'இன்னாள் எம்.பி இளையராஜாவை முன்னாள் எம்.பி வாழ்த்துவது பாக்கியம்' - ராமராஜன் பெருமிதம்

இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.நடிகரும் முன்னாள் எம்.பியுமான ராமராஜன் நேரில் சென்று இளையராஜாவிடம் ஆசிபெற்றார்.
'இன்னாள் எம்.பி இளையராஜாவை முன்னாள் எம்.பி வாழ்த்துவது பாக்கியம்' - ராமராஜன் பெருமிதம்
Published on

அன்னக்கிளி படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது இசையின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இளையராஜா. இவரது பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் வாழ்க்கையில் பிணைந்திருக்கும் அளவிற்கு கால் ஊன்றியிருக்கிறது.

இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டி வருகிறார். இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவின் பிறந்தநாள் விழா இன்று கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தி இருந்தார்.

இந்நிலையில் இளையராஜாவின் இல்லத்திற்கு நடிகரும் முன்னாள் எம்.பியுமான ராமராஜன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து ஆசிபெற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமராஜன், ஒவ்வொரு பிறந்தநாளிலும் அண்ணன் இளையராஜாவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டிருக்கிறேன். அவருடைய ஆசிர்வாதம் என்றும் எனக்கு இருக்கும். உலகம் முழுவதும் மயங்கக்கூடிய அளவிற்கு சுவையான பாடல்களை கொடுத்திருக்கிறார்.

இன்று ராமராஜன் என்று மக்கள் பேசுகிறார்கள் என்றால் அதற்கு முழு காரணம் இளையராஜா அண்ணன் எனக்கு அளித்த பாடல்கள். 23 வாருடங்களுக்கு பிறகு மீண்டும் சாமானியன் படத்தின் மூலம் அவருடன் இணைந்திருக்கிறேன். அடுத்தடுத்த படங்களிலும் அவர் எனக்கு இசையமைப்பார். எல்லா படங்களுக்கும் அவர் நன்றாக இசையமைத்துள்ளார். ஆனால் என் படங்களுக்கு பெண்கள் விரும்பும் படி கிராமத்து சாயல் கொண்ட பாடல்களை கொடுத்தார். இன்னாள் எம்.பி அண்ணன் இளையராவை முன்னாள் எம்.பி. ராமராஜன் வாழ்த்துவது எனக்கு மிக பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.

தற்போது ராமராஜன் நடிப்பில் உருவாகி வரும் சாமானியன் படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com