என் மலர்
இந்தியா

தமிழ்நாட்டிற்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு
- தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீர் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
- தமிழ்நாட்டிற்கு 40 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடைபெற்றது.
மேலாண்மை ஆணைய தலைவர் ஹால்தர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக அதிகாரிகாள், கர்நாடகா மாநில அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீர் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 40 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் மாதம் திறக்க வேண்டிய 9.19 டிஎம்சி, ஜூலை மாதத்திற்கான 31.24 டிஎம்சி நீரையும் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Next Story






