search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டப்பிடாரம் அருகே ரூ.1.39 கோடியில் புதிய துணைமின் நிலையம்-முதல்-அமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார்
    X

    மேலலட்சுமிபுரம் கிராமத்தில் புதிய துணை மின் நிலையத்தில் சண்முகையா எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி வைத்த போது எடுத்தபடம்.

    ஓட்டப்பிடாரம் அருகே ரூ.1.39 கோடியில் புதிய துணைமின் நிலையம்-முதல்-அமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார்

    • மேலலட்சுமிபுரம் கிராமத்தில் ரூ. 1 கோடி 39 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் யூனியன் தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலலட்சுமிபுரம் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் ரூ. 1 கோடி 39 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

    சண்முகையா எம்.எல்.ஏ.

    இதனை தொடர்ந்து மேலலட்சுமிபுரம் புதிய துணை மின் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி துணை மின் நிலையத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒட்டப்பி டாரம் யூனியன் தலைவர் ரமேஷ், துணை தலைவர் காசிவிஸ்வநாதன், தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை பொறியாளர்கள் குருவம்மாள் (தூத்துக்குடி), பிரேமலதா (மதுரை)

    செயற்பொறியாளர்கள் கணேசன், சாமுவேல் சுந்தராஜ், ராம்குமார், உதவி செயற்பொறியாளர்கள் மாரிமுத்து, ஜெகதீசன், அருணாச்சலம் ராஜ்குமார், சுடலைமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் நவநீத கிருஷ்ணன், கனக ரத்தினம் சுகுமார், பஞ்சாயத்து தலைவர்கள் இளைய ராஜா, அருண்குமார், முத்து மகாலட்சுமி உட்பட மின்சார வாரிய உதவி பொறியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×