என் மலர்
நீங்கள் தேடியது "காவிரி நீர் மேலாண்மை ஆணையம்"
- தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீர் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
- தமிழ்நாட்டிற்கு 40 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடைபெற்றது.
மேலாண்மை ஆணைய தலைவர் ஹால்தர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக அதிகாரிகாள், கர்நாடகா மாநில அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீர் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 40 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் மாதம் திறக்க வேண்டிய 9.19 டிஎம்சி, ஜூலை மாதத்திற்கான 31.24 டிஎம்சி நீரையும் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீர் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
- காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டின் தலைநகர் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியுள்ளது.
மேலாண்மை ஆணைய தலைவர் ஹால்தர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக அதிகாரிகாள், கர்நாடகா மாநில அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீர் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீர் இருப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து தர வேண்டிய நீர் விவகாரம், நீர்த்திறப்பு தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
- மார்ச் முதல் மே மாதம் வரை மூன்று மாதங்களுக்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவு.
- மார்ச் முதல் மே மாதம் வரை மாதம் ஒன்றிற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவு.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 38-ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது. காவிரி ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மாநில அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீர் இருப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து தர வேண்டிய நீர் விவகாரம், நீர்த்திறப்பு தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் முதல் மே மாதம் வரை மூன்று மாதங்களுக்கு, மாதம் ஒன்றிற்கு 2.5 டி.எம்.சி. என்ற வகையில் 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டடது.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்திருந்தது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற விதியை மாற்ற வேண்டும், காவிரி குழுவிற்கான முடிவுகளை மத்திய அரசே எடுக்க முடியாது, குழு தனது முடிவுகளை செயல்படுத்த மத்திய அரசின் உதவியை கோரலாம் என கூறிய நீதிமன்றம், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
அதன்படி இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என பெயரிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டுள்ளதா என ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. #CauveryIussue #CauveryDraftScheme #CauveryManagementAuthority






