என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது
- தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீர் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
- காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டின் தலைநகர் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியுள்ளது.
மேலாண்மை ஆணைய தலைவர் ஹால்தர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக அதிகாரிகாள், கர்நாடகா மாநில அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீர் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீர் இருப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து தர வேண்டிய நீர் விவகாரம், நீர்த்திறப்பு தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
Next Story






