலை, கலாச்சார நடவடிக்கைகள், சுற்றுலாத்துறை மையங்கள், திறந்தவெளி திரையரங்கு என்று பல்வேறு அம்சங்களுடன் இந்த அருங்காட்சியக வளாகம் அமைக்கப்பட உள்ளது.

    • தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், கீழத்திருவேங்கடநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது வீட்டிற்கு சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் மற்றும் அருண்குமார் ஆகியோர் நண்பர்களுடன் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சரித்திர வரலாற்று புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்க உள்ளது.
    • இந்த கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்மந்தப்பட்ட இதுவரை யாரும் பார்த்திராத பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

    கோவை வ.உ.சி மைதானத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால சரித்திர வரலாற்று புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்க உள்ளது.


    சத்யராஜ் எழுதிய கருத்து

    இந்த கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்மந்தப்பட்ட இதுவரை யாரும் பார்த்திராத பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அவர் 70 ஆண்டு கால பொது வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள், எதிர்கொண்ட துயரங்கள் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் இடம் பிடித்துள்ளன.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை நடிகர் சத்யராஜ் இன்று தொடங்கி வைத்து அங்குள்ள வருகைப் பதிவில் தனது கருத்தையும் பதிவு செய்தார்.

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.
    • காயமடைந்தர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டிற்கு வழிபாட்டிற்காக கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்த சுற்றுலா வாகனம் இன்று அதிகாலையில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு கீழையூர் கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் லில்லி (வயது63) மற்றும் ரியான் (வயது9) ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் கடும் காயமடைந்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மெர்சி (வயது54), மற்றும் அஜித் (வயது24) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படு காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நாட்டார் கால்வாய் சீரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழரசி எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

    மானாமதுரை

    மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள கிருங்காகோட்டையை ஒட்டியுள்ள வைகை ஆற்றுப்பகுதியில் நாட்டார் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மூலம் 16 பெரியகண்மாய்கள், 25 சிறிய கண்மாய்கள், 30-க்கும் மேற்பட்ட குளங்கள், ஊரணிகளில் விவசாயத்தேவைக்கும், மீன்வளர்ப்புக்கும் தண்ணீர் நிரம்பி வந்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கால்வாய் முறையாக தூர்வா ரப்படாமல் போனதால் மேடாகி கருவேலமரங்கள் நிறைந்து தண்ணீர் செல்வது தடைபட்டது. இந்த நிலையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, நாட்டார் கால்வாயை தூர்வாரி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

    எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று நாட்டார் கால்வாயை சீரமைக்க ரூ10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது இந்த கால்வாயை தூர்வார ரூ.3 கோடி ஒதுக்கி பணிகளை செய்தது. முறையாக வேலை செய்யாமல் பெருமளவு நிதியை செலவழிக் காமல் வீணடிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். நாட்டார் கால்வாயை சீரமைக்கும் பணியால் 3 மாவட்டங்களும் பயனடையும் நிலை உள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமமும் பயன்பெறும். இந்த அறிவிப்பால் இந்த பகுதியில் மானாவாரியாக உள்ள நிலங்கள் விளைநிலங்களாக மாறும். சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் தனது கோரிக்கையை ஏற்று நிறைவேற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழரசி எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.
    • 25 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட வருகை தந்தனர்.

    மதுரை

    மதுரை திருப்பாலையை அடுத்துள்ள மேனேந்தல் மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால பொதுவாழ்வு மற்றும் அரசியல் பயணம் குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

    இதில் 500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை காண வரும் மாணவ-மாணவிகள் பொதுமக்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கும் வகையில் அரங்கம் முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளது.

    மிசா காலத்தில் மு.க. ஸ்டாலின் சிறையில் பட்ட துன்பங்களை காணும் வகையில் சிறைச்சா லைக்குள் அவரை போலீ சார் தாக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சி இன்று முதல் 10 நாட்கள் நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம்.

    மாணவ- மாணவிகள் மற்றும் குழந்தைகள் கண்காட்சியை பார்வையிட்ட பிறகு பொழுது போக்கு வதற்காக மைதானத்தில் ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவு ஸ்டால்கள், குடிநீர், கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    கண்காட்சியை அமைச்சர் மூர்த்தி தலைமையில் மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், இந்த புகைப்பட கண்காட்சி வருங்கால இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும்போது வாரிசு அரசியலுக்கு இடமில்லை. உழைப்பால் உயர்ந்தவர் முதல்வர் என்பது தெரிகிறது என்றார்.

    அமைச்சர் மூர்த்தி கூறுகையில், 10 நாட்கள் நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பார்வையிட உள்ளனர். இன்று மாலை 5 மணி அளவில் நடிகர் வடிவேல் பார்வையிட உள்ளார். 25-ந் தேதி மதுரை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை காண வருவதாகவும் தகவல் வந்துள்ளது. இந்த புகைப்பட கண்காட்சி மதுரை வடக்கு, மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடை பெறுகிறது என்றார்.

    திறப்பு விழாவில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி எம்.எல்.ஏ. மணிமாறன், எம்.எல்.ஏ. க்கள் சோழவந்தான் வெங்கடேசன், புதூர் பூமிநாதன், முன்னாள் அமைச்சர் பொன்.முத்து ராமலிங்கம், உயர்மட்ட செயல் திட்ட குழு உறுப்பி னர் குழந்தைவேல்,மாநில தீர்மானக் குழு உறுப்பினர் அக்ரி.கணேசன்.

    பொதுக்குழு உறுப்பினர் உசிலை சரவண குமார், மகிழன், அவைத் தலைவர்கள் பாலசுப்ர மணியன், ஒச்சுபாலு, மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அழகு பாண்டி, வக்கீல் கலாநிதி, இளைஞரணி மாநில இணைச்செயலாளர் ஜி.பி. ராஜா, மாணவரணி அமைப்பாளர் மருது பாண்டி.

    பகுதி செயலாளர்கள் சசிகுமார், ஈசுவரன், கிருஷ்ணபாண்டி, ஒன்றிய சேர்மன் வீரராகவன், வேட்டையன், இளைஞரணி மூவேந்திரன், வைகை மருது, மதி வெங்கட், அரசு வக்கீல் ஸ்ரீதர், பேரூர் தலைவர்கள் வாடிப்பட்டி பால்பாண்டி, ரேணுகா ஈசுவரி, மண்டல தலைவர்கள் வாசுகி சசிகுமார், முகேஷ் சர்மா, கவுன்சிலர்கள் வக்கீல் குட்டி என்ற ராஜரத்தினம், கருப்புசாமி, ரோகிணி பொம்மதேவன் மற்றும் அமெரிக்கன் கல்லூரி, யாதவா் கல்லூரி, லேடி டோக் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட வருகை தந்தனர்.

    • ஆர்.எஸ்.பாரதி வாய்ப்பு கிடைக்கின்ற பொழுதெல்லாம் பிராமண சமூகத்தினை சாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
    • பிராமண வெறுப்பு பேச்சுக்களை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமீபகாலமாக திமுகவினைச் சார்ந்த ஒருசில நிர்வாகிகள் பிராமண சமூகத்தினை தாக்கிப் பேசுவதும், சம்மந்தமில்லாமல் சாடுவதும் அதிகரித்து வருகிறது.

    திமுகவின் பேச்சாளர் ராஜிவ் காந்தி, சமீபத்தில் பிராமணர்களை இனப்படுகொலை செய்திருக்க வேண்டும் என்று அநாகரீகமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் பேசி உள்ளதை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

    திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வாய்ப்பு கிடைக்கின்ற பொழுதெல்லாம் பிராமண சமூகத்தினை சாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கட்சிகளுக்கோ, பிற கட்சி தலைவர்களுக்கோ அல்லது தனி நபர்களுக்கோ பதில் அளிக்கின்ற பொழுது பிராமண சமூகத்தின் பெயரினை இழுப்பது என்பது பகுத்தறிவு சார்ந்த செயல் இல்லை என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்.

    இவர்களது பிராமண வெறுப்பு பேச்சுக்களை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

    இதுபோன்ற செயல்களில் திமுகவினர் ஈடுபடக்கூடாது என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் அறிவுரைகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்தது
    • மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்கக் கூடாது என பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதினார்

    புதுடெல்லி:

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் வரும் 17-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கூறியிருந்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தமிழக அரசின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஆணைய தலைவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதற்கு தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்றும், இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும் என்றும், முதலமைச்சர் வலியுறுத்தியிருந்தார்.

    இந்நிலையில், நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×