காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு வெளிநடப்பு

தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.தண்ணீர் திறப்பது தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கைய கர்நாடக அரசு ஏற்கவில்லை.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு வெளிநடப்பு
Published on

புதுடெல்லி:

காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 22-வது கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் இந்த கோரிக்கைய கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இத்தகவலை தமிழக நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா கூறி உள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com