search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery Water Management Authority"

    • தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
    • தண்ணீர் திறப்பது தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கைய கர்நாடக அரசு ஏற்கவில்லை.

    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் இந்த கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
    • தண்ணீர் திறப்பது தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கைய கர்நாடக அரசு ஏற்கவில்லை.

    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 22-வது கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் இந்த கோரிக்கைய கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இத்தகவலை தமிழக நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா கூறி உள்ளார். 

    • காவேரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு.
    • வரும் 23-ந் தேதி கூட்டத்தில் மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்படும்.

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியிருந்த கடிதத்தில், மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழக அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணைத் திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் தஞ்சை கல்லணை பகுதியில் உள்ள வெண்ணாறு, கொள்ளிடம் அணைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் இன்று நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்துள்ளதாவது:

    வரும் 23 ந் தேதி நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து நிச்சயம் விவாதிப்போம். மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவேரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது.

    காவேரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு. நாங்கள் எந்த மாநிலத்திற்கும் ஆதரவாக இல்லை. யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது. ஆகவே அணை விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்தது
    • மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்கக் கூடாது என பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதினார்

    புதுடெல்லி:

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் வரும் 17-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கூறியிருந்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தமிழக அரசின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஆணைய தலைவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதற்கு தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்றும், இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும் என்றும், முதலமைச்சர் வலியுறுத்தியிருந்தார்.

    இந்நிலையில், நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக அரசின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் முடிவு எடுத்திருக்கிறார்.
    • மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன

    டெல்லியில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் அறிவித்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தமிழக அரசின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஆணைய தலைவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதற்கு தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதி உள்ளார். அதில், காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்றும், இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும் என்றும், முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

    • வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் எவ்வாறு ஆணையம் விவாதிக்க முடியும்?
    • தடுக்காவிட்டால் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்க வாய்ப்புகள் உள்ளன.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கூறியிருக்கிறார். ஆணையத்திற்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதையும் மீறி மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்போவதாக ஆணையத் தலைவர் கூறுவது கண்டிக்கத்தக்கது.

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கடந்த 7-ஆம் தேதி செய்திகள் வெளியான போது, ஆணையத்தின் செயலுக்கு முதன்முதலில் கண்டனம் தெரிவித்தது பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். மேகதாது அணை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது; நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மேலாண்மை ஆணையம், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது என்ற நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக எவ்வாறு செயல்பட முடியும்? மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அந்த அணைக்கு அனுமதி அளிப்பது குறித்து எவ்வாறு ஆணையம் விவாதிக்க முடியும்? என்று வினா எழுப்பிய மருத்துவர் அய்யா, இது குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிட வலியுறுத்தினார். 


    அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ள பகுதி

    அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ள பகுதி

    தமிழ்நாடு அரசும் அதே காரணங்களின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ததுடன், வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கக்கூடாது என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு கடிதமும் எழுதியது. ஆனால், தமிழக அரசின் எதிர்ப்பை பொருட்படுத்தப் போவதில்லை என்றும், திட்டமிட்டபடி வரும் 17-ஆம் தேதி கூட்டத்தில் மேகதாது குறித்து கண்டிப்பாக விவாதிக்கப்படும் என்றும் ஆணையத் தலைவர் ஹல்தர் கூறியிருப்பது ஒருதலைபட்சமானது என்பது மட்டுமின்றி, மேகதாது அணைக்கு ஒப்புதல் அளிக்க காவிரி ஆணையம் துடிப்பதையே காட்டுகிறது.

    காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்படவில்லை. ஆணையத்தின் அதிகார வரம்புகளை குறிப்பிட்டு மத்திய அரசு வெளியிட்ட அரசாணை தான் ஆணையத்தின் அரசியலமைப்பு சட்டமாகும். அதன்படி தான் ஆணையம் செயல்பட வேண்டும். மாறாக, மேகதாது அணை குறித்து விவாதித்து முடிவெடுக்க ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு என்று மத்திய அரசு வழக்கறிஞர் சட்டக் கருத்து வழங்கியதால் மட்டுமே, அந்த அதிகாரம் வந்து விடாது. மத்திய அரசு வழக்கறிஞரின் சட்டக் கருத்து உச்சநீதிமன்றத்தில் செல்லாது.

    மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிப்பது இன்றைய நிலையில் அதி முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் இல்லை. ஆணையத்தின் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு அடுத்த சில நாட்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். அதன்பின்னர் இந்த விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், இந்த விஷயத்தில் ஆணையம் அவசரம் காட்டுவது ஏன்?

    காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக இப்போது இருக்கும் ஹல்தர், மத்திய நீர்வள ஆணையத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கான உறுப்பினராக இருந்தபோது தான் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை அனுப்பி வைத்தவரே அதை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கத் துடிப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. இதை தடுக்காவிட்டால், மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்க அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. அதனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு இன்னும் விரைவாக செயல்பட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படவில்லை. உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை கால அமர்வு நாளை கூடுகிறது. அந்த அமர்வின் முன் தமிழக அரசு வழக்கறிஞர் நேர் நின்று வழக்கை உடனடியாக விசாரிக்கும்படி முறையிட்டு தடை பெற வேண்டும். அதுமட்டுமின்றி, மேகதாது விஷயத்தில் ஒரு சார்பாக செயல்படும் ஆணையத் தலைவரை நீக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், தலைவர் மசூத் உசேன் தலைமையில் தொடங்கியது. இதில், 4 மாநில பிரதிநிதிகளும் பங்கேற்றனர். #Cauveryissue #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    பல ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி விவகாரத்தில் இப்போது சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட தீவிர சட்டப் போராட்டத்தின் காரணமாக சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன.



    காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், அதன் தலைவரான மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் இன்று தொடங்கியது.

    மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசின் சார்பில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் பங்கேற்று தமிழக அரசின் கருத்துக்களை முன்வைத்து, நீர் திறப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தார். இதேபோல் புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடக மாநில பிரதிநிதிகளும் பங்கேற்று தங்கள் தரப்பு கருத்துக்களை முன்வைத்தனர்.

    இந்த கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக, ஆணையத்தின் விதிகள், செயல்பாட்டு முறைகள், கூட்டங்களுக்கான நடைமுறைகள் போன்றவை பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. #Cauveryissue #CauveryManagementAuthority
    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைக்கப்படும் அமைப்பிற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CauveryIussue #CauveryDraftScheme #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்தது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டடது.

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்திருந்தது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றிருந்தது.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்கியது.  குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற விதியை மாற்ற வேண்டும், காவிரி குழுவிற்கான முடிவுகளை மத்திய அரசே எடுக்க முடியாது, குழு தனது முடிவுகளை செயல்படுத்த மத்திய அரசின் உதவியை கோரலாம் என கூறிய நீதிமன்றம், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

    அதன்படி இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என பெயரிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.



    அதேசமயம், கர்நாடக அரசு தரப்பில் இன்று 2 பக்க அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை என்றும், மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயல்பாட்டில் தலையிடுவதாக உள்ளது என்றும் கூறியுள்ளது.

    இதையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டுள்ளதா என ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. #CauveryIussue #CauveryDraftScheme #CauveryManagementAuthority
    ×